PDA

View Full Version : அகங்காரம்-புரிந்துக்கொள்ளல்!!

அனுராகவன்
29-04-2008, 02:45 AM
தவிர்க்க முடியாதது
உடலின் மரணம்;
ஆனால் ஜெயிக்க
வேண்டியது மனத்தின்
மரணம்; அதேப்போல்
சரிசெய்யப்பட வேண்டியது
உயிரின் மரணம்; உடல்,
மனம், உயிர் மூன்றையும்
ஆட்டிப்படைக்கும் ஒரு
அரக்கன் அகங்காரம்....
அகங்காரம் அழிங்கும்
மருந்து புரிந்துக்கொள்ளல்...

பாலகன்
29-04-2008, 02:51 AM
அருமையான குறுங்கவிதை அனு, முதலில் பாராட்டுக்கள்......

ஒரு சிறிய சந்தேகம் உயிரின் மரணத்தை தங்களின் மருந்து சரிசெய்ய இயலாது என்பது எனது கருத்து.......... மாற்று கருத்திருந்தால் அடியேனுடன் வாதிடலாம்,

அன்புடன்
பில்லா

அனுராகவன்
29-04-2008, 02:58 AM
நண்பருக்கு என் நன்றி முதலில்..
உங்கள் பின்னோட்டதிற்கு என் வாழ்த்துக்கள்...
மரணம் யாருமே தவிர்க்க முடியாதுதான் ஆனால் தியானம் செய்தால் நமக்கு கிடைக்கும் மரணம் ஒரு சுப நிழ்வாகவே நடக்கும்..
ஒரு ஞானி மரணிப்பதில்லை அவர் உடலைவிட்டு எல்லையற்ற இறைநிலையுடன் ஒன்றாக கலந்துவிடுவார்.ஆனால் சாதாரண மனிதன் மரண படுக்கையில் படும் துன்பத்திகு அளவேயில்லை..
ஆதலால் தியானம் செய்து நாமும் ஞானம் அடைவதே இந்த பிறவியின் நோக்கமாக இருந்தால் மரணம் தழுவாது..

பாலகன்
29-04-2008, 03:08 AM

ம் தங்களின் இந்த பதில் என்னை திருப்தி படுத்தியது.. மிக்க நன்றி அனு

அன்புடன்
பில்லா

அனுராகவன்
29-04-2008, 03:13 AM
நன்றி பில்லா உங்கள் புரிதலுக்கு..
ம்ம் உங்கள் ஆக்கத்தையும் மலர விடுங்கள்..
அப்போது இனிய கனி சுவைக்கும்..

மனோஜ்
06-05-2008, 03:45 PM
அகந்தை ஆருயிரை அழிக்கும் என்று கவிதை தந்தமைக்கு நன்றி
அனுஅக்கா

பாலகன்
06-05-2008, 06:49 PM
நன்றி பில்லா உங்கள் புரிதலுக்கு..
ம்ம் உங்கள் ஆக்கத்தையும் மலர விடுங்கள்..
அப்போது இனிய கனி சுவைக்கும்..

தங்கள் அளவி்ற்கு எனக்கு கவிதை எழுத திறமையில்லையே அனு

அன்புடன்
பில்லா