PDA

View Full Version : அவளா? அவனா?



ஆதவா
27-04-2008, 06:07 AM
நான்
அவளா? அவனா?

நிச்சயமற்ற சூழ்நிலையில்
அவளாயும் அவனாயும்
மாறி மாறி

வண்ணக்குமிழ்களைத் தொட்டு
அவளாயும்
எண்ணக் குமிழிகள் பட்டு
அவனாயும்

உருமாறிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயங்கள் அவள் தேவைப்படுகிறாள்
வெகு சில சமயங்களில் அவன்.
அவள் பெரும்பாலும் ஓங்காமலிருக்கிறாள்
அவன் அப்படியல்ல.

இரண்டும் சமான நிலையில்
ஒத்துப் போய் அமர்வதில்லை என்றாலும்
அவனுக்கும் அவளுக்குமிடையேயான
எனது தூரம்

எண்ண வெளிப்பாட்டின்
யதார்த்தத்தில் பொதிந்து கிடக்கிறது.

ஷீ-நிசி
27-04-2008, 09:19 AM
அதென்னவோ, எனக்கு இந்த வகை கவிதைகள் எளிதில் புரிய மறுக்கிறது.
5 முறைக்கும்மேல் படித்தபின்னும்...

நண்பர்களே முயற்சியுங்கள்!

சுகந்தப்ரீதன்
27-04-2008, 11:51 AM
அதென்னவோ, எனக்கு இந்த வகை கவிதைகள் எளிதில் புரிய மறுக்கிறது.
5 முறைக்கும்மேல் படித்தபின்னும்...

நண்பர்களே முயற்சியுங்கள்!

முயற்சி கைக்கூடவில்லை கவிஞரே...!!

யாராவது சொன்னால்தான் உண்டு.. இல்லையென்றால் எழுதியவர்தான் வந்து விளக்க வேண்டும்..!! அதுவரை காத்திருப்போம் கவிஞரே...:icon_rollout:

சூரியன்
27-04-2008, 12:04 PM
கவிதையின் வரிகள் அழகாக இருக்கின்றன.

ஆனால் அவை இந்த மரமண்டைக்கு புரிய மறுக்கின்றன.

பென்ஸ்
27-04-2008, 05:52 PM
ஆதவா...
என் பதிவுகள் குறைந்தது கூட நான் கவலைபடுவது இல்லை...
ஆனால் உன் கவிதைகள் குறைந்தது குறித்து எனக்கு வருத்தமே...
இருப்பினும் அந்த குறையை தீற்க்க இப்படி ஒரு கவிதையா...????

எல்லா உயிரினுளுன் அவனுள் சிறிது அவளும்
அவளுள் சிறிது அவனும் இருப்பது இயற்க்கையே..
அது உணர்வுகளால்...

ஆனால் எதோ ஒரு சாபம் குரோமோசோமின் குழப்பமாக ஹார்மோன்களை சீண்ட...
உணர்வுகள் ஓங்குகையில் வண்ணசிமிழ்களும்
உணர்வுகளை சீண்டையில் எண்ணகுமிழ்களும் அவிழ்க்கபடதான் செய்கின்றன...
இருப்பினும்
குழப்பம் மட்டும் இல்லையென்றால் இவர்களும் மனிதர்களய்...

தவறாய் புரிந்திருந்தால்,
இரசிப்புதன்மை விட்டுபோனதாய் மன்னித்துவிடு...

நாகரா
28-04-2008, 01:45 PM
நான்
அவளா? அவனா?

நிச்சயமற்ற சூழ்நிலையில்
அவளாயும் அவனாயும்
மாறி மாறி

வண்ணக்குமிழ்களைத் தொட்டு
அவளாயும்
எண்ணக் குமிழிகள் பட்டு
அவனாயும்

உருமாறிக் கொண்டிருக்கிறேன்.

சில சமயங்கள் அவள் தேவைப்படுகிறாள்
வெகு சில சமயங்களில் அவன்.
அவள் பெரும்பாலும் ஓங்காமலிருக்கிறாள்
அவன் அப்படியல்ல.

இரண்டும் சமான நிலையில்
ஒத்துப் போய் அமர்வதில்லை என்றாலும்
அவனுக்கும் அவளுக்குமிடையேயான
எனது தூரம்

எண்ண வெளிப்பாட்டின்
யதார்த்தத்தில் பொதிந்து கிடக்கிறது.

நான்
சிவமென்னும் அவனாய்
ஆதார இருப்பாய் அடங்கி
சக்தியென்னும் அவளாய்
ஆதாரத்தினின்று ஆரவாரமாய் எழுந்து

அடங்கியே இருந்தால்
சூன்யம்

ஆரவாரமாய் எழுந்தால்
பிரபஞ்சம்

சூன்யமாம் அவனே
எண்ணக் குமிழிகளாம்
எண்ணற்ற முட்டைகளிட்டு
ஓடுகளைப் பிளந்து
பிரபஞ்சமென்னும்
வண்ணக் குமிழ்களாய்
அவளாய்
ஆர்ப்பரித்து எழுகிறான்

சிவ அருவத்தின்
சக்தி உருவாக்கமே
பிரபஞ்ச வண்ணம்

அவனும் அவளும்
பின்னிப் பிணைந்து
ஒன்றிக் கிடக்கும்
காமப் புணர்ச்சியின்
காதல் கனியாய்
நான்

அவனோடவளாய்
அவனில் ஓங்கியிருக்கும்
அவள்

அவளோடவனாய்
அவளில் அடங்கியிருக்கும்
அவன்

சரி நிகர் சமானமாய்
ஒத்தமர்ந்த
அவர்களின் இடைவெளியில்லா
ஒருமையின் உறுதியாய்
நான்

வண்ணக் குமிழ்களாய்
வெளிப்படும்
எண்ணக் குமிழிகளின்
யதார்த்தத்தில்
பொதிந்து கிடக்கிறேன்.

