PDA

View Full Version : காணாமல் போன அரிசி மூடை..!!



ஓவியன்
02-05-2008, 04:02 PM
வழமையாய் விடிந்தது இன்று ஒரு வெள்ளிக் கிழமையாக, அலுவலக ஓய்வு நாளென்பதால் உடலில் கொஞ்சம் சோர்வையும் மனதில் நிறைய சந்தோசத்தையும் வைத்துக் கொண்டு துயிலெழுந்த என்னை 'ஓவி, காய்கறிகளும் உணவுப் பொருட்களும் முடிவடைந்து விட்டன - முக்கியமாக அரிசி...' என்ற மனைவியின் வார்த்தைகள் துரித கதியாக்கின. வேக, வேகமாக காலைக் கடன், உணவு, தேனீர் கடந்து பின்னர் வீதி கடந்து ஒரு ஹைப்பர் மார்கெட்டினுள்ளே நுளைந்தேன்.

வீட்டுக்கு மனைவி வாங்கி வருமாறு கூறிய பொருட்களை ஞாபகமூட்டிக் கொண்டு ஒவ்வொரு பகுதிகளாகச் சென்று தேவையான பொருட்களை அங்கிருந்த ஒரு சக்கரம் பூட்டிய பொருள் கொள்வனவு செய்யும் கூடையில் வைத்தேன். வெள்ளிக் கிழமையாதலால் ஹைப்பர் மார்கெட்டில் சனநெரிசல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தமையால் பொருள் கொள்வனவு கூடையை எல்லா இடங்களிலும் உருட்டிச் செல்ல முடியவில்லை. சில இடங்களிலே நிறுத்தி விட்டு நான் மட்டும் ஓடி, ஓடி உள்ளே சென்று தேவையான பொருட்களாக கொண்டு வந்து கூடையை நிரப்பினேன்.

நாம் விரும்பிச் சமைக்கும் சிவப்பு புழுங்கல் அரிசி ஐந்து கிலோ மூடைகளாக இருக்க, அவற்றில் ஒன்றை எடுத்துக் கூடையில் வைத்து விட்டு காய்கறிப் பகுதிக்குச் சென்று தேவையான காய்கறிகளையும் பின்னர் மீன்கள் விற்கும் பகுதிக்குச் சென்று எனக்கு பிடித்த மீன் இனத்தில் இரண்டு மீன்களாகவும் (:)) வாங்கிக் கொண்டு வீடு திரும்ப ஆயத்தமாகி காசாளர் பகுதியை நோக்கி கூடையைத் தள்ளிக் கொண்டு நகர்ந்தேன். :icon_b:

மொத்தமாக பத்து காசாளர்கள் இருந்தும் வெள்ளிக் கிழமை காலையென்பதனால் பத்து இடங்களிலும் கூட்டமாக நிரம்பி வழிந்தது. சரி கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியதுதானென நீண்ட வரிசை ஒன்றில் என்னை இணைத்துக் கொண்டு அணு, அணுவாய் வரிசையில் நகர என் பொறுமை அலை, அலையாய் என்னை விட்டுக் கடந்து கொண்டிருந்தது. எனக்கு முன்னராக நின்ற ஒரு வட இந்தியர் அந்த ஓமானியக் காசாளருடன் ஏதோ தர்க்கத்திலீடு பட என் பொறுமை என்னை விட்டுக் கிட்டத்தட்ட அகன்று ஒரு நூலிழையாய் என்னோடு ஒட்டிக் கொண்டிருந்தது.

ஒரு வாறாக என் முறை வந்ததும் வேக, வேகமாய் கூடையை காசாளரை நோக்கி உருட்டிச் சென்று நான் கொள்வனவு செய்த பொருட்களை ஒவ்வொன்றாக காசாளரின் மேசையில் வைத்த போதுதான்....

அந்த 'இல்லாமை' என் இயலாமையாய் வெளிப்பட்டது...

ஆமாங்க, அங்கே நான் ஆசையாக சேகரித்து கூடையிலிட்ட அந்த அரிசி மூடையைக் காணவில்லை.....

நான் அந்தக் கூடையை விட்டு விட்டு மரக்கறி, மீன் வாங்க வேறுபகுதி சென்ற போது யாரோ அந்த அரிசி மூடையைச் சுட்டுட்டாங்க :sauer028:....

