PDA

View Full Version : வரம் வேண்டி...



rambal
12-07-2003, 04:27 PM
வரம் வேண்டி...

எனக்கான உலகமும்
எனக்கான வேண்டுதல்களும்
சிறியது..

முரட்டு எஜமானனின்
அடிமைச்சங்கிலியில்
அடக்கமாய் வாழ..

சுவற்றில் எரிந்த பந்தாய்
இல்லாது
சமூகவியல் மிருகமாக..

இட்ட கட்டளையை
செவ்வனே செய்து முடிக்கும்
இயந்திரமாய்..

இவைகளுக்கு..
உணர்ச்சிகளை மரத்துப் போக வைக்க..
அதீதமாய் சிந்திக்கும் மூளையை அடக்கிவைக்க..
இரும்பாலான ஒரு மனதை முடிந்தால் கொடு..

இல்லையெனில்,
வாழ்க்கை முழுதும் போராளியாய்
வாழ்க்கை தேடி ஓடிக்கொண்டிருப்பேன்..

poo
12-07-2003, 04:54 PM
ஓடிக்கொண்டேயிருக்கக் கடவது...

வரம் கொடுக்கப்பட்டுவிட்டது...

ராம் பாராட்டுக்கள். உன் சிந்தனையிலிருந்து விழுந்த விதைகளில் இதுவும் சிறந்ததே!!!

இ.இசாக்
12-07-2003, 05:05 PM
வாழ்தலின் சுகம் போராடிப் பெறலே.
போராட்டம் உயிர்களின் இயங்கியல் சார்ந்தது.
நீங்கள் போராட அணியமாயிருக்கிறீர்கள்
ஆக வாழ தகுதியானவர்.
வாழ்த்துக்கள் போராளியே!

இளசு
12-07-2003, 05:34 PM
சிந்தனை வெப்பம்...
தெறித்த கவிதை...

பாராட்டுகள் ராம்...

suma
12-07-2003, 10:27 PM
பாராட்டுகள் நண்பனே

rambal
13-07-2003, 06:12 PM
நன்றி.. பாராட்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்...

lavanya
14-07-2003, 06:55 AM
இயல்பான மன நிலையை படம் பிடித்தமைக்கு மன்னிக்க வரி வடிவமைத்தமைக்கு பாராட்டுக்கள் ராம்

karikaalan
15-07-2003, 02:03 PM
இரண்டுமே வேண்டும் -- இரும்பின் உறுதி வேண்டும்; பட்டின் நெளிவு வேண்டும். அப்போதுதான் வாழ்க்கை சிறப்பிக்கும்.

===கரிகாலன்