PDA

View Full Version : இதுதான் இந்தியா..



rambal
04-04-2003, 01:41 PM
'பள்ளி மாணவி
கற்பழித்துக் கொலை'
தலைப்புச் செய்தி கண்டு
அதற்கு மேல் படிக்கச் சகிக்காமல்
செய்தித்தாள் மூடும்..

வீட்டை விட்டு வெளி வந்து
'அம்மா தாயே'
குரலை அலட்சியம் செய்து
வண்டி ஏறிப் புறப்படும்..

சிகப்பு விளக்கு கண்டு
நிற்கையில்
பின் வந்த வாகனம்
என்னை தேச குற்றம் செய்து
விட்டதாய் கத்திவிட்டு
சாலை விதி மீறி செல்லும்..

காத்திருந்த சிவப்புவிளக்கு
காணச்சகியாமல்
முகத்தைத் திருப்புகையில்
பிறந்த குழந்தையை
மருத்துவமனையில் இருந்து
களவாடி வந்து
பிச்சை கேட்பவளைக் கண்டு
அடக்க முடியா ஆத்திரம் வரும்..

விழுந்து விட்ட பச்சை விளக்கு
கண்டு வாகனத்தை உயிர்ப்பித்து
நகர்வதற்குள்
பின் இருந்து பல ஒலிகள்
காதைக் கிழிக்கும்..

சீரான வேகத்தில்
போவது தவறு என்று
பின்னால் வரும்
பல்லவன் ஓரமாய்
ஒதுக்கிவிட்டுப் போகும்..

அலுவலகம் போய் சேர்ந்து
அமர்கையில்
அந்தப் பகுதி கரை வேட்டிகள்
வந்து நின்று
கூட்டம் நடத்த 'மாமூலாய்'
பணம் கேட்கும்..
கேட்ட பணம் கொடுத்த பின்னே
செல்லும்...

மதிய உணவிற்கு
உணவு விடுதி நோக்கி
நடக்கையில்
குப்பைத்தொட்டியில் வந்து விழும்
இலைக்கு சண்டை
நடப்பது கண்டு
உண்ணாமல் திரும்பும்..

வருமானவரிக்கு
காட்டிய கணக்கு பொய் என்று
ஒரு கும்பல் அழகாய் ஆடை அணிந்து
மிரட்டி பணம் பறிக்கும்..
பறித்த பின்பு
'எங்களையும் அப்பைக்கப்ப கண்டுக்கிடனும் சார்'
என்று ரகசிய எச்சரிக்கையும்
விடுத்துப் போகும்...

அண்ணாசாலையில் அரைகுறை
ஆடையோடு புதிய படத்திற்கு போடப்பட்ட
பூஜையை கண்டு காணச்சகியாமல்
போகையில்
வெள்ளையும் காக்கியும்
சீருடை அணிந்து
வழிப்பறி கும்பல் ஒன்று
காத்திருப்பது கண்டு
பாதை திருப்பும்...

ஸ்பென்சர் கடக்கையில்
லேசாய் தலை திருப்பியும் பார்க்கும்..
நாகரிக விழா நடக்காமலேயே
அங்கு ஒரு
இளமைக் குவியல்கள்
கொட்டிக் கிடப்பதைக் கண்டு
வியந்து போகும்..

உடலை பரிசோதனை
செய்ய மருத்துவமனைக்குள்
புகுந்தால்
அங்கு ஒரு பகல் கொள்ளை
நடப்பதைக் கண்டு
கண்ணும் கொஞ்சம் கலங்கும்..

எல்லாம் முடிந்து
கிறுக்கிக்கொடுத்த
மருந்து சீட்டை
எதிரே இருக்கும்
மருந்துக் கடையில் கொடுக்கையில்
அங்கு கொடுக்கப்பட்ட
காலாவதியான மருந்து கண்டு
சண்டையும் போடும்...

காக்கி சீருடை அணிந்த
ஒரு கொள்ளைக்காரன் வந்து
சமரசம் என்ற பெயரில்
ரூபாய் ஐம்பதையும்
வாங்கி விட்டு
'பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்கே
உனக்கு என்னத்துக்கு இந்த வேலை'
என்று அறிவுரையும் சொல்லி விட்டுப் போகும்..

