PDA

View Full Version : அவதார் - மாற்றாதீர்கள்... கமலகண்ணன்



க.கமலக்கண்ணன்
26-04-2008, 04:29 PM
அவதார் - மாற்றாதீர்கள்...

அவதார் என்பது உங்களின் முகம் போன்றது. அதாவது உங்களின் முகத்தையும் உங்களுடைய பெயரை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார்களோ அப்படித்தான் உங்களின் அவதாரையும் உங்களின் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள். மற்ற மன்ற நண்பர்கள். புதிதாக அறிமுகம் ஆகும் நண்பர்கள் உங்களின் பெயர் நினைவிருக்கறதோ இல்லையோ கண்டிப்பாக முகம் நினைவிருக்கும்.

அவதார் மற்றும் அல்லாமல் உங்களின் பெயரை மாற்றிவிட்டால் நீங்கள் தான் நினைக்க முடியாது. வேறு யாரே என்று தோன்றும். அல்லது உங்களின் பழைய திரிகளை பார்த்தபின் அது நீங்கள் தான் என்று முடிவுக்கு வரமுடியும். அதனால் அவதாரை மாற்ற வேண்டாம். அல்லது இப்படி செய்யலாம், உங்களின் அவதாரின் கருத்தை மாற்றாமல் வேறு படத்தை மாற்றலாம், (உ-ம்) நடிகர் வடிவேலு அவர்களின் படத்தை வைத்திருந்த நான் அவரை அதே போல உள்ள மற்ற படத்தை மாற்றியிருக்கிறேன். அது அதுபோல மாற்றினால் சரி... அப்போது இந்த குழப்பம் வராது...

எனது முதல் படமும் - இரண்டாவது படமும்

http://www.tamilmantram.com/vb/customavatars/avatar2574_3.gif http://www.geocities.com/kamal_kkk/kamal.gif
சிலருடைய பெயரை சொன்னால் அவர்கள் அவதார் நினைவில் வருவது...

ஓவியா அவதார்

http://www.geocities.com/kamal_kkk/Oviya.gif

இதயம் அவதார்

http://www.geocities.com/kamal_kkk/Ithayam.gif

பூமகள் அவதார்

http://www.geocities.com/kamal_kkk/poomagal.gif

ஓவியா
26-04-2008, 05:35 PM
அவதார் - மாற்றாதீர்கள்...

ஓவியா அவதார்

http://www.geocities.com/kamal_kkk/Oviya.gif

இதயம் அவதார்

http://www.geocities.com/kamal_kkk/Ithayam.gif

பூமகள் அவதார்

http://www.geocities.com/kamal_kkk/poomagal.gif



இங்கேயும் நாந்தான் முதல் ஆளா, :D:D

ஆமாம் இதுவும் உண்மையே எனக்கும் சிலரின் பெயரை நினைத்தாலே அவர்களின் அழகான அவதார்தான் நியாபகம் வரும்

உதாரணத்திற்க்கு

தாமரையைண்ணா
ஆதவா
பூமகள்
அறிஞர்
கவிதா
அக்னி
மணியா அங்கிள்
இதயம் அண்ணா
என்னவன் விஜய்
அன்புரசிகன்
பென்ஸ்
lolluvathiyar
Mano.G.
mukilan
meera
பிச்சி

பின் கண்மூடி பார்த்தேன்,
ஒரே ஒரு அவதார் தான் நெஞ்சில் நின்றது. அது........ :eek:

ஓவியா

ஓவியா

ஓவியா

ஓவியா

ஓவியா

ஓவியா

ஓவியா

ஓவியா


அண்ணா என் அவதாரை மாற்றி என் பெயரையும் மாற்ற வேண்டும் என்று என் ரொம்ப நாள் கனவில் இப்படி லாரி லாரியா மண்ணள்ளி துவி விட்டீர்களே!!! (டமாசுக்கு)

க.கமலக்கண்ணன்
26-04-2008, 05:41 PM
அப்படி இல்லையம்மா மாற்ற கூடாது என்ற வேண்டுதல் என்றுதான் இந்த திரியே சரியா தங்கையே?

