PDA

View Full Version : மே தினம்



Mano.G.
30-04-2008, 09:29 AM
உலகம் உருள,
உலகத்தில் உள்ளோர் உலவ,
உழைப்போர் உழைக்க,

ஒரு சாண் வயற்றுக்கா,
நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த,
தன் நலம் கருதி,
தன் குடும்பத்தோர் நலம் கருதி,
தன்னையே அர்ப்பணம் செய்யும் மனிதா,

உழைப்பாளியான உன்னை,
உன் உழைப்பை அங்கீகரிக்க,
வந்த நாளே மே தினம்.,


அன்பு மனோ.ஜி

அனுராகவன்
30-04-2008, 10:06 AM
மேதினத்தை ஓட்டி எழுந்த கவி..
என் நன்றி நண்பரே!!

பாலகன்
30-04-2008, 10:23 AM
மனோ அருமையான கவிதை, வாழ்த்துக்கள்,

மேதினம் உழைப்பவர் சீதனம்

அன்புடன்
பில்லா

மனோஜ்
30-04-2008, 02:21 PM
உழைப்பை வெறுத்தால் உண்டா வாழ்வு

என்று உழைப்பை உயர்வாக்கும் கவிதைக்கு நன்றி அண்ணா

நேசம்
30-04-2008, 02:28 PM
மே தினத்தில் உழைப்பாளரின் சிறப்பை கூறும் கவிக்கு வாழ்த்துகள் அண்ணா