வீடு போய் சேர்ந்தால்
நிம்மதி என்று
வீடு போகும்...
மின்சாரம் இல்லாத
வீடு கண்டு
வந்த கோபம் அடக்கும்..

வந்து விட்ட தண்ணீர் வண்டியில்
தண்ணீர் பிடிக்க கையில்
வாளியை எடுத்துக் கொண்டும் ஓடும்..
தண்ணீர் பிடிக்க வந்த
இரு பெண்கள்
மாறி மாறி அடுத்தவர் குடும்ப மானத்தை
கப்பலேற்றிக் கொண்டிருப்பதை
சகித்துக் கொண்டு
தண்ணீரும் பிடிக்கும்...

மின்சாரம் இல்லாதபோது
மட்டும் அதைக் கண்டுபிடித்த
அறிவியல்வாதியின்
பெயரும் ஏனோ
நினைவிற்கு வரும்...

தூக்கம் வராது
தவிக்கும் பொழுது
மனசாட்சி மிருகம்
கொஞ்சம் சத்தமாய்
கேட்கும்..
'இதுதான் இந்தியா..
இதுக்கு
நீ என்னத்தை செஞ்சு கிழிச்ச'
துயரம் தாங்காமல்
சில விசும்பல்களை பதிலாய்
கொடுத்துவிட்டு
தூங்கும்...

poo
04-04-2003, 03:22 PM
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்... வாய் கிழிய பேசுவதில் இலாபமில்லைதான்... அருமையாய் வடித்திருக்கிறார் ராம்.. பாராட்டுக்கள்!!!

poo
04-04-2003, 03:26 PM
இந்தியனாய் பிறந்ததில் பெருமை கொள்வோம்... வாய் கிழிய பேசுவதில் இலாபமில்லைதான்... அருமையாய் வடித்திருக்கிறார் ராம்.. பாராட்டுக்கள்!!!

இளசு
04-04-2003, 03:42 PM
எனக்கும் சேத்து சிட்டு சொல்லிட்டாப்போல!
இன்னொரு நீ......ண்ட கையறு நிலை.....கவிதை!
மனதில் பாரமா.... சோகமா... அட போங்கப்பா என்ற வறட்டு வேதாந்தமா..எதுவென்று சரியாக தோணாத குழப்ப நிலை......

rambal
04-04-2003, 05:04 PM
எனக்கும் சேத்து சிட்டு சொல்லிட்டாப்போல!
இன்னொரு நீ......ண்ட கையறு நிலை.....கவிதை!
மனதில் பாரமா.... சோகமா... அட போங்கப்பா என்ற வறட்டு வேதாந்தமா..எதுவென்று சரியாக தோணாத குழப்ப நிலை......

கையறு நிலை...
லஞ்சம் கேட்ட அதிகாரியை அடிக்க முடியா கோபம்...
சிறுமியைக் கற்பழித்தவனை கொல்ல முடியா உக்கிரம்...
மருத்துவமனையில் பிறந்த குழந்தையை களவாடியவளை ஒன்றும் செய்ய முடியா கையாலாகத்தனம்...(அவள் ஏன் அப்படி செய்கிறாள்? இந்த சமூகமும் ஒரு காரணம்..)
சிகப்பு விளக்கிற்கு நின்ற என்னை ஒடுக்கிவிட்டு கெட்ட வார்த்தயில் திட்டிவிட்டிப் போனானே.. அவன் அளவிற்கு இறங்கி சண்டை போட முடியாவில்லை என்ற ஏக்கம்..
கட்சி கூட்டம் என்று வந்த தொண்டர் படையை அடித்து நொறுக்க முடியவில்லை என்ற கவலை..
காலாவதியான மருந்து கொடுத்தவனோடு சண்டை.. அதுவும் ஒரு காக்கி வந்து அறிவுரை..
மின்சாரம் இல்லாத நிலை.. இன்னும் பல...
அன்று கோபத்தை அடக்கியதால் இன்று கவிதையானது..
இல்லையென்றால் நான் ஜெயிலில் இருப்பேன்..அவ்வளவே..

இது என்னுடைய ஒரு நாள் நிகழ்வுதான்..

என் வாழ்வைப் பதிந்தால்..
அது அருந்ததி ராய் எழுதிய god of small things அளவிற்குப் போய் விடும்..
அதனால்,
இது நீண்ட கவிதை அல்ல..

anushajasmin
05-04-2003, 11:23 AM
ராம்பாலின் கவிதையில் இந்தியாவின் நிலைப்பாடு மிக தெளிவாக புரிந்தது.
ஒருநாள் பாடே இது என்றால்... கடவுளே இந்தியாவைக் காப்பாற்று

aren
05-04-2003, 01:33 PM
சென்னையை அப்படியே புட்டு புட்டு வைத்திருக்கிறீர்கள். அருமையாக இருக்கிறது உங்கள் கவிதை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

discreteplague
06-04-2003, 03:30 AM
ராம்பாலின் கவிதையில் இந்தியாவின் நிலைப்பாடு மிக தெளிவாக புரிந்தது.
ஒருநாள் பாடே இது என்றால்... கடவுளே இந்தியாவைக் காப்பாற்று


கடவுலே புழோகத்துக்கு வந்தாள்......மண்டை சுத்தி போவான். அந்த அழவிற்கு கேட்டுப்போகி இருக்கு..


விஷ்ணு

பைத்தியகாரன்
06-04-2003, 10:18 AM
எங்கள் அரசியல் தலைவர்களின் பாவத்தை
பொக்க ஒரு
கஙகை போதுமா?

discreteplague
06-04-2003, 02:15 PM
எங்கள் அரசியல் தலைவர்களின் பாவத்தை
பொக்க ஒரு
கஙகை போதுமா?


எள்ளா அரசியல் தலைவர்களும் அப்படி இல்லை. சிலர் அப்படி இருப்பது உன்மை. இது என் கருத்து. தவராக இருன்ந்தால் மன்னிக்கவும். அது சாரி நான் உங்களை பைத்தியக்காரன் என்று அலப்பதற்கு கொஞ்சம் கடினமாக தான் இருக்கு. இதுக்கு எதாவது செய்யுங்கள். இதுவும் ஒரு வகை வேண்டுக்கோள் என்று எற்றுக்கொள்ளுங்கள்.

விஷ்ணு

இளசு
06-04-2003, 02:27 PM
[quote="ilasu
இன்னொரு நீ......ண்ட கையறு நிலை.....கவிதை!
மனதில் பாரமா.... சோகமா... அட போங்கப்பா என்ற வறட்டு வேதாந்தமா..எதுவென்று சரியாக தோணாத குழப்ப நிலை......



இது நீண்ட கவிதை அல்ல..[/quote]

ராம், நீண்ட என்ற சொல் கவிதைக்கு அடைமொழி அல்ல
தொடர்ந்த அந்த நாள் நிகழ்வுகளின் கையாலாகாத நிலைக்கு,
ஊமைக்கோபத்துக்கு.

பதிந்தவை உண்மையே, பதைத்ததும் உண்மையே
பலன்...?

முடியாத நிலை முடியாமல் தொடர்வதையே வருத்தத்துடன் வர்ணித்தேன்.

rambal
06-04-2003, 04:37 PM
தவறாக புரிந்து கொண்டமைக்கு வருந்துகிறேன்.
மன்னிக்கவும் இந்த சிறியவனை..

இளசு
06-04-2003, 04:44 PM
[quote="rambal.
..[/quote]
தேவை இல்லை இளவலே
ஒரு தன்னிலை விளக்கம் அளித்தேன்.. அவ்வளவே!

gans5001
07-04-2003, 03:52 AM
அழகான கவிதைக்கு நன்றி ராம்பால்

Narathar
07-04-2003, 04:36 AM
நீண்ட கவிதை மெகா சீரியல் போல.......
சொன்னது பாதி சொல்லாதது மீதி........
இந்த மெகாசீரியல் பிரச்சனையையும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம்
(அங்கு முறைப்பது தெரிகிறது...... நாட்டில் இவ்வளவு பிரச்சனை இருக்க
உமக்கு மெகா சீரியல் கேக்குதா என்று.... )
நான் நடைமுறைபிரச்சனையைப்பற்றி சொன்னேன்.....
எத்தனையோ ஆண்களுக்கு இரவு சோறு கிடைக்க 11 மணிஆகிரதாமே???....நாராயனா!!