உமது கவிதை என்னை உமிழச் செய்த கவிதை இது, வாழ்த்துக்கள் ஆதவரே! உமது எண்ண வெளிப்பாட்டின் யதார்த்தத்தில் பொதிந்து கிடக்கும் பன்முகப் பரிமாணத்தில் இதுவும் ஒரு முகம்.

ஷீ-நிசி
28-04-2008, 02:05 PM
ம்ம்ம்ம்ம்.... இப்பொழுது எனக்கு கொஞ்சம் புரிய வருகிறது...

இந்தக் கவிதை திருநங்கைகளைப் பற்றியா ஆதவா...?!

பூமகள்
28-04-2008, 04:57 PM
இந்தக் கவிதை திருநங்கைகளைப் பற்றியா ஆதவா...?!
எனக்கும் படித்தவுடன் இப்படி தான் தோன்றியது ஷீ..!! :icon_ush:
ஒருவேளை இயல்பாக ஒவ்வொரு 'திரு'வுக்குள்ளும் இருக்கும் பெண்மையின் படிநிலையைக் குறிக்குதோ???!! :confused::confused:

மேலும் தெளிவாக்க கவிதையின் சொந்தக்காரரே வந்து விளக்கட்டுமே..!! :icon_rollout:

ஆதவா
16-06-2008, 03:02 PM
நான் அவளா? அவனா?

அவள் என்பது ஒரு பெண்
அவன் என்பது ஒரு ஆண்

எதுவும் நிச்சயமில்லாத சூழ்நிலையில் ஆணாகவும் பெண்ணாகவும் மாறி மாறி,

பெண்ணாக இருப்பின் வண்ணக் குமிழ்களைத் தொட்டு, (அவ்வளவாக சிரமம் இல்லாமல் ஒரு விளையாட்டாய்)
ஆணாக இருப்பின் எண்ணக் குமிழிகள் பட்டு (எண்ண அலைகளால் அல்லல் பட்டு)

உருமாறிக் கொண்டிருக்கிறேன்.

சில நேரங்களில் பெண் வேடம் தேவைப்படுகிறது. ஆனால் மிகப் பல சமயங்களில் ஆண் வேடமே தேவைப்படுகிறது.

பெண் வேடம் அதிகம் அணிவதில்லை,
ஆண் வேடம் அப்படியல்ல

இவ்விருவரும் ஒத்துப் போவதில்லை என்னுள்,,,, என்னுள் இருக்கும் ஆண் பெண் உணர்வுகளுகிடையேயான எனது தூரத்தைக் கணக்கிடவேண்டுமானால்...

அது எனது எண்ணம் வெளியிடும் எதார்த்தத்தில் அடங்கி இருக்கிறது................


நன்றி ஷீ-நிசி, சுகந்தப்ரீதன். சூரியன்..

ஆதவா
16-06-2008, 03:06 PM
ஆதவா...
என் பதிவுகள் குறைந்தது கூட நான் கவலைபடுவது இல்லை...
ஆனால் உன் கவிதைகள் குறைந்தது குறித்து எனக்கு வருத்தமே...
இருப்பினும் அந்த குறையை தீற்க்க இப்படி ஒரு கவிதையா...????

எல்லா உயிரினுளுன் அவனுள் சிறிது அவளும்
அவளுள் சிறிது அவனும் இருப்பது இயற்க்கையே..
அது உணர்வுகளால்...

ஆனால் எதோ ஒரு சாபம் குரோமோசோமின் குழப்பமாக ஹார்மோன்களை சீண்ட...
உணர்வுகள் ஓங்குகையில் வண்ணசிமிழ்களும்
உணர்வுகளை சீண்டையில் எண்ணகுமிழ்களும் அவிழ்க்கபடதான் செய்கின்றன...
இருப்பினும்
குழப்பம் மட்டும் இல்லையென்றால் இவர்களும் மனிதர்களய்...

தவறாய் புரிந்திருந்தால்,
இரசிப்புதன்மை விட்டுபோனதாய் மன்னித்துவிடு...

மிகச்சரியாக உங்களால் கணிக்க முடியும் என்று எனக்குத் தெரியும் பென்ஸ் அண்ணா. மனதைப் படிப்பவராயிற்றே!! உங்களின் ரசிப்புத் தன்மை சிறிதும் குறையவில்லை........... மேலும் உங்களின் இப்பின்னூட்டத்தினால் என் கவிதை ஒளிபெற்றது........

கவிதைகள் மனதோடு கிடக்கின்றன அண்ணா. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போது நிம்மதியான இணைய உறவைப் பெற்றுள்ளேன் (Internet Connection). என் பதிவுகளோடு கவிதைகளும் நீளும்...... மீண்டெழுந்த எழுச்சி அடங்காமல் பொங்குகிறது.. கொட்டுவதற்கு மன்றம் தவிர வேறேது இடம்?

நன்றியுடன்
ஆதவன்

ஆதவா
16-06-2008, 03:10 PM
உமது கவிதை என்னை உமிழச் செய்த கவிதை இது, வாழ்த்துக்கள் ஆதவரே! உமது எண்ண வெளிப்பாட்டின் யதார்த்தத்தில் பொதிந்து கிடக்கும் பன்முகப் பரிமாணத்தில் இதுவும் ஒரு முகம்.

மிக்க நன்றி நாகரா அவர்களே! எம் கவி, உம்மை உமிழச்செய்தால் அத்தகைய மருத்துவத்தை நிச்சயம் செய்ய முயலுவேன்..

நன்றி நண்பர்களே!