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!!! :traurig001:

மீண்டும் இன்னொரு அரிசி மூடையை கொள்வனவு செய்து....

மீண்டும் நீள........... வரிசையில் நகர்ந்து...

ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..........!!! :traurig001:

ஒரே அழுகாச்சி தான் போங்க....!!!

பாரதி
02-05-2008, 05:01 PM
ஆஹா...! ஓவியன்... தலைப்பில் காணாமல் போன அரிசி மூட்டை என்று சொல்லி விட்டு, "சுட்டுட்டாங்க" என்றும் கூறி இருக்கிறீர்களே.. :( ம்ம்.. நடக்கட்டும்... எப்படியோ இன்றைக்கு உணவு வீட்டில் தயார் செய்தீர்களா இல்லையா..! :(

எந்த ஹைப்பர் மார்க்கெட்... லூலுவா?

ஓவியன்
02-05-2008, 05:16 PM
எந்த ஹைப்பர் மார்க்கெட்... லூலுவா?

அதே, அதே.......!! :)

ஒருவாறாக இன்றும் சோறு சமைத்தோம்.....!! :icon_b:

பூமகள்
02-05-2008, 05:20 PM
அண்ணாவ்...!! அழுவாதீங்க.. ஏன்னா எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருது..!! :traurig001::traurig001:
எனக்கு ஏன் எடுத்தாங்கன்னு புரிஞ்சிட்டது??!!:icon_b:

பொதுவா ஆளு குண்டா இருந்தா தான் நம்ம ஊரு பக்கம், " எந்த கடையில் அரிசி வாங்குறீங்க"-ன்னு கேட்பாங்க..:rolleyes:

ஆனால், நீங்க நிச்சயம் குண்டாகியிருக்க வாய்ப்பில்லை.. ஆனால், கச்சிதமா இருந்திருப்பீங்க..:p:cool: (என்ர அண்ணன் ஆச்சே...! ;) :D:D) அதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ஏதோ ஒரு குண்டு ஆசாமி தான் அரிசி மூட்டையை சுட்டிருக்கனும் ஓவி அண்ணா.. :icon_rollout:

ஆனாலும், பொறுமையில் எல்லை கடந்து ஒரு முறை மட்டுமல்ல.. இரு முறை அமைதி காத்த என் ஓவியன் அண்ணாவுக்கு, "சிறந்த பொறுமைசாலி" என்ற பட்டத்தை வழங்குகிறேன்..!!:icon_b::icon_b:

ஏங்க அண்ணா, முதல் முறை வரிசையில் நிற்கையிலேயே, பொருட்களை சரிபார்த்திருக்கலாம் இல்ல??!!:icon_ush::aetsch013: அஞ்சு கிலோ அரிசி மூட்டை இல்லாததுமா தெரியாம நின்னுட்டு இருந்தீங்க??!!:icon_p::icon_p: அப்போ எங்கே பராக்கு பார்த்துட்டு இருந்தீங்க??!! :lachen001::lachen001: :D:D(அண்ணி, உங்களுக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுத்துட்டேன்...:rolleyes: இன்னிக்கி ஓவியண்ணா வீட்டில்.. ப்ரூஸ்லீ படம் தான்..!! :D:D)

அன்புரசிகன்
02-05-2008, 05:22 PM
இன்னமும் இந்த தொலைக்கும் படலம் விட்டுப்போகலியோ???? ரொம்பத்தான் நொந்துபோயிருப்பேள்............... :D :D :D

அன்புரசிகன்
02-05-2008, 05:24 PM
ஆனால், நீங்க நிச்சயம் குண்டாகியிருக்க வாய்ப்பில்லை.. ஆனால், கச்சிதமா இருந்திருப்பீங்க..:p:cool: (என்ர அண்ணன் ஆச்சே...! ;) :D:D) அதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட
இதை படிக்க படிக்க எனக்கு அழுகை அழுகையா வருது... :traurig001: :traurig001: :traurig001:




