PDA

View Full Version : துடிதுடிக்குது கவிதை



நாகரா
27-04-2008, 08:17 AM
மேலே
இன்னும் மேலே
இன்னும் இன்னும் மேலே
சுழன்று
சுழன்று
சுழன்று
பறந்தேறுது
தும்பி

கீழே
இன்னும் கீழே
இன்னும் இன்னும் கீழே
சுழன்று
சுழன்று
சுழன்று
மயங்கி விழுகுது
சருகு

அந்தரத்தில்
இரண்டும் வசப்படாது
ஏங்கி
இன்னும் ஏங்கி
இன்னும் இன்னும் ஏங்கி
பார்த்துப்
பார்த்துப்
பார்த்துத்
துடிதுடிக்குது
கவிதை

ஷீ-நிசி
27-04-2008, 09:20 AM
வித்தியாசமாய் இருக்கிறது கவிதை.. வாழ்த்துக்கள்!

நாகரா
27-04-2008, 09:37 AM
உம் வாழ்த்துக்களுக்கு நன்றி ஷீ-நிசி.