PDA

View Full Version : காக்கைகள்



நாகரா
28-04-2008, 05:23 PM
மரத்தில் பூக்குமா
கருப்பு மலர்கள்
ஓ.... காக்கைகள்

மரத்தில் பூத்து
விண்ணில் உதிரும் மலர்களா
காக்கைகள்

பாலகன்
28-04-2008, 07:46 PM
மரத்தில் பூக்குமா
கருப்பு மலர்கள்
ஓ.... காக்கைகள்

மரத்தில் பூத்து
விண்ணில் உதிரும் மலர்களா
காக்கைகள்

நண்பரே நாகரா............

அருமையான கவிதையை தந்தமைக்கு பாராட்டுக்கள்,,,
மரத்தில் பூத்து,,,,,, மிக எதார்த்தம்,,,

அன்புடன்
பில்லா

சுடரவன்
28-04-2008, 09:35 PM
அண்ணன் உங்கள் கவிதைகளைப் பார்க்கும் பொழுது கவிஞர் காசியானந்தனின் நினைவுகள் வந்து மறைகின்றன.....
இப்படித்தான் ஒருமுறை கூறினார்........

மாவீரர்கள் பற்றி.......
கோவில்கள் பற்றி..........

உங்களின் கக்கைகள் கூட அப்படித்தான்......

நன்றி

அன்புடன்,
எஸ். சுடரவன்

அனுராகவன்
29-04-2008, 12:54 AM
நன்றி நாகரா அவர்களே!!
மிக அழகான ஹைக்கூக்கள்..
ம்ம் என் வாழ்த்துக்கள்

நாகரா
29-04-2008, 03:31 AM
பில்லா, சுடரவன், அனு, உம் பின்னூட்டங்களுக்கு நன்றி.

நாகரா
29-04-2008, 05:39 AM
ஒளியை ஊடுருவிப் பாயும்
இருளின் கீற்றுகளா
காக்கைகள்!!!

ஓவியன்
29-04-2008, 05:53 AM
காக்கைகள் என்றாலே ஏனோ இனம் புரியா ஒரு அருவருப்பு நமக்கு...
ஆனால், சுற்றுச் சூழலின் சுத்தம் பேணுதலில் காக்கைகளின் பங்கு அளப்பரியது...

பாராட்டுக்கள் அண்ணா வித்தியாசமான ஒரு குறுங்கவிதைக்கு......!!

நாகரா
29-04-2008, 05:56 AM
உம் பின்னூட்டத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி ஓவியன்

ஆதி
29-04-2008, 08:38 AM
மரத்தில் பூத்து
விண்ணில் உதிர்கின்றப் பூக்கள்..

அற்புதமானக் கற்பனை ஐயா.. எனக்கு சிறுபோது முதலே காக்கைகளை மிகப் பிடிக்கும் என் நண்பர்கள் சிலரிடம் நான் கேட்பதுண்டு "காக்கை அழகா தான டா இருக்கு, பிறகு ஏன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு" என்று சொல்கிறார்கள் என்பேன், அதுவும் காக்கையின் சாம்பல் கழுத்தில் எனக்கு தனி மையல் எப்போதும் உண்டு..

பாராட்டுக்கள் ஐயா..

நாகரா
29-04-2008, 09:40 AM
உம் பாராட்டுகளுக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி ஆதி..

சாலைஜெயராமன்
29-04-2008, 01:32 PM
மரத்தில் பூத்து விண்ணில் உதிருமா

நல்ல கற்பனை திருமிகு நாகரா

சுற்றம் சூழல், கூவி அழைத்து கூடி வாழ்தல், காணாமல் புணர்தல், மாலையில் குளித்தல் காக்கையின் அரும் பெரும் குணங்கள் இவை.

கார்வண்ணக் கண்ணனின் கருமையைக் கொண்டதில் இன்னும் சிறப்பு காக்கைக்கு. நல்ல குறுங்கவிதைக்கு வாழ்த்துக்கள்

நாகரா
29-04-2008, 01:41 PM
உம் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி ஐயா

நாகரா
06-05-2008, 06:39 AM
மர வானில் மின்னும்
கருப்பு நட்சத்திரங்களோ
காக்கைகள்

பட்டப்பகலிலும்
விடியாத இரவின் திட்டுகளோ
காக்கைகள்

அனுராகவன்
06-05-2008, 06:55 AM
மர வானில் மின்னும்
கருப்பு நட்சத்திரங்களோ
காக்கைகள்

பட்டப்பகலிலும்
விடியாத இரவின் திட்டுகளோ
காக்கைகள்
ஐயா அருமையான கவிகள்
இந்த கவிகள் ரொம்ப நல்ல இருக்கு..
தொடந்து எழுதுங்கள்..

ஆதி
06-05-2008, 07:04 AM
கருப்பு நட்சத்திரங்கள்
இரவின் திட்டுக்கள்

அடடா அழகிய கற்பனை ஐயா.. உம் தமிழுக்கு என் வந்தனங்கள்..

நாகரா
06-05-2008, 09:32 AM
உம் பின்னூட்டங்களுக்கு நன்றி அனு, ஆதி.