ஏங்க அண்ணா, முதல் முறை வரிசையில் நிற்கையிலேயே, பொருட்களை சரிபார்த்திருக்கலாம் இல்ல??!!:icon_ush::aetsch013: அஞ்சு கிலோ அரிசி மூட்டை இல்லாததுமா தெரியாம நின்னுட்டு இருந்தீங்க??!!:icon_p::icon_p: அப்போ எங்கே பராக்கு பார்த்துட்டு இருந்தீங்க??!! :lachen001::lachen001: :D:D(அண்ணி, உங்களுக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுத்துட்டேன்...:rolleyes: இன்னிக்கி ஓவியண்ணா வீட்டில்.. ப்ரூஸ்லீ படம் தான்..!! :D:D)

உங்களுக்கு ப்ரூஸிலி ஐ தெரியாதா??? :rolleyes:

பூமகள்
02-05-2008, 05:35 PM
இதை படிக்க படிக்க எனக்கு அழுகை அழுகையா வருது... :traurig001: :traurig001: :traurig001:
எனக்கும் அழுவாச்சி அழுவாச்சியா வருதுனா..!!:medium-smiley-100::medium-smiley-100:
ஆனா பாருங்க..அழுதாவெல்லாம் உடம்பு குறையாதாம்..!! சாப்பிடுவதை குறைக்கனுமாம்..!! :sport-smiley-018::sport-smiley-018:

உங்களுக்கு ப்ரூஸிலி ஐ தெரியாதா??? :rolleyes:
தெரியுமே..:rolleyes: நல்லா தெரியுமே..:icon_b: நான் சொன்னது.. ஓவியண்ணா வீட்டில் இருக்கும் பெண் ப்ரூஸ்லியைப் பற்றித் தான்..!! :sport-smiley-008::sport-smiley-005::sport-smiley-013::sport-smiley-003:

அன்புரசிகன்
02-05-2008, 05:41 PM
ஆனா பாருங்க..அழுதாவெல்லாம் உடம்பு குறையாதாம்..!! சாப்பிடுவதை குறைக்கனுமாம்..!! :sport-smiley-018::sport-smiley-018:

நான் அதைப்பற்றி பேசவில்லையே............ :lachen001:


தெரியுமே..:rolleyes: நல்லா தெரியுமே..:icon_b: நான் சொன்னது.. ஓவியண்ணா வீட்டில் இருக்கும் பெண் ப்ரூஸ்லியைப் பற்றித் தான்..!! :sport-smiley-008::sport-smiley-005::sport-smiley-013::sport-smiley-003:
மன்னிக்கவும். கருத்து தெரிவிக்க விரும்பவில்லை... :D

மதி
02-05-2008, 05:53 PM
'ஓவி, காய்கறிகளும் உணவுப் பொருட்களும் முடிவடைந்து விட்டன - முக்கியமாக அரிசி...' என்ற மனைவியின் வார்த்தைகள் துரித கதியாக்கின.

கல்யாண கஷ்டங்களா....?! :D:D:D:D

ஒன்று மட்டும் புரிந்தது.. கல்யாணம் மனிதனை மிகவும் பொறுமைசாலியாக்கிவிடுகிறது...

தங்கள் இல்லறம் நல்லறமாகட்டும்.

பூமகள்
02-05-2008, 05:53 PM
நான் அதைப்பற்றி பேசவில்லையே............ :lachen001:

சைலண்டா ஜகா வாங்கிட்டீங்க..:rolleyes: கிரேட் எஸ்கேப்..!! :lachen001::lachen001:

மன்னிக்கவும். கருத்து தெரிவிக்க விரும்பவில்லை... :D
ஆங்...:pஅந்த பயம் இருக்கட்டும்...!!:p:cool::lachen001::lachen001:(ஓவியண்ணா வருவதற்குள் பூ எஸ்கேப்..!! :eek::eek: :icon_ush::icon_ush: :D:D)

ஓவியன்
03-05-2008, 04:49 AM
அதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட ஏதோ ஒரு குண்டு ஆசாமி தான் அரிசி மூட்டையை சுட்டிருக்கனும் ஓவி அண்ணா.. :icon_rollout:

அன்பு, மலர் இவங்க இரண்டு பேரில ஒருத்தர் ஓமானுக்கு வந்திட்டாங்க என்று சொல்லுறீங்க.....!! :D:D:D

அனுராகவன்
03-05-2008, 04:55 AM
நன்றி ஓவியன் அவர்களே!!
அரிசி இன்றைக்கு வேணுமே!!
என்ன செய்ய ஹைபர் மார்கெட் போகனும்..
ஏன்யென்றால் தமிழகத்திலுருந்து அரிசியே வரலையே!!
இங்க செம கிராக்கி!!