ஓவியா
26-04-2008, 05:46 PM
அப்படி இல்லையம்மா மாற்ற கூடாது என்ற வேண்டுதல் என்றுதான் இந்த திரியே சரியா தங்கையே?

சரியான வேண்டுதல்தான் ஆனால்,

அது சிலரின் சுதந்திரத்தை கட்டிப்போட நினைப்பது போல் அல்லவா இருக்கும்.

இருப்பினும் இது 'பர்சனல் இன்ட்ரெஸ்ட் இஸு' அவர்களின் விருப்பத்திற்க்கே விடுவது நல்லது அண்ணா.

ஒரே அவதார் இருந்தால் சிறப்புதான். :icon_b:

க.கமலக்கண்ணன்
26-04-2008, 05:47 PM
ஒரே அவதார் இருந்தால் சிறப்புதான். :icon_b:

இதை இதை இதைதான் எதிர்பார்த்தேன் தங்கையே...

அன்புரசிகன்
26-04-2008, 05:56 PM
அமரா... மருவாதயாக பாய்வதை நிறுத்திவிட்டு பழய அவதாருக்கு வரவும்..... :D

ஓவியன்
26-04-2008, 06:08 PM
உதாரணத்திற்க்கு

தாமரையைண்ணா

அக்கா, தாமரையண்ணா இப்போது வைத்திருப்பது எனக்குத் தெரிந்து இரண்டாவது அவதாராச்சே...!! :icon_rollout:

மன்றத்தில் எஸ்.ரீ.செல்வனாக இருக்கையில் வேறு அவதார் வைத்திருந்தாரே......!! :mini023:

ஓவியன்
26-04-2008, 06:15 PM
என்னைப் பொறுத்த வரையில் மன்றத்து உறவுகளின் முகமென்றால் அவர்களது பதிவுகள் தான்...

அவர்கள் என்ன அவதார் வைத்திருந்தாலும், எத்தனை முறை மாற்றினாலும் பிரச்சினை இல்லை.......


அவதார் - மாற்றாதீர்கள்...

அவதார் என்பது உங்களின் முகம் போன்றது. அதாவது உங்களின் முகத்தையும் உங்களுடைய பெயரை மற்றவர்கள் எப்படி நினைவு வைத்துக் கொள்கிறார்களோ அப்படித்தான் உங்களின் அவதாரையும் உங்களின் பெயரையும் நினைவில் வைத்துக் கொள்கிறார்கள்.

கமலக்கண்ணன்...!!

அவதார் தான் முகம் போன்றது என்பதை என்றுமே என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனென்றால் மன்றத்து உறவுகள் அனைவரது மனதைக் கொள்ளை கொண்ட இளசு அண்ணாக்கும் பாரதி அண்ணாக்கும் எந்தவொரு அவதாரும் கிடையாதே.......

அவர்களுக்கு முகமாயிருந்து பல அன்பு உறவுகளைப் பெற்றுத்தந்தவை, அவதாரில்லை - மாறாக அவர்களது பொன்னான பதிவுகளே......!!


அவதார் மற்றும் அல்லாமல் உங்களின் பெயரை மாற்றிவிட்டால் நீங்கள் தான் நினைக்க முடியாது. வேறு யாரே என்று தோன்றும். அல்லது உங்களின் பழைய திரிகளை பார்த்தபின் அது நீங்கள் தான் என்று முடிவுக்கு வரமுடியும்.

