PDA

View Full Version : இலங்கை நரகம்



pathman
28-04-2008, 08:54 AM
ஓரு இலங்கையர் செத்து நரகத்துக்குப் போனார் ஆச்சரியமாக அங்கு ஒவ்வொரு நாட்டினருக்கும் நரகம் இருப்பதைப் பார்த்தான். முதலில் ஜெர்மன் நரகம் இருந்தது அங்கு வாசலில் இருப்பவனிடம் இங்கே என்ன பன்னுவார்கள் ? என்று கேட்டார்.

அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு ஜெர்மானிய பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்
கேட்கவே நன்றாக இல்லை ஆகவே அவன் அடுத்த நரகத்திற்கு போனார் அடுத்தது அமெரிக்க நகரம் அங்கும் அதே முறை தான் அதன் பிறகு ருசியா,கனடா,இங்கிலாந்து .... ஆக இப்படி. ஆனால் ஆனால் அவை எல்லாம் ஜெர்மன் நரகத்தைப் போலத்தான் என்றும் தெரிந்தது.

இறுதியில் இருந்தது நம்ம இலங்கை நரகம். அதன் வாசலில் நீண்ட வரிசை வேறு. என்னடா இது நம்ம ஆட்கள் அவ்வளவு கூடி போய்விட்டார்களா என்று அருகில் போய் பார்த்தால் அங்கே நம்மவர்களோடு ஜெர்மானியர்கள், ரசியர்கள், அமெரிக்கர்கள் இன்னும் பலர் நின்று கொண்டு இருந்தனர். வரிசையில் நின்றுகொண்டிருந்த ஒருவனிடம் நம்மவர் கேட்டார் இங்கே என்ன பண்ணுவார்கள்?

அதற்கு அவன் இங்கே இருக்கும் மின்சார நாற்காலியில் கட்டிப்போட்டு ஒரு மணிநேரத்திற்கு அதிர்ச்சி கொடுப்பார்கள். அப்பறம் முள் படுக்கையில் போட்டு ஒரு மணிநேரம் படுக்க சொல்வார்கள் பிறகு இலங்கை பேய் வந்து மீத நாள் முழுவதும் அடிக்கும் என்றான்.
இதுவும் மற்ற நரகங்களை போலத்தான். அப்புறம் ஏன் இவ்வளவு கூட்டம் இங்கு இருக்கின்றது ? என்று கேட்டான்

"எனெனில், இங்கு மின்சாரம் கிடையாது. ஆகவே மின்சார நாற்காலி வேலை செய்யாது முள் படுக்கையில் இருந்த முட்களை எல்லாம் யாரோ திருடிப்போய் விட்டார்கள். அப்புறம் இலங்கை பேய் அரசாங்க பணியாளன் ஆகவே அது வரும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கான்டீனுக்கு டீ குடிக்க போய் விடும் என்றான்"

ஓவியன்
28-04-2008, 09:25 AM
அப்புறம் இலங்கை பேய் அரசாங்க பணியாளன் ஆகவே அது வரும் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கான்டீனுக்கு டீ குடிக்க போய் விடும் என்றான்"

பேய் இலங்கையில் அதே பார்த்த வேலையைத் தான் நரகத்திலும் பார்ர்குது போல..!! :lachen001:

rekha
13-05-2008, 09:50 PM
இலங்கையா அல்லது ஸ்ரீலங்காவா?

அக்னி
13-05-2008, 10:01 PM
இலங்கையா அல்லது ஸ்ரீலங்காவா?
இரண்டும் ஒன்றுதான்... சிலோன் என்றும் சொல்லுவார்கள்...
அதுசரி ரேகா அவர்களே... நீண்ட காலமாக மன்றத்தில் இருக்கின்றீர்கள். தமிழிலும் நன்றாகவே தட்டச்சிடுகின்றீர்கள். அறிமுகத்தைத் தந்து மன்றத்தில் இணைந்திட இன்னும் ஏன் தயக்கம்? அன்புடன் எதிர்பார்க்கின்றேன்...

rekha
13-05-2008, 10:53 PM
நன்றி அக்னி அவர்களே!

இலங்கை என்பது ஒரு தீவு. அதில் ஸ்ரீலங்கா
என்றும் தமிழீழம் என்றும் இரு நாடுகள் அல்லது
தேசங்கள் - அதாவது
தேசிய இனங்கள் இருக்கின்றன
என்று இணையங்களில் படித்தேன்........ அதுதான் இந்த
வினா...

என்றும் அன்புடன்

ரேகா

அன்புரசிகன்
14-05-2008, 06:14 PM
ஒரே ஜோராக இருந்தீச்சு பத்மன்...... எப்படித்தான் யோசிச்சீங்களோ.....


நன்றி அக்னி அவர்களே!

