PDA

View Full Version : சுடரவனின் பக்கங்கள்...........சுடரவன்
28-04-2008, 08:51 PM
யாவும் கற்பனையும் அல்ல,நியங்களுமல்ல.....இவை இரண்டு துருவங்களுக்குமிடையே ஓடிக்கொண்டேயிருக்கின்ற கால நதியின் புள்ளி ஒன்றின் அசைவுகள் மட்டுமே இங்கே எழுதுகோல் கொண்டு என்னால் இயக்கப்படுகின்றது.
தனி மனிதனின் ஆழங்கள் புரிவதற்கு கடினமானவை. அந்த ஆழங்கள், மற்றவர்களின் தொடுபுலங்களிற்கு அப்பால் கூட இருந்திடலாம். ஆனாலும் கருத்துக்களின் பகிர்வு ஆழத்தினைக் குறிப்பெடுத்துக்கொள்ள துணைபுரியும் என்பது வெள்ளிடை மலை.
இதுவும் ஒரு கருத்துப் பகிர்வு மட்டுமே.


நன்றி.

அன்புடன்
எஸ். சுடரவன்

சுடரவன்
28-04-2008, 09:13 PM
நம்பிக்கையீனங்கள்..........

உலகத்திற்காக உதிர்க்கப்பட்ட
முகத்திரை முறுவல்கள்
உள்ளத்தின் அழுகைகளிற்குத்
தாழ்ப்பாள்கள் போட்டன.......

சுற்றத்தாருக்கான
கண் சிமிட்டல்கள்
நித்திரை கலைந்த
நீண்ட இரவுகளிற்கு
அத்திவாரம் போட்டன........

பிறர் பொருணிறை வார்த்தைகளில்
பொருள் தேட முடியாது
அவன் பொழுதுகள் கழிந்துகொண்டே போயின.......

அரவணைப்புக்களிற்குப் பதிலாக
அசாதாரண கைகளின் பிடிகளுக்குள்ளே
சிக்குண்டது அவனின் மனமும் கூட........


(மேலும் வளரும்..........)


அன்புடன்
எஸ். சுடரவன்

அனுராகவன்
29-04-2008, 01:01 AM
நன்றி சுடரவன் அவர்களே!!
ம்ம் உந்தன் கவி பணியே இன்னும் மெருகேற்றுங்கள்..
என் வாழ்த்துக்கள்

நாகரா
29-04-2008, 04:19 AM
நம்பிக்கையீனங்கள்..........

உலகத்திற்காக உதிர்க்கப்பட்ட
அவன் புன்னைககள்
உள்ளத்தின் அழுகைகளிற்குத்
தாழ்ப்பாள் போட்டன.......

சுற்றத்தாருக்கான
கண் சிமிலட்டல்கள்
நித்திரை கலைந்த
அவன் நீண்ட இரவுகளிற்கு
அத்திவாரம் போட்டன........

பிறர் பொருணிறை வார்த்தைகளில்
பொருள் தேட முடியாது
அவன் பொழுதுகள் கழிந்துபோயின.......

அரணைப்புக்களிற்குப் பதிலாக
அசாதாரண கைகளின் பிடிகளுக்குள்ளே
சிக்குண்டது அவனின் மனம்........


(மேலும் வளரும்..........)


அன்புடன்
எஸ். சுடரவன்

புன்னகைகள்
சிமிட்டல்கள்
அரவணைப்புக்கள்

உம் கவிதையின் அழகைக் குறைக்கும் இப்பிழைகளைத் திருத்துவீர், சுடரவன். தட்டச்சிய பிறகு திருத்திவிட்டுப் பிழை நீக்கிப் பதியுங்கள், நற்றமிழின் நலம் பேணுங்கள், நன்றி.

பிழைகளின்றி இனிதே தொடரட்டும் உம் கவிப் பயணம் சுடரவன், வாழ்த்துக்களும் பாராட்டும்.

சுடரவன்
30-04-2008, 08:15 PM
அன்புள்ளங்களுக்கு வணக்கம்...
தழிழ் தட்டச்சை இப்பொழுது தான் பயின்றுகொண்டிருக்கின்றேன்...
நிச்சயமாக வெகுவிரைவில் குணப்படுத்திக்கொள்வேன் என எண்ணுகிறேன்.
குறிப்பாக நாகரா அவர்களுக்கு எனது பாராட்டும் நன்றிகளும்...
உங்கள் உதவிக்கு நன்றி.
மற்றும் அமரன் அவர்களுக்கும் உரித்தகட்டும்.
கவிதையில் சிறிய மாற்றம்,
அதனால் மீள்வும் திருத்தியமைக்கவேண்டிய தேவை ஏற்பட்டது....

