PDA

View Full Version : கோடுகளுக்குள்



நாகரா
30-04-2008, 03:23 AM
சிற்றெறும்புகள் கூடக்
கோடுகளைத் தாண்டிக்
கோடுகளைத் தாண்டித்
தரையில்
ஊர்கின்றன

மனிதர்களோ
கோடுகளைத் தாண்டினால்
தீ மூளுமென்று
பயந்து
கோடுகளுக்குள்
குந்திக் கிடக்கிறார்கள்

யாரோ
எதற்கோ
என்றோ
கிழித்த கோடுகளை
ஏன் தாண்டக் கூடாது
என்ற விவேகக் கேள்வியையும்
சந்திக்க பயந்து

கோடுகளுக்கு வெளியே
புதியதோர் உலகம்
காத்துக் கிடக்கிறது

கண்டுபிடிக்க்கப் படாமல்

பாலகன்
30-04-2008, 10:21 AM
நண்பரே நாகரா

என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளங்கவில்லை,,,,,,,,,, எதற்காக அமைதியாக கோட்டுக்குள் வாழும் மனிதனை கோட்டை விட்டு வெளியே வர சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை............ முடிந்தால் விளக்கவும்,,

அன்புடன்
பில்லா

அமரன்
30-04-2008, 12:17 PM
சில கோடுகளை தாண்டவே கூடாது.. தாண்டினால் இன்னும் பல உயிர்கொல்லிகள் உயிர்கொள்ளும்..
சில கோடுகளை அழிக்காமல் விடவே கூடாது.. விட்டால் அடிமைத்தளை அறுபடாது..
தேவை, தேவை இல்லை என்று பட்டியலிடப்பல.. அவற்றை அறிந்துகொள்ளவே ஆணடவன் தந்த கொடை ஆறாம் அறிவு.

தொடர்வண்டியின் ஒவ்வொரு பெட்டியிலும் பிரேக் (அலாரம்) இருக்கு. எதற்காக? ஆபத்து வேளையில் பயன்படுத்துவதற்காக/அறிவிப்பதற்காக.. அதை சரிவரப் பயன்படுத்துவோர் அதிகம்.

கோடுகளால் துண்டிக்கப்பட்ட உலகம் சண்டையிட்டு சீரழிந்தது. அதைத் தடுக்க உலகை ஓர் குடையின் கீழ்கொணரும் ஒரு முயற்சியாக ஐக்கியநாடுகள் சபை உருவெடுத்தது. காலத்துக்குக் காலம் பிரதேச வாரியாகவும், அரசியல் ரீதியாகவும் பெரும்பானமைப் பதில். அதற்காக அந்தக் கோடுகள் அவசியமற்றவையா என்பதற்கும் இல்லை என்பதே பெரும்பான்மை பதில்.. ஆக, சரியாகப் படுத்துவதில்/பொறுப்பை உணர்வதில் உள்ளது புதிய உலகம் காணும் செயலின் ஆரம்பம்.

பாராட்டுகள் நாகரா அவர்களே!

நாகரா
30-04-2008, 01:53 PM
பில்லா, கோடுகள் என்று நான் குறிப்பது மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட தளைகளை, முட்டுக்கட்டைகளை. உம் கேள்விக்கு நன்றி.

நாகரா
30-04-2008, 01:57 PM
அமரன், உம் விமர்சனத்திற்கு நன்றி. கோடுகளால் நான் சுட்டுவது மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட தளைகளை. அத்தளைகளை உடைத்து அவன் முன்னேறினாலொழிய, ஆறறவிருந்து என்ன பயன்! இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே இக்கவிதை எழுதப்பட்டது.

அனுராகவன்
01-05-2008, 01:50 AM
நன்றி நாகரா!!
ம்ம் நல்லதொரு கவி..
என் வாழ்த்துக்கள்

நாகரா
01-05-2008, 03:45 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி அனு.

பாலகன்
01-05-2008, 04:51 AM
பில்லா, கோடுகள் என்று நான் குறிப்பது மனிதன் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட தளைகளை, முட்டுக்கட்டைகளை. உம் கேள்விக்கு நன்றி.

மிக்க நன்றி நாகரா,,,,,,,,,,,

நிச்சயமாக நீங்கள் சொல்லும் தளைகள் தகர்க்கபட வேன்டும் நண்பரே

அன்புடன்
பில்லா

நாகரா
19-06-2008, 03:13 PM
உம் புரிந்துணர்வுகளுக்கு நன்றி பில்லா