PDA

View Full Version : ஐபிஎல் கவர்ச்சி ஆட்டம் : இந்தி நடிகர் சத்ருகன் நக்கல்..!



ராஜா
26-04-2008, 01:18 PM
இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளின்போது மைதானத்தில் நடனமாடுவதற்கு, 'சியர் கேர்ள்ஸ்' என்றழைக்கப்படும் உற்சாகமூட்டும் பெண்களுக்குப் பதிலாக, வறுமையில் வாடும் மும்பை பார் கேர்ள்ஸுக்கு வாய்ப்பளிக்கலாமே என்று நடிகரும், அரசியல்வாதியுமான சத்ருகன் சின்ஹா கேட்டுக்கொண்டுள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின்போது மைதானத்தில் சியர் கேர்ள்ஸைக் கொண்டு நடனமாடச் செய்வது, கிரிக்கெட்டுக்கே இழுக்கு ஏற்படுத்துவதாகவுள்ளது என்று செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ள சின்ஹா விமர்சித்துள்ளார்.

'சிக்சர்களுக்கும், ஃபோர்களுக்கும் பிறகு அத்தகையோரின் நடனம் அவசியம் எனில், மகாராஷ்டிர அரசால் தடை செய்யப்பட்டு, வேலையின்றி வாடும் பார் கேர்ள்ஸுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது மேலானது' என்றார்.

ஐபிஎல் போட்டி நடக்கும் மைதானத்தில் வெளிநாட்டு சியர்ஸ் கேர்ள்ஸின் நடனம், மிகுந்