PDA

View Full Version : புரிதல்



நாகரா
26-04-2008, 04:05 PM
வானம்
வார்த்தைகளால்
விவரிக்க இயலாதவாறு
விரிந்து கிடக்கிறது.
வாயடைத்துப் போய்ப்
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
சின்னஞ்சிறு சிட்டொன்று
குறுக்கே
வேகமாய்ப் பறக்கிறது.
சிறகுகள்
எனக்கும் இருப்பது
சட்டென
நினைவில் வர
உடனே
அவை விரிய
வானம் புரிகிறது.

ஓவியன்
26-04-2008, 04:11 PM
உண்மை தான் நாகரா அவர்களே, சிறுவயதில் கட்டிய சிறு தளையை வளர்ந்த பின்னும் அறுக்க முயற்சிக்காமல் அடி பணிந்து நிற்குமாம் பலசாலி(!!) யானை...!!

பலருக்கு தம் பலமும் பலவீனமும் சரி வரத் தெரிவதில்லை, தெரிந்து விட்டால் வானமும் வசப்படும்....

உங்கள் கவிச் சிட்டு போல.......!! :)

பாராட்டுகள் அண்ணா...!! :icon_b:

நாகரா
26-04-2008, 04:19 PM
உம் பாராட்டுகளுக்கு நன்றி ஓவியன்

அனுராகவன்
27-04-2008, 01:57 AM
நாகராவிற்கு என் நன்றியும்,வாழ்த்தும்.....
வானம் வசப்படுமே!!
நாம் எழுவோம்..
ம்ம் நல்ல கவி கவிஞரெ!!

நாகரா
27-04-2008, 04:20 AM
உம் பின்னூட்டத்துக்கு நன்றி அனு

Keelai Naadaan
27-04-2008, 03:55 PM
உங்கள் கவிதையை படித்தவுடன் பாரதியின் பின்வரும் கவிதை வரிகள் நினைவுக்கு வந்தது.

விட்டு விடுதலையாகி நிற்ப்பாய்
சிட்டுக்குருவியைப் போலே
அந்த சிட்டுக்குருவியைப் போலே...

நன்றிகள்

பென்ஸ்
27-04-2008, 06:14 PM
சொல்ல வந்ததை அழகாக சொல்ல மிக சிறந்த சொல்லாற்றல் அவசியம்...
அது மிக மிக அருமையாக உங்களிடன் இருக்கிறது நாகராஜன்...

மனசிறகுக்கு வானமே எல்லை என்று இன்னும் அழகாக சொல்ல முடியுமா என்ன??

உங்கள் கவிதைகளை வாசித்து வியந்து வருகிறேன்....
வாழ்த்துகள்...

நாகரா
28-04-2008, 03:31 AM
கீழை நாடான், பென்ஸ், உம் பின்னூட்டங்களுக்கு நன்றி.