மன்றத்தில் அடிக்கடி அவதார் மாற்றும் வித்தை தெரிந்தவர்கள், என்றென்றும் எனதருமை மயூ மற்றும் ராஜா அண்ணா, அவதார் மாற்றுவதால் அவர்கள் இருவரினதும் அடையாளம் தொலைந்திருக்கிறது என யாராவது நிரூபித்தால், நானும் வருங்காலத்தில் என் அவதாரை மாற்றாமல் இருக்கின்றேன்......!! :rolleyes:

அமரன்
26-04-2008, 07:13 PM
தனிமடலில் திட்டி இருக்கலாம். இப்படி மீட்டிங் போட்டு..:medium-smiley-045::medium-smiley-045: (டமாசு கண்ணா.. பெரிதாக எடுத்துக்கொள்ளாதீங்க..) வீட்ல கூட "நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இருக்கியே"ன்னு அழகு தமிழில் திட்டுவாங்க..


அமரா... மருவாதயாக பாய்வதை நிறுத்திவிட்டு பழய அவதாருக்கு வரவும்..... :D

ஆள் சோம்பேறி.. அவதாராவது பாயட்டுமே.. விட்டு விடுங்கள் ரசிகா..

இதுல இன்னொரு ரகசியமும் இருக்கு.. உங்களுக்கு மட்டும் எழுதுறேன்.. கண்ணைக் கொடுங்கள்.. நான் சீரியஸாக சொன்னாலும் நகைச்சுவை ஆக்கிவிடுகிறார்கள் நம்ம மக்கள். இதைப்பார்த்தாவது அவர்களுக்கு என்மேல் பயம் வரட்டும்னுதான் இந்த அவதார்.

ஆதவா
26-04-2008, 07:58 PM
தற்காலிகமாக ஒரு அவதாரத்தில் நுழைந்து பின் நிரந்தரமாக்கப்பட்ட, ஒரு பெண்ணின் கோர முகத்தை உடைய, சிலர் சொல்லி மாற்ற நினையாத ஒரு அவதாரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறது எனது அவதாரம். மாற்ற வேண்டுமென்ற எண்ணம் எனக்கு எடுக்கவில்லை. ஒரு வித அடையாளம் கிடைக்கலாம்.. ஆனால் அதுவே அப்பதிவாளரின் முகமாகிவிடாது..

மாற்றல்- அவரவர் உரிமை, எத்தனை தான் மாற்றினாலும், அவரவர் பதிவுகளே அவரை அடையாளம் காட்டுவன.

ஆனால், தயவு செய்து பெயரை மட்டும் மாற்றிவிடாதீர்கள்.

(என்னதான் விராடன் என்று பெயர் மாற்றீக் கொண்டாலும் ஜாவா வே இன்னும் மனதில் இருக்கிறது... அது போல...)

விகடன்
26-04-2008, 08:00 PM
அமரன்...
என்ன கரும்புலி தெங்கிழக்குத்திசையை நோக்கியா பாய்கிறது?
ஏதாவது முன்னெச்சரிக்கை செய்தி இல்லையே???

பி.கு: இப்படி ஒரு அவதார் மனதிலிருக்கலாம். மக்கள் மத்தியில் வேண்டுமா?

விகடன்
26-04-2008, 08:05 PM
(என்னதான் விராடன் என்று பெயர் மாற்றீக் கொண்டாலும் ஜாவா வே இன்னும் மனதில் இருக்கிறது... அது போல...)
உதாரணத்துக்கும் நாந்தானா?


-----------------------------------------------
மிக்க நன்றி ஆதவா!

என்னை ஏதோ ஒரு வழியில் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்களே. அது போதும் எனக்கு....

பெயர், புனைபெயரெல்லாம் குறிப்பிட்ட ஒருவரை அடையாளப்படுத்துபவனவே தவிர அவரை அவமானப்படுத்துபவனவில்லை.

........இது மஹாபாரதத்தில் வாசித்தது.

விகடன்
26-04-2008, 08:12 PM
நானும் வருங்காலத்தில் என் அவதாரை மாற்றாமல் இருக்கின்றேன்......!! :rolleyes:

என்னத்தை நீர் மாற்றிவிடப்போகிறீர்..
கண்ணைத்தானே???
அந்த இரண்டுகண்கள் எப்படி இருந்தால்த்தான் என்ன!!!
அதை ஓவியன் என்று எந்த புதியவனும் சொல்லிவிடுவான்.