இதன் தொடர்ச்சி ....

அன்புடன்
எஸ். சுடரவன்

சுடரவன்
30-04-2008, 08:29 PM
நம்பிக்கையீனங்கள்.......... (தொடர்ச்சி .....02)
ஊனம் நிறைந்த கால்கள்
எழுந்துநின்று அவனுக்காகப் போர்புரிய மறுத்தன.....

ஓ.........
நம்பிக்கையீனங்களே......
உங்கள் துடிப்புக்களை
ஒரு நொடி நிறுத்தி - அவன்
கடிவாளத்துக்கு செவி கொடுங்கள்......

இவனின் அழுகைக்கு முற்றுப்புள்ளி
கிடைக்கும்........
சோகங்கள் கலைந்து தேகங்கள்
உற்சாகப்படும்.......
அர்த்தங்களில் புதுப்புது வார்த்தைகள்
உருவகம் பெறும்....
சுதந்திரத்தின் அடிச்சுவடுகளோடு
அவன் கால்கள் ஒன்றிப்போகும்......
மீளவும் நம்பிக்கையீனங்கள்
சிறைப்பிடிக்கப்படும்..............

(முற்றும்.)

அன்புடன்,
எஸ். சுடரவன்.

அறிஞர்
30-04-2008, 08:59 PM
வரிகளில் அருமையாக உள்ளது....
முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் உள்ள தொடர்பை விளக்க இயலுமா...

பூமகள்
01-05-2008, 06:54 AM
உலகத்திற்காக உதிர்க்கப்பட்ட
முகத்திரை முறுவல்கள்
உள்ளத்தின் அழுகைகளிற்குத்
தாழ்ப்பாள்கள் போட்டன.......
அற்புதம்..!!:icon_b::icon_b:

உள்ளிருக்கும் அழுகையை
தற்காலிகத் தாழ்பாள்களால்
சிறைபிடிக்க முயலும்
அப்பாவி மனம்..!!

தாழ்பாள் வெடித்து
ஓர் நாள் சீறி வரும்
நிலை அறியாமலே
சிறை பிடித்த
புன்னகையில் நாம்..!!

---------------------
பாராட்டுகள் சுடரவன் சகோதரரே..!!:icon_rollout:

உங்களின் கவிப்பணி தொடரட்டும்..!!
தமிழ் தட்டச்சு நிச்சயம் அதி விரைவிலேயே நல் முறையில் சாத்தியப்படும்.. கவலையின்றி தட்டச்சுங்கள்..!!

வாழ்த்துகள் சுடரவன் அண்ணா.

அமரன்
25-05-2008, 05:49 PM
சுடரவன் பக்கங்களை படிக்க வந்தால்,
சுடரவனை மன்றப்பக்கம் காண முடியவில்லை!!!

அன்பு சுடரவன்...
ஒரு பக்கத்தில் முழுக்கவிதைகளையும் பதிப்பதை விட, ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு கவிதையைப் பதிந்தால் வாசகர்களுக்கு வசதி அதிகம்.. நீங்களும் அதிக பயனடையலாம்..

சும்மாவா சொன்னார்கள்..
யானைக்குப் பலம் தும்பிக்கையில்..
யாவர்க்கும் பலம் நம்பிக்கையில்...

நம்பிக்கையீனம்=நிரந்த ஊனம்..

கவிதையில் உள்ள ஏதோ ஒன்று சுண்டி இழுக்குது.. என்னவென்று சொல்லத் தெரியவில்லை.. என் இந்நிலை தொடர ஆசைப்படுகின்றேன்..

சுடரவன்
08-08-2008, 11:26 AM
வரிகளில் அருமையாக உள்ளது....
முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும் உள்ள தொடர்பை விளக்க இயலுமா...

வணக்கம்......
நீண்ட நாட்களுக்கு பிறகான சந்திப்பு..
முதல் கவிதையின் பாகத்தில் ஒருவனின்
நம்பிக்கையீனத்தின் நிலைப்பட்டை சொல்லுகிறேன்...
இரண்டாவது பகுதியில் நம்பிக்கையீனங்களை நான் கேட்டுக்கொள்கிறேன் தயவு செய்து உனது வேலையை அவனிடத்தில் நிறுத்த்திடு அப்பொழுது..........
என்றவாறாகத்தா மீதி தொடர்கிறது.......


அன்புடன்
எஸ். சுடரவன்