PDA

View Full Version : இந்தியா சாதனை - ராக்கெட்



அறிஞர்
28-04-2008, 07:14 PM
விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி ராக்கெட்! வெற்றிகரமாக 10 செயற்கைகோளுடன்

உலகிலேயே முதல் முறை-இந்தியா அபார சாதனை

ஸ்ரீஹரிகோட்டா, ஏப். 28-
உலகிலேயே முதல் முறையாக 10 செயற்கைக்கோள்களை சுமந்துகொண்டு இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி வரலாற்றில் இது மாபெரும் சாதனையாக கருதப்படுகிறது.

பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி என்ற ராக்கெட்கள் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்(இஸ்ரோ). புதிய சாதனையாக 2 உள்நாட்டு செயற்கைகோள்கள் உட்பட 10 செயற்கைகோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து இஸ்ரோ இன்று வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. Ôகார்ட்டோசாட்-2ஏÕ, ஐ.எம்.எஸ்-1 என்ற இரு உள்நாட்டு தொலை தொடர்பு செயற்கைகோள்களும், நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் தயாரித்த 8 சிறிய வகை செயற்கைகோள்களும் பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. பி.எஸ்.எல்.வி வகையில் இது 13-வது ராக்கெட். இதற்கான கவுன்ட் டவுன் நேற்று காலை தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட் இன்று காலை 9.23-க்கு புறப்பட்டது. தீப்பிழம்பை கக்கியபடி ராக்கெட் விண்ணில் சீறிப்பாய்ந்தது. அதன் சீராண பயணத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள் கண்காணித்தனர். குறிப்பிட்ட இலக்கை ராக்கெட் சென்றடைந்தவுடன், அதில் உள்ள செயற்கைகோள்கள் ஒவ்வொன்றாக பிரிந்து அதன் சுற்றுவட்டபாதையில் நிலை நின்றன.

பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட செயற்கைகோளில் முக்கியமானது இந்திய தொலை தொடர்பு செயற்கைகோள் Ôகார்டோசாட்-2ஏÕ. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கை கோளின் எடை 690 கிலோ. புவியமைப்பை பற்றிய தகவல்கள் மற்றும் வரைபடங்களை தெரிவிக்க இதில் நவீன கேமராக்கள் மற்றும் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. சூரிய வட்டபாதையில் 635 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த செயற்கைகோள் நிலை நிறுத்தப்பட்டவுடன், இதில் உள்ள சூரிய வெப்ப சக்தி(சோலார்) தகடுகள் விரிந்து செயல்பட தொடங்கும். இது ஐந்து ஆண்டுகள் செயல்படும். மற்றொரு இந்திய தொலை தொடர்பு செயற்கை கோள் Ôஐ.எம்.எஸ்-1Õ 83 கிலோ எடையுள்ளது. இதில் உள்ள மல்டிஸ்பெக்ட்ரல், ஹைபர்ஸ்பெக்ட்ரல் என்ற இரு கேமராக்கள் பூமியில் உள்ள சிறிய பகுதிகளைக்கூட மிக தெளிவாக படம்பிடித்துக் காட்டும். இது இரண்டு ஆண்டுகள் செயல்படும்.

நானோ டெக்னாலஜியை பயன்படுத்தி வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய 8 சிறிய செயற்கை கோள்களின் மொத்த எடையே 50 கிலோதான். இதில் 6 செயற்கைகோள்கள் என்.எல்.எஸ்-4 என்ற பெயரில் ஒரு தொகுப்பாகவும், மற்ற இரு செயற்கைகோள்கள் என்.எல்.எஸ்-5 மற்றும் ரூபின்-8 என்ற பெயரிலும் அனுப்பப்பட்டுள்ளன. என்.எல்.எஸ்-4 தொகுப்பை கனடாவின் டொரான்டோ பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. இதில் ஜப்பானின் கியூட் 1.7, சீட்ஸ் ஆகிய செயற்கை கோள்களும், கனடாவின் கேன்-எக்ஸ்2, டென்மார்க்கின் ஆசாட்-2, ஜெர்மனியின் காம்பஸ்-1, நெதர்லாந்தின் டெல்பி-சி3 ஆகிய செயற்கைகோள்கள் உள்ளன. என்.எல்.எஸ்-5 செயற்கைகோளை டொரான்டோ பல்கலைக்கழகம் உருவாக்கியது. ரூபின்-8 செயற்கை கோள் ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது. மொத்தம் 10 செயற்கை கோள்களும், இந்தியாவின் பி.எஸ்.எல்.வி-சி9 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்துவது உலகிலேயே இதுவே முதல் முறை. இதற்கு முன்பு 8 செயற்கைக்கோள்கள் மட்டுமே ரஷ்ய ராக்கெட் மூலமாக அனுப்பப்பட்டது.

பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டதும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும், இந்த திட்டத்தின் தலைவர் ஜார்ஜ் கோசியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட இப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர்.
---
நன்றி-தமிழ் முரசு

பாலகன்
28-04-2008, 07:37 PM
உண்மையிலேயே இது மிகப்பெரிய வெற்றி தான் அறிஞரே,,,,


பி.எஸ்.எல்.வி.-சி9 ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டதும் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயரும், இந்த திட்டத்தின் தலைவர் ஜார்ஜ் கோசியும் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். .

பின்னே இருக்காதா உலகநாடுகளின் பார்வை இப்போது இவர்கள் மேல் அல்லவா இருக்கும் இந்தியாவை தலைநிமிர செய்த பெருமை இவர்களை சாரும்

பில்லா

சுடரவன்
28-04-2008, 09:42 PM
நிகழ்ச்சியை BBC வாயிலாக கேட்டறிந்தேன்.
வரவேற்கப்படவேண்டிய விடயம் தான்...

நன்றி.

அன்புடன்,
எஸ். சுடரவன்

சுடரவன்
28-04-2008, 09:47 PM
BBC தமிழ் சேவை செய்திகள்..........

10 செய்மதிகளை விண்வெளியில் வெற்றிகரமாக ஏவியது இந்திய ராக்கெட்

இந்தியாவில் ஒரே ராக்கெட் மூலமாக 10 செய்மதிகள் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவின் விண்வெளித் திட்டத்தில் இது ஒரு மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் ஒன்று தெளிவான காலநிலையில், செம்மஞ்சள் மற்றும் வெள்ளை நிறப் புகையை வெளிவிட்டவாறு சென்னைக்கு அருகே உள்ள ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்பட்டபோது, விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இந்தியாவின் உட்கட்டமைப்பு மற்றும் மூல வளங்களைக் கண்காணிக்கும் ரிமோட் சென்ஸிங் செய்மதியையும், மற்றும் ஜெர்மனி, டென்மார்க் உள்ளிட்ட வெளிநாடுகளின் சிறு செய்மதிகளையும் அந்த ராக்கெட் தூக்கிச் சென்றது.

இந்த செய்மதிகள் ஒவ்வொன்றும் 10 நிமிட இடைவெளியில் ராக்கெட்டிலிருந்து தத்தமது நிலைகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளன.

நன்றி BBC.
அன்புடன்,
சுடரவன்

அறிஞர்
28-04-2008, 10:58 PM
எல்லாத் துறைகளிலும் வெற்றி நாட்டி...
பலரை இந்தியா திரும்பி பார்க்க வைக்க வேண்டும்....

அனுராகவன்
29-04-2008, 12:58 AM
நன்றி அறிஞரே!!
நானும் பார்த்தேன் டி.வியில்..
நாம் இது போன்று பல சாதனை படைப்போம்..

அன்புரசிகன்
29-04-2008, 02:18 AM
மற்றநாடுகள் காட்டும் சாதனைகளிலும் இந்தியா(யர்) தங்கியுள்ளனர் தானே... பெருமைப்படவேண்டிய விடையங்கள்.... வல்லரசாவதற்கான தகுதிகளில் இவைகளும் சில....

அமரன்
29-04-2008, 07:17 AM
சின்ன மாற்றம் ரசிகா!
மற்ற நாடுகளின் அறிவியல் முன்னேற்றங்கள், சாதனைகள் இந்திய மக்களில் சிலரில் தங்கி உள்ளது. தாயகத்திற்காக இந்தியர் உழைப்பு பயன்படும் அளவு இன்னும் அதிகமாக வேண்டும். விரும்புபவர்களுக்கு அரசு போதிய வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். இவை நிகழ்ந்தால், இந்திய திருநாட்டின் வேகமான முன்னேற்றம் நிச்சயம்.

தகவலுடன் தொடர்புபட்ட அனைவருக்கும் வாழ்த்துகள் உரித்தாகுக.

namsec
29-04-2008, 08:00 AM
ISRO விஞ்ஞானிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாரட்டுக்கள்

arun
05-05-2008, 07:49 PM
இது போல இன்னும் பல சாதனைகள் படைக்க நமது விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்கள் :icon_b::icon_b: