PDA

View Full Version : சொல் வித்தை



நாகரா
28-04-2008, 05:03 PM
இருதய
மூளை
முனைகளில்
இழுத்துக் கட்டப்பட்டு
நாணேற்றப்பட்ட
நரம்பு

வளைகிறேன்
நான்

புறப்பட்டுவிட்ட
சொற்களின் குறியிலிருந்து
தப்ப முடியாமல்
நீ

சொற்களின் கூர்முனைகள்
உன் புலன்களை ஊடுருவும்
இன்ப வேதனையை
நீ
அனுபவிக்கும் வரை
இன்னொரு வளைதலுக்காய்க்
காத்திருக்கிறேன்
நான்

பாலகன்
28-04-2008, 07:55 PM
சிரமப்பட்டு புரிந்துகொன்டேன்,,,, இருப்பினும் புரிந்தப்பின் கவிதையின் எதார்த்தம்,,,, உணர்ந்தேன்,,,, அருமை நண்பரே,,,

அன்புடன்
பில்லா

சுடரவன்
28-04-2008, 09:23 PM
பிரமாதமாகவிருந்தது உங்களின் கவிதை.
ரொம்பவும் நன்றி

அன்புடன்,
எஸ். சுடரவன்

அனுராகவன்
29-04-2008, 12:55 AM
நன்றி நாகரா..
ம்ம் உந்தன் கவி பணி சிறக்கட்டும்..
என் வாழ்த்துக்கள்

நாகரா
29-04-2008, 03:28 AM
பில்லா, சுடரவன், அனு, உம் பின்னூட்டங்களுக்கு நன்றி.

ஆதவா
19-06-2008, 10:04 AM
சொற்கட்டு மிக அற்புதம்..

முதன்முதலாக உங்களின் அழகிய முத்திரைக் கவிதையைப் படிக்கிறேன் நாகரா அவர்களே!

வளையாத நாணுக்கு
வளைந்து கொடுப்பவள்
கூர் முனையின் வலியில்
புலன் திறந்து வளைவாள்.

கவலைப் படாதீர்கள். இன்னொரு வளைதல் தேவையற்றது... :D

நாகரா
19-06-2008, 03:04 PM
உம் பாராட்டுக்கும், பின்னூட்டக் குறுங்கவிக்கும் நன்றி ஆதவரே!