இலங்கை என்பது ஒரு தீவு. அதில் ஸ்ரீலங்கா
என்றும் தமிழீழம் என்றும் இரு நாடுகள் அல்லது
தேசங்கள் - அதாவது
தேசிய இனங்கள் இருக்கின்றன
என்று இணையங்களில் படித்தேன்........ அதுதான் இந்த
வினா...

என்றும் அன்புடன்

ரேகா
இலங்கை என்பது தமிழ் சொல்.... லங்காவ என சிங்களத்தில் சொல்வார்கள். SRI LANKA என்பது ஆங்கிலமா அல்லது சிங்களமா என தெரியாது. ஆனால் இலங்கைக்கு பல பெயர்கள் உண்டு. சிலோன் - தப்ரபேன் ஈழம் என பல.... சிங்களவர் அப்பே லங்காவ (எங்கள் இலங்கை) என சொல்லும் போது இருக்கும் திமிருக்கு ஒரு ஓ போடலாம்....

அங்கு சிறுபான்மை இனத்தவருக்கு (தமிழ்) உரிமை மறுக்கப்பட்டதால் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். அவர்களை தமிழீழ விடுதலைப்புலிகள் என அழைக்கிறார்கள். (LTTE)

இது இலங்கையின் வரைபடம். இங்கு பச்சை நிறத்தில் தென்பாடுவது தான் தமிழீழம்....

http://fwe.cwis.org/__oneclick_uploads/2007/10/tamil-eelam-brder-copy.gif

தமிழீழ வரைபடம்

http://www.irb-cisr.gc.ca/images/researchpub/research/maps/LKA_E.gif
இலங்கையின் தலைநகரம் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே என்பது.....

தமிழீழத்தின் தலைநகரம் திருகோணமலை (Trincomalee) என விடுதலைப்புலிகளால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

பூமகள்
14-05-2008, 06:55 PM
ஹீ ஹீ.. சூப்பரோ சூப்பர்..!!
ஒருவேளை இந்தியா நரகமும் சென்று பார்த்திருந்தால்.. அங்கும் இலங்கை போல அதே நிலை தான் இருந்திருக்கும் பத்மன் அண்ணா....!!

பகிர்ந்தமைக்கு நன்றிகள்..!!
----------------------------------------
அன்புரசிகன் அண்ணாவின் மூலம்.. ஈழம் பற்றி நன்கு அறிந்து கொண்டேன்...

எங்க அம்மாயி கிராமத்தில்.. ஈழத்தமிழர்களை "சிலோன்காரர்கள்" என்று தான் இன்றும் சொல்வார்கள்..!

பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா. :)

அறிஞர்
14-05-2008, 07:05 PM
இலங்கை மட்டுமல்ல... இந்தியாவில் பல ஊர்களும் இப்படி தான் இருக்கிறது...
----
அருமையான சிந்திக்க வைக்கும் சிரிப்பு..

அனுராகவன்
16-05-2008, 05:25 AM
நன்றி பத்துமன் அவர்களே!!
அருமை சிரிக்க கூடிய செய்தி..

நன்றி அன்பு அவர்களே!!
என் வாழ்த்துக்கள்!!!

Narathar
16-05-2008, 05:55 AM
C:\WINDOWS\hinhem.scrஇதே நகைச்சுவை இந்திய நரகம் என்று வந்திருந்தால் இங்குள்ளவர்கள் ரசித்திருப்பார்களா? ரசித்தாலும்... பெயருக்கு ஆட்சேபம் தெரிவித்திருக்க மாட்டார்களா?

எது எப்படியிருந்தாலும்...... என்னைப்பொருத்தமட்டில் பூலோக சொர்க்கம் என்றால் அது இலங்கைதான். அதை நகைச்சுவைக்காகக்கூட நரகம் என்பது ஏனோ என் மனதை புண் படுத்துகிறது

அன்புரசிகன்
16-05-2008, 09:28 AM
எது எப்படியிருந்தாலும்...... என்னைப்பொருத்தமட்டில் பூலோக சொர்க்கம் என்றால் அது இலங்கைதான். அதை நகைச்சுவைக்காகக்கூட நரகம் என்பது ஏனோ என் மனதை புண் படுத்துகிறது

அது என்னமோ உண்மைதான்... இன்றய போர் இல்லை என்றால் இலங்கையைப்போன்ற ஒரு சொர்க்க பூமி காண்பது அரிது.

யாழ்ப்பாணத்து தண்ணீரை குடித்துக்கொண்டே இருக்கலாம்..... தாகத்துடன் வந்து கிணற்று துலாவில் நீரெடுத்து அப்படியே சிந்தி குடிப்பதில் உள்ள சுகம் இந்த water dispenser ல் கிடையாது...