அப்படி மாற்றுவதாக இருந்தால் நான் ஒரு உதவி தரட்டா???

அடுத்ததாக மாற்றும்போது திருமதி.ஓவியனின் கண்களை போட்டுவிடும் :)

அமரன்
26-04-2008, 08:24 PM
அமரன்...
என்ன கரும்புலி தெங்கிழக்குத்திசையை நோக்கியா பாய்கிறது?
ஏதாவது முன்னெச்சரிக்கை செய்தி இல்லையே???

பி.கு: இப்படி ஒரு அவதார் மனதிலிருக்கலாம். மக்கள் மத்தியில் வேண்டுமா?
ஆகா...
கிளம்பிட்டாய்ங்கய்யா கிளம்பிட்டாய்ங்கய்யா..
மேற்கிலிருந்து கிழக்கே போகத் துடிக்கும் சிறுத்தையைய்யா இது..

விகடன்
26-04-2008, 08:31 PM
மேற்கிலிருந்து கிழக்கே போகத் துடிக்கும் சிறுத்தையைய்யா இது..

கிழக்கா???
சந்தோஷமான செய்தியல்லவா அது.
சூரியன் உதிக்கும் திசையும் கூட :confused:

ஷீ-நிசி
27-04-2008, 12:21 AM
கமலக்கண்ணன் தான் சொல்ல நினைத்ததை சரியாக தோன்றவில்லையென்று கருதுகிறேன்..

உதாரணத்திற்கு ஒரு திரியில் ஒரு பக்கத்தில் 25 பின்னூட்டங்கள் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை கொஞ்சம் வேகமாக ஸ்க்ரோல் செய்யும்போது அவர்களின் அவதாரை பார்த்தபடியே யார் யார் பின்னூட்டமிட்டிருக்கிறார்கள் என்பதை விரைவில் கணிக்கமுடியும்.

அதாவது ஒருவரின் பெயரைவிடவும், அவரின் அவதார் உடனடியாக மூளையை சென்றடைகிறது. ஓவியா, ஓவியன் இந்த இருவரின் பெயரையும் வேகமாக பார்த்தால் நிதானிக்கும் நேரத்தைக் காட்டிலும், அவர்களின் அவதார் இன்னாரென்று மூளை நிதானிக்கும் நேரம் வேகம்.

எனக்கு ஆதவா என்றால் தலைமுடி விரிந்திருக்கும் அந்த புகைப்படம்தான் நினைவில் வரும். ஓவியா என்றால் ராணி போன்ற அந்த படம்தான் நினைவுக்கு வரும், ஓவியன் என்றால் அந்த கண்கள் தான் நினைவிற்கு வரும். இவைகள் எளிதில் ஞாபகத்திற்கு கொண்டுவர ஒரு அடையாளம்.

இதைத்தான் கமலக்கண்ணன் சொல்லவந்திருப்பார் என்று நம்புகிறேன்.
மற்றபடி ஒருவரின் பதிவுகள்தான் ஒருவருக்கு அடையாளமாய் இருக்குமே தவிர அவதார் அடையாளமாக இருக்காது என்பதை யாரும் மறுக்கமுடியாது.

அனுராகவன்
27-04-2008, 02:16 AM
நண்பர்களே அவதார் மாற்றுவது தன் எண்ணத்தை மாற்றுவதற்கு சமம் என்று சொல்கிறேன்..பொதுவாக சாமி படம் வைத்துக்கொண்டோம் என்றால் பக்தி பரவசமடையக்கூடும்..அதையே ஒரு நடிகன் அல்லது நடிகை என்று பிடித்த ரசிகர்களின் படம் ஒரு மயக்க நிலையே உண்டு பண்ணும்..
அவதார் மாற்றாதீர் என்று கமலகண்ணன் சொன்னது குறிப்பாக எனக்கு என்றே தோன்றுகிறது..காரணம் சமீகாலமாக நடிகை மற்றும் சாமி படம் ,பூ படம் தொடர்ந்தது..இந்த திரியே பார்த்தவிடன் என் அவதார் இந்த படம் http://www.tamilmantram.com/vb/C:\Documents and Settings\User\My Documents\My Pictures\nat-1.png நான் இனி மாற்று எண்ணம் இல்லை.
அதனால் யாரும் இப்படி கடைபிடிக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை.
அவதார் மாற்றுவது அவரவர் விருப்பம் என்று நான் நினைக்கிறேன்..
அதனால் என்னை யாரும் கோபித்துகொள்ள வேண்டாம் ..
இது என் கருத்து..