ஓவியன்
03-05-2008, 05:05 AM
நொந்துபோயிருப்பேள்............... :D :D :D

அது வழமைதானே...!! :D

ஓவியன்
03-05-2008, 02:51 PM
கல்யாண கஷ்டங்களா....?! :D:D:D:D

கஸ்டமா, யாரோ உங்க மனசை பொய்கள் சொல்லிக் கெடுத்து வைச்சிருக்காங்க மதி...!!

துணிந்து களத்தில் குதியுங்க, நீங்களும் ஜமாய்க்கலாம்...!! :D


தங்கள் இல்லறம் நல்லறமாகட்டும்.

மிக்க நன்றி மதி..!! :)

அமரன்
03-05-2008, 02:56 PM
தங்கச்சி பக்கத்தில இல்லங்கறதால, இப்படியா கவனத்தை சிதறவிடுவது:D.

அரிசியை எறும்பு மாதிரி சேர்ந்து,
வரிசையில் மெல்ல மெல்லமாக ஊர்ந்து
கடை'சீல மூடையை தவறவிட்டு
சாப்பாட்டுக்கு முடையாகி
அலைச்சிருப்பீர்ன்னு நினைச்சு படிச்சேன்..
இப்படி ஏமாத்தி விட்டீரே!!:confused:

ஓவியன்
04-05-2008, 02:07 AM
அரிசியை எறும்பு மாதிரி சேர்ந்து,
வரிசையில் மெல்ல மெல்லமாக ஊர்ந்து
கடை'சீல மூடையை தவறவிட்டு
சாப்பாட்டுக்கு முடையாகி
அலைச்சிருப்பீர்ன்னு நினைச்சு படிச்சேன்..
இப்படி ஏமாத்தி விட்டீரே!!:confused:

ஏம்பா இப்படி ஒரு கொலை வெறி.......??? :eek:

aren
04-05-2008, 02:47 AM
வாவ்!!!

இதைப் படித்தவுடன் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா. நான் வாங்கிய வெண்டைக்காயைப் பற்றி கேலி செய்த ஓவியனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது.

வரிசையில் நின்று, ஒவ்வொரு பகுதியாக சென்று தேவைப்பட்டதை எடுத்து வீட்டிற்குச் சென்றால், நான் சொன்ன மிளகாய்ப்பொடி வாங்கவில்லையா என்று மனனவி கத்தியவுடன் மறுபடியும் கடைக்கு ஓடி வரிசையில் நின்று - எல்லாம் நடக்கப்போகிறது ஓவியன். பாருங்கள். இதுக்குத்தான் முதலிலேயே கொஞ்சம் யோசித்து முடிவு செய்யுங்கள் என்று சொன்னோம். விதி யாரை விட்டது. ஹீம்!!!!

சூரியன்
04-05-2008, 01:34 PM
என்ன கொடுமை ஓவியன் அண்ணா.:frown:

அந்த அரிசி முட்டய எடுத்தது யாருனு சொல்லுங்க அப்பறம் பாருங்க என்ன நடக்குதுனு.:mini023:

செல்வா
04-05-2008, 01:41 PM
இதபடிக்கும் போது மனசுக்கு எவ்ளோ... சந்தோசமா இருக்கு தெரியுமா....? :D:D:D:D:D:D:D

Keelai Naadaan
04-05-2008, 05:48 PM
படிக்க ரொம்ப ருசிகரமா இருந்தது. அதைவிட எல்லோருடைய அரட்டையும் படிச்சதில 5 கிலோ அரிசியையும் சமைச்சு சாப்ட்ட மாதிரி இருந்தது.
அனைவருக்கும் நன்றி

ஓவியன்
05-05-2008, 01:57 AM
வாவ்!!!

இதைப் படித்தவுடன் எனக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறது தெரியுமா. நான் வாங்கிய வெண்டைக்காயைப் பற்றி கேலி செய்த ஓவியனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் தண்டனை கிடைக்கும் என்று எனக்குத் தெரியாது!!!!

அதுக்குத் தண்டனையாக சிங்கையில் லிட்டில் இண்டியாவிலேயே நான் வெண்டைக்காய் வாங்கிட்டேனே...

