PDA

View Full Version : உன்னால் முடியுமடா தம்பி



நாகரா
26-04-2008, 03:52 PM
முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி

விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி

அறுந்த காலும் முளைக்கும்
மேலே எழ முயன்றால் தம்பி

அறுந்த கரமும் துளிர்க்கும்
ஒன்றைச் செய முனைந்தால் தம்பி

இரும்புச் சிறைகள் உடையும்
நீ நினைத்து விட்டால் தம்பி

விண்ணும் மண்ணும் சிலிர்க்கும்
நீ எழுந்து விட்டால் தம்பி

எண்ணும் இலக்கு முடியும்
நீ நடந்து விட்டால் தம்பி

பண்ணும் சிறப்பால் நிற்பாய்
நீ சரித்திரத்தில் தம்பி

முடங்கிக் கிடக்க வேண்டாம்
நீ களத்துக்கு வா தம்பி

முனையிலே முகத்து நின்றால்
நீ வென்றிடுவாய் தம்பி

வறுமை வறுமை வறுமை
இனவேர் அறுக்கும் தம்பி

பொருள்செய் பொருள்செய் பொருள்செய்
உன்னினம் உயரும் தம்பி

அருள்கொள் அருள்கொள் அருள்கொள்
மனிதம் உய்யும் தம்பி

வலிமை வலிமை இன்றேல்
நலியும் நன்மை தம்பி

வளமை வளமை வளமை
உலகம் மதிக்கும் தம்பி

பொருளும் வலியும் வளமும்
நீ செய்து விடு தம்பி

அருளாலே உலகை நன்றாய்
நீ ஆண்டு விடு தம்பி

முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி

விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி

எண்ணம்
26-04-2008, 04:16 PM
அருளாலே உலகை நன்றாய்
நீ ஆண்டு விடு தம்பி

முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி



இது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் :icon_b:

நாகரா
26-04-2008, 04:21 PM
இது விரைவில் நடக்கும் என்று நம்புகிறேன் :icon_b:

எண்ணம் திண்ணமாயிருந்தால் நிச்சயம் அருளாட்சி நடக்கும் அன்பரே! உம் பின்னூட்டத்துக்கு நன்றி, எண்ணம்.

அனுராகவன்
26-04-2008, 05:04 PM
நன்றி நாகரா..
உந்தன் கவிகள் மிக அருமை..
தொடந்து வருகிரேன்..
பின்னோட்டம் பிரகு தருகிறேன்....

நாகரா
26-04-2008, 05:13 PM
நன்றி அனு

ஓவியன்
29-04-2008, 02:06 PM
விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி

விழித்துக் கொண்டாலே விடியல் தான்...
ஆனால் இந்த சின்ன சிறு உண்மை பலருக்குத் தெரிவதில்லை...!!

அதனால் தான் உறக்கத்தில் இருந்து கொண்டே
விடியவில்லையென அங்கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்...!!

அத்தகையோருக்கு விடியலைக் காட்ட
சந்த சுத்தத்துடன் இழைத்த கவி அருமை அண்ணா..!! :icon_b:

நாகரா
29-04-2008, 02:17 PM
உம் பொன்னான பின்னூட்டத்துக்கு நன்றி தம்பி ஓவியன்.

பாலகன்
29-04-2008, 07:20 PM
முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி
அருமையான ஊக்குவிப்பு நாகரா


விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி
நிதர்சன உண்மை நாகரா



அறுந்த காலும் முளைக்கும்
மேலே எழ முயன்றால் தம்பி

அறுந்த கரமும் துளிர்க்கும்
ஒன்றைச் செய முனைந்தால் தம்பி

இரும்புச் சிறைகள் உடையும்
நீ நினைத்து விட்டால் தம்பி

விண்ணும் மண்ணும் சிலிர்க்கும்
நீ எழுந்து விட்டால் தம்பி

எண்ணும் இலக்கு முடியும்
நீ நடந்து விட்டால் தம்பி

பண்ணும் சிறப்பால் நிற்பாய்
நீ சரித்திரத்தில் தம்பி
தனியொரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை தர வல்ல வலிமையான வரிகள்...... தலைவணங்குகிறேன்



முடங்கிக் கிடக்க வேண்டாம்
நீ களத்துக்கு வா தம்பி

முனையிலே முகத்து நின்றால்
நீ வென்றிடுவாய் தம்பி

வறுமை வறுமை வறுமை
இனவேர் அறுக்கும் தம்பி

பொருள்செய் பொருள்செய் பொருள்செய்
உன்னினம் உயரும் தம்பி

அருள்கொள் அருள்கொள் அருள்கொள்
மனிதம் உய்யும் தம்பி

வலிமை வலிமை இன்றேல்
நலியும் நன்மை தம்பி

வளமை வளமை வளமை
உலகம் மதிக்கும் தம்பி

அருமையான சமுதாய சிந்தனையான வரிகள் நாகரா



பொருளும் வலியும் வளமும்
நீ செய்து விடு தம்பி

அருளாலே உலகை நன்றாய்
நீ ஆண்டு விடு தம்பி
பொருள் ஈட்டியபின் ஒரு சிலரின் சாயம் வெளுத்துவிடுவதை நன்பர் குறிப்பிடுகிறார் போலும்,,, பொருளும் வலிமையும் வந்தால் அருள் நமக்கு வருமா என்பது சந்தேகமே,,,,,, ஆனால் வரிகள் அருமை


முடியும் முடியும் முடியும்
உன்னால் முடியுமடா தம்பி

விடியும் விடியும் விடியும்
நீ விழித்து விட்டால் தம்பி[/QUOTE]

[/QUOTE]
மீன்டும் முற்போக்கான விழிப்புணர்வு வரிகள்

அன்புடன்
பில்லா

நாகரா
30-04-2008, 03:16 AM
பில்லா, கவிதையை மொத்தமாக அலசியிருக்கும் உம் பொன்னான பின்னூட்டத்துக்கு நன்றி பல.