க.கமலக்கண்ணன்
27-04-2008, 03:49 PM
அதாவது ஒருவரின் பெயரைவிடவும், அவரின் அவதார் உடனடியாக மூளையை சென்றடைகிறது. ஓவியா, ஓவியன் இந்த இருவரின் பெயரையும் வேகமாக பார்த்தால் நிதானிக்கும் நேரத்தைக் காட்டிலும், அவர்களின் அவதார் இன்னாரென்று மூளை நிதானிக்கும் நேரம் வேகம்.

எனக்கு ஆதவா என்றால் தலைமுடி விரிந்திருக்கும் அந்த புகைப்படம்தான் நினைவில் வரும். ஓவியா என்றால் ராணி போன்ற அந்த படம்தான் நினைவுக்கு வரும், ஓவியன் என்றால் அந்த கண்கள் தான் நினைவிற்கு வரும். இவைகள் எளிதில் ஞாபகத்திற்கு கொண்டுவர ஒரு அடையாளம்.

இதைத்தான் கமலக்கண்ணன் சொல்லவந்திருப்பார் என்று நம்புகிறேன்.


அதேதான் ஷீ-நிசி நீங்கள் சொன்னது முழுக்க உண்மையே...

அதைதான் வலியுருத்துகிறேன்... சற்று விளக்கமாக எடுத்துரைத்தமைக்கு நன்றி

அன்பு ஷீ-நிசி

பென்ஸ்
27-04-2008, 05:29 PM
அவதாரம்...

ஒரு முகமூடி....

அதை தேர்ந்தேடுக்கையில் இருக்கும் மனநிலைக்கேற்ற அவதாரம் பதியபடும்..
அல்லது நீண்ட நாள் கொண்டிருந்த (மற்ற தளங்களிலோ அல்லது மனதிலோ).
மனம் மாறும் போது முக மூடியும் மாறும்... தவறில்லை
பலர் ஒரே முகத்தை கொடுத்து கொண்டிருப்பர்... மாற்ற மனம் வராது...
(ஒரே தலை முடி ஸ்டைல் வைத்திருப்பவர்கள் வேறு மாதிரி மாற்ற முயற்சிப்பதில்லையே அது போல்)...

அவதாரம்..
அவரவர் தனிபட்ட உரிமை...
அதை பறிக்க நினைக்கவேண்டாம்...
விட்டு விடலாம், அவரவர் விருப்பதிற்க்கு....

ஆனால் கமல் அவர்கள் சொல்லுவது மக்கள் வாசிப்பதை எளிதாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கமல், மன்றத்தில் உங்களை போல் ஒருவர் அவதாரம் வைத்திருக்கிறார்.. நம்ம மொக்கசாமி தான்.

