PDA

View Full Version : ஒட்டாத சட்டிகள் (Non-Stick)



அறிஞர்
29-04-2008, 02:06 PM
இப்பொழுது உள்ள உலகத்தில் பலரும் ஒட்டாத சட்டிகளை (Non-stick Utensils) உபயோகிக்கிறார்கள்.

அதில் பயன்படுத்த படுத்தபடும் வேதிப்பொருள் நமது உடல்நிலைக்கு ஊறு விளைவிப்பதாக ஒரு செய்தி சொல்கிறது.

அது கீழே (ஆங்கிலத்தில் உள்ளது. நேரம் கிடைக்கிறவர்கள் தமிழில் மாற்றிக்கொடுங்கள்)

http://www.environmentaldefence.ca/toxicnation/whatGovDo/PFCs.htm

ஓவியன்
29-04-2008, 02:19 PM
ஒட்டாத சட்டிகளும் நம் உடலுடன் ஒட்டாமல் ஊறுவிளைவிக்குமாமே...!! :eek:

இதுவரை ஒட்டாத சட்டிகளின் மேற் பூச்சு உதிர்ந்தால் தான் பிரச்சினை என நினைத்திருந்தேன், இப்போது மொத்தத்தில் அந்த பூச்சுக்களே பிரச்சினையா......???

இனி எல்லோரும் பழையபடி மண் சட்டிகளுக்கே போயிட வேண்டியதுதான்...!! :)

பூமகள்
29-04-2008, 04:01 PM
என்னது... ஒட்டாத சட்டிகளால் பிரச்சனையா??!! :eek::eek:
அச்சச்சோ... இப்போதானே.. :sprachlos020::sprachlos020:
வீட்டில் புதுசு புதுசா வாங்கினோம்..??!! :traurig001::traurig001:

இப்போ தான் இப்படி கண்டுபிடிக்கனுமா??! :mad::fragend005:

நாகரீகத்தின் வளர்ச்சியில் ஏதாவது ஒரு இடத்தில் முட்டிட்டே இருக்கே...!! :frown::icon_rollout:

----------------------------------------------

முக்கியமான தகவல்..!
பகிர்ந்தமைக்கு நன்றிகள் அறிஞர் அண்ணா. :)

விகடன்
29-04-2008, 05:33 PM
ஒட்டாத சட்டிகளில் இப்படி ஒரு பிரச்சினை இருக்கிறதா?
மனிதன் தனது வேலைகளை இலகுவாக்கிக்கொள்ளும் பொருட்டு ஒவ்வொன்றையும் புதிது புதிதாக கண்டுபிடிக்கையில் அதனோடு மனிதனிற்கு தீங்கு விளைவிக்கும் பக்க விளைவுகளும் தோன்றத்தான் செய்கிறது. ஆனால் அவற்றை ஒவ்வொன்றாக புறக்கணித்துவிடுகிறான்.

இதில் என்ன கொடுமையென்றால், ஒட்ட்டா சட்டிகளிற்கு மரத்தாலான அகப்பைகளை பயன்படுத்தல்வேண்டும். ஆனால் மனிதன் அதில் சொற்ப இலாபம் திரட்டும் பொருட்டு உலோகத்திலான அகப்பைகளையே உபயோகிக்கின்றான். அதன் விளைவால் ஒட்டா சட்டிகளில் பூசப்பட்டிருக்கும் பிரத்தியேக பொருளையும் விராண்டி தனது உணவோடு கலந்து வெட்டுகிறான்.

பாலகன்
29-04-2008, 07:26 PM
மண் பாத்திரங்களின் மகத்துவமே தனி தான்,,,,, ஒட்டா சட்டிகளில் இவ்வளவு இப்படி ஒரு தொல்லையா?

அன்புடன்
பில்லா

அனுராகவன்
30-04-2008, 12:15 AM
மண்சட்டியில் வைத்து சாப்பிடும் அழகும்,சுவையும் தனிதான்..
ஓட்டா சட்டி தீமைவிளைவித்தால் நாமெல்லாம் மருத்துவ மணைதான் வீடாகிவிடும்..
-------------------------
நன்றி அறிஞர் அவர்களே!!
என் வாழ்த்துக்கள்..!!!

சூரியன்
05-05-2008, 05:35 AM
நான் இப்பதான் ரெண்டு மண் சட்டி வாங்கியிருக்கேன் :icon_rollout:

ஓவியா
28-07-2008, 03:24 PM
நான் இப்பதான் ரெண்டு மண் சட்டி வாங்கியிருக்கேன் :icon_rollout:

நங்களெல்லாம் அப்பவே மண் சட்டி வாங்கி அது உடைந்து பழைய கதையாகிவிட்டது, ....

நீர் இப்பதான் மண் சட்டியே வாங்கியுள்ளாய்.... யூ ஆர் வெரி ஃச்லோ :lachen001:


நல்ல விசயம், சுட்டிக்கு நன்றி அறிஞர் சார்.

மன்மதன்
25-02-2009, 12:24 PM
இதில் என்ன கொடுமையென்றால், ஒட்ட்டா சட்டிகளிற்கு மரத்தாலான அகப்பைகளை பயன்படுத்தல்வேண்டும். ஆனால் மனிதன் அதில் சொற்ப இலாபம் திரட்டும் பொருட்டு உலோகத்திலான அகப்பைகளையே உபயோகிக்கின்றான். அதன் விளைவால் ஒட்டா சட்டிகளில் பூசப்பட்டிருக்கும் பிரத்தியேக பொருளையும் விராண்டி தனது உணவோடு கலந்து வெட்டுகிறான்.

இப்பவெல்லாம் நான் ஸ்டிக் சட்டிகள் வாங்கும் போதே, மரத்தாலான அகப்பை கொடுத்து விடுகிறார்கள்..

அக்னி
25-02-2009, 12:30 PM
எல்லாருமே ரொம்பவும் சீரியஸா இத்திரியில் பதிவிடுவதால்,
எனது சந்தேகத்தை கேட்கலாம் என்று நினைக்கின்றேன்...

இத்திரியை ஒட்டி வைத்தால்...???

Tamilmagal
28-05-2009, 08:03 PM
இப்பவெல்லாம் நான் ஸ்டிக் சட்டிகள் வாங்கும் போதே, மரத்தாலான அகப்பை கொடுத்து விடுகிறார்கள்..
மரத்தாலான அகப்பை கொடுப்பது ஒட்டாத சட்டிகளை
பாதுகாக்க என நினைத்தேன், இப்பதான் தெரியுது அது நம்மை பாதுகாக்க என்று.

அறியத்தந்தமைக்கு நன்றி அறிஞர் அவர்களே.