PDA

View Full Version : பட்டாம்பூச்சி தொலைத்தவன்.



ப்ரியன்
03-05-2008, 03:13 AM
எப்போதாவது
வந்தமரும் குருவிக்கு
காத்திருக்கும் ஒற்றை பனையாகிறேன்;
உனக்காக காத்திருக்கையில்!

*

மேளத்தின் அதிர்வெட்டுகிறது
இதயம்;
தலைகுனிந்து கடந்த நீ
திரும்பி பார்த்து வெட்கி குனியும்
நொடிப் பொழுதில்!

*

பட்டாம்பூச்சி துரத்திய
குழந்தையின் குதூகலத்துடன்
விடிகிறது;
கனவில் உனைக் கண்ட
என் இரவு!

*

முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!

*

நீ வர தாமதமாகும்
ஒவ்வொரு நிமிடமும்
அனுபவிக்கத் தருகிறது:
பட்டாம்பூச்சி தொலைத்த
குழந்தையின் அவஸ்தையை!

*

உன் உதடும்
என் உதடும்
சங்கமிக்கும் பொழுதில்
யாருடையது முதல்முத்தம்?

*

நீ
நீருள் இறங்கினாய்;
அழகால் நிரம்பியது
குளம்!

*

- ப்ரியன்.

நாகரா
03-05-2008, 03:37 AM
உம் கவிதை
என் விழிகளில் இறங்கியது
பரவசத்தால் நிரம்பியது
இருதயம்

கவிதை அருமை, வாழ்த்துக்கள் ப்ரியன்

பிச்சி
04-05-2008, 07:13 AM
வாவ்... சூப்பர்....... காதலைப் பிசைந்து கொடுத்திருக்கீங்க................ வெல்டன்

ஷீ-நிசி
05-05-2008, 05:55 AM
குறுங்கவிகள் ஒவ்வொன்றும் அழகு

பூமகள்
05-05-2008, 06:18 AM
மிக அழகான வார்த்தையாடல்கள்..!!
காதல் ததும்பி நிற்கிறது..!!

குட்டி குட்டி கவிகளில் எங்கள் மனம்
சுட்டுவிட்டீர்கள்..!!

வாழ்த்துகள் சகோதரர் ப்ரியன். :)

சூரியன்
05-05-2008, 06:58 AM
அழகான வரிகள்.

kavitha
06-05-2008, 10:37 AM
மீண்டும் உங்கள் கவிதைகள் வாசிக்க மனம் மகிழ்கிறது ப்ரியன். தொடர்க!

ஆதவா
19-06-2008, 10:00 AM
ஒவ்வொரு கவிதையும் உதட்டுக்குள் நுழைந்து வெளியேறுகிறது...

அனைத்தும் வேடந்தாங்கல் சுற்றுலாப் பறவைகள்..

வாழ்த்துகள் ப்ரியன்.