இதயம்
28-04-2008, 07:00 AM
அவதார் என்பது என்னைப்பொருத்தவரை முகம் தெரியா உறவுகளை உணர கிடைத்த ஓர் வழி என்று கூட சொல்லலாம். வாத்தியாரின் நகைச்சுவை உணர்வை வெளிக்காட்ட ஷ்ரெக் உருவம், ஓவியா தன்னை எப்பொழுதும் அழகாக நினைத்துக்கொள்வதாக சொல்லும் அவருடைய அழகிய பெண்ணின் முகம், தனக்குள் இருக்கும் வன்முறையை வெளிக்காட்டும் ஆதவாவின் அவதார், தன் குணங்களை அதே கொள்கைகளை கொண்ட முகம் மூலம் காட்டும் அறிஞர், சிறுத்தையின் சீறல் மற்றும் வேகமுமாய் தன்னை உணரும் அமரன், ஒரு குழந்தையாய் தன்னை வெளிப்படுத்தும் மலர், மலரின் அழகும், மென்மையும் கொண்ட பெண்ணாய் உணரும் பூக்களின் பின்னே மறையும் பூ, தான் ஒரு வழிகாட்டியாய் அமையவேண்டும் என்ற நினைப்பில் பென்ஸின் அவதார், தீக்கனலாய் சமூகத்துக்கு தன் கருத்துக்கள் போய் சேரவேண்டும் என நினைக்கும் அக்னி என்று ஒவ்வொரு அவதாரும் அவர்களின் அகத்தை காட்டும் கண்ணாடிகள்..! பல குணங்களின் கூட்டுக்கலவையாக மனதில் உள்ளவற்றில் ஒரு பகுதியை மட்டும் இங்கு தன் அவதாராக ஆக்கியிருக்கிறார்கள் நம் உறவுகள் என்பது என் கணிப்பு..!!

மேலே சொன்ன அனைத்தும் அவதாரை கொண்டு நான் அவர்களை உணர்ந்தவை. இவை முரண்பாடாகவும் இருக்கலாம். ஆனால், ஒவ்வொன்றும் சொல்வது வெவ்வேறு கதைகள்..! இது வரை முகம் காணாததால் அவர்களின் அவதார் தான் அவர்களாகிறது பெரும்பாலான நேரங்களில் நமக்கு..! எனக்கு பிடித்த ஷ்ரெக் படம் காணும் போதெல்லாம், அல்லது அந்த புகைப்படத்தை எங்கு கண்டாலும் எனக்கு வாத்தியார் தான் நினைவுக்கு வருகிறாரே தவிர ஹாலிவுட்டின் கற்பனை கதாபாத்திரம் அல்ல..! அவதார் மாற்றாமல் இருப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால், மாற்றவேண்டும் என வற்புறுத்த மாட்டேன். பென்ஸ் சொன்னது போல் அவரவர்களின் மனநிலைக்கேற்ப அவதாரை மாற்றும் எண்ணம் வரலாம். அன்பு தான் அனைத்து பிரச்சினைக்கும் தீர்வு என்பதால் எனக்கு இதயம் என்ற பெயரும், அதன் அவதாரும்..! இப்போதைக்கு இதய அவதாரை மாற்றும் எண்ணம் எனக்கில்லை இதுவரை.! ஒருவேளை அன்பிற்கு அடங்கா சோதனை வரும் பொழுது இதயம் உதைக்கும் கழுதையாக கூட மாறலாம். ஆக, அவதார் என்பது அவரவர் மனநிலையின் மறுபிரதிபலிப்பு. அதில் கை வைக்க யாருக்கும் உரிமை இல்லை..!!

arun
26-12-2008, 05:51 PM
அவதார் என்பது நமது பிரதிபலிப்பு என்று கூட சொல்லலாம் சிலர் தங்களுக்கு பிடித்தவரை அவதாராக வைத்து கொள்வார்கள்

அவதார் மாற்றாமல் இருப்பது ஒரு விதத்தில் நல்லது தான் என நினைக்கிறேன்

பாலகன்
27-12-2008, 05:29 AM
அவதார் மாற்றம் என்பது ஒன்னும் பெரியவிசயமாக எனக்கு படவில்லை கமலக்கண்ணா.....

நமது கருத்துக்களுக்கும் அதன் ஆளுமைக்கும் ஒரு தனிப்பட்ட மரியாதை நமக்கு மன்றத்தில் எப்போதும் இருக்கும்... அதை யாராலும் மாற்றமுடியாது..... வெறும் அவதாரை மாற்றினாலும் அந்த தனிப்பட்ட செல்வாக்கு என்றுமே குறையாது என்பது எனது கருத்து