அதுக்குப் பின்னரும் இப்படியா......??? :traurig001:

ஓவியன்
05-05-2008, 01:59 AM
அந்த அரிசி முட்டய எடுத்தது யாருனு சொல்லுங்க அப்பறம் பாருங்க என்ன நடக்குதுனு.:mini023:

ஆமா, என்ன நடக்கும்.....??? :mini023::mini023::mini023:

ஓவியன்
05-05-2008, 02:06 AM
இதபடிக்கும் போது மனசுக்கு எவ்ளோ... சந்தோசமா இருக்கு தெரியுமா....? :D:D:D:D:D:D:D
அடடா, அப்படியானால் இன்னும் ஒரு மூடை அரிசியை வாங்கி வைத்துத் தொலைத்திருப்பேனே...!! :)

5 கிலோ அரிசியையும் சமைச்சு சாப்ட்ட மாதிரி இருந்தது.
அனைவருக்கும் நன்றி
மிக்க நன்றி கீழை நாடன், தொடர்ந்து இணைந்திருங்க...!! :)

அன்புரசிகன்
05-05-2008, 02:16 AM
அடடா, அப்படியானால் இன்னும் ஒரு மூடை அரிசியை வாங்கி வைத்துத் தொலைத்திருப்பேனே...!! :)


அதையுமா???? ஏம்பா.... தொலைக்கிறதே ஒங்க வேலையா போச்சா???? :eek:

ஓவியன்
05-05-2008, 04:06 AM
அதையுமா???? ஏம்பா.... தொலைக்கிறதே ஒங்க வேலையா போச்சா???? :eek:

இல்லை, தொலையாம இருக்கணுமெங்கிறதைத் தொலைத்திட்டேன்...!! :rolleyes:

விகடன்
05-05-2008, 04:47 AM
வரிசையில் மீண்டுமா?
பாவமடாப்பா.... அதுவும் வெள்ளிக்கிழமை, அலுப்புடன் சந்தோசமாக இருந்த உனக்கு இப்படி நடந்தது....... பாவந்தான்.

இருந்தாலும்,
அரிசிமூடையை ஒருவர் சுட்டுவிட்டார் என்பதுதான் ஓவராக தெரிகிறது. துருவி வைத்த தேங்காய்ப்பூ என்று சொன்னாலும் பரவாயில்லை, அல்லது அழகாக அளவான துண்டுகளாக வெட்டிவைத்த மீன் என்று கூட சொன்னாலும் பரவாயில்லை. அவற்றை இன்னொருவர் உங்களுடைய தரத்திற்கு (கழுவி வெட்டி) எடுப்பதற்கு நீண்ட நேரமெடுக்கலாம். ஆனால் அரிசி மூடை. அதுவும் இருப்பில் இல்லாமலிருந்தாலும் பரவாயில்லை.


ஓவியன் சொல்வதை எல்லாம் நம்புகின்றனர் என்பதற்காக இப்படியா???? :)

சூரியன்
05-05-2008, 04:55 AM
ஆமா, என்ன நடக்கும்.....??? :mini023::mini023::mini023:

ஓவியா அக்காகிட்ட சொல்லி அவன தூக்க ஆட்டோ அனுப்புவேன்.:auto003::auto003:

சூரியன்
05-05-2008, 04:57 AM
ஓவியன் சொல்வதை எல்லாம் நம்புகின்றனர் என்பதற்காக இப்படியா???? :)

நல்லா சொல்லுங்க.:lachen001:

ஷீ-நிசி
05-05-2008, 06:30 AM
ஹா ஹா.. உங்க கஷ்டம் நல்லாவே புரிஞ்சிக்க முடியுது,,

இதுல பாருங்க... நாம் நிக்கிற லைன் மட்டும் நகரவே நகராது. மத்த ரெண்டு பக்கமும் போயிட்டே இருப்பாங்க....

சூரியன்
05-05-2008, 06:39 AM
ஹா ஹா.. உங்க கஷ்டம் நல்லாவே புரிஞ்சிக்க முடியுது,,

இதுல பாருங்க... நாம் நிக்கிற லைன் மட்டும் நகரவே நகராது. மத்த ரெண்டு பக்கமும் போயிட்டே இருப்பாங்க....


அனுபவம் பேசுது போல.:lachen001:

logini
05-05-2008, 06:49 AM
அண்ணா உங்களுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஏதோ ஒன்று இருக்கு. பார்த்து நடந்துக்குங்க.

ஓவியன்
05-05-2008, 08:52 AM
அண்ணா உங்களுக்கும் வெள்ளிக்கிழமைக்கும் ஏதோ ஒன்று இருக்கு. பார்த்து நடந்துக்குங்க.

அடடா, எனது வெள்ளிக் கிழமை விடியல் சம்பவங்களை வைத்துக் கூறுகிறீர்களென நினைக்கின்றேன் - நன்றி லோஜினி கவனத்திற் கொள்கிறேன்.

மனோஜ்
05-05-2008, 09:07 AM
ஓவியன் வீட்டு காரியங்கள் ஆமோகமா நடக்குது
வாழ்த்துக்கள் சகோதரியை கடைகளுக்கு அழைத்து செல்வதில்லையா ?
எனிவே வாழ்த்துக்கள் இனியாவது கவனமாக இருங்கள்

ஓவியன்
05-05-2008, 03:19 PM
.ஓவியன் சொல்வதை எல்லாம் நம்புகின்றனர் என்பதற்காக இப்படியா???? :)
ஏன் நல்லாத் தானே போயிட்டிருக்கு,
ஏன்......???

ஏன், இந்த வில்லத்தனம்...??? :frown:

ஹா ஹா.. உங்க கஷ்டம் நல்லாவே புரிஞ்சிக்க முடியுது....
ஆமா, நீங்க என் இனமாச்சே....!! :):D

எனிவே வாழ்த்துக்கள் இனியாவது கவனமாக இருங்கள்
மிக்க நன்றி மனோஜ்..!! :)

MURALINITHISH
06-05-2008, 07:42 AM
ஐயோ ஐயோ
அரிசி மூட்டை கான போனது கூட தெரியமா அப்படி என்ன பார்த்திட்டு இருந்தீங்க
இதுக்குதான் நான் கடைக்கே போறதே இல்லை
நீங்களாவது அங்கேயே பார்ர்த்திட்டீங்க
நான் வீட்டுக்கு வந்து திட்டு விழும் போதுதான் பார்ப்பேன்

ஓவியன்
06-05-2008, 07:58 AM
ஐயோ ஐயோ
அரிசி மூட்டை கான போனது கூட தெரியமா அப்படி என்ன பார்த்திட்டு இருந்தீங்க

ஆமா, எல்லோருமா சேர்ந்து ஒரு முடிவு கட்டிட்டீங்க போலிருக்கே...?? :traurig001:

அனுராகவன்
06-05-2008, 08:39 AM
அரிசி இப்ப விலை ஏரிப்போச்சு..
இங்க 5.50 வெள்ளி இருந்த்து மூன்று வாரத்திற்கு முன்னாடி,இப்ப 14.50 வெள்ளி விக்குது..
என்ன செய்ய நாங்க எல்லோரும் சப்பாத்தி,பூரி மாறியாச்சு..
ஆனால் இப்ப அரிசியே தமிழ்நாட்டிலிருந்து என்னைக்கு வரும் ,என்னைக்கு எங்கள் விலைவாசி குறையும்...
போதுவாக மாதத்திற்கு ஒரு ஆள் சாப்பிடும் பணத்தை ஒரு குடும்பமே ஊரிலே காலங்கள் ஓடும்..
இன்று சாப்பாடு பத்தாமல் கூட வேலை செய்ய கஸ்டபடுகின்றனர் பெறும் அரிசி நம்பி வாழும் தமிழ் மக்கள்..

தங்கவேல்
08-05-2008, 03:34 AM
ஓவி, அந்த சிகப்பு அரிசி... டேஸ்டா இருக்குமில்லே..

ஓவியன்
08-05-2008, 03:57 AM
ஓவி, அந்த சிகப்பு அரிசி... டேஸ்டா இருக்குமில்லே..

உண்மைதான் அண்ணா, அந்த அரிசி என் குடும்பத்தினர் எல்லோருக்கும் நன்றாகப் பிடிக்கும்....!! :)

அதற்கு இணையாக எந்த அரிசியையும் என்னால் ஒப்பிட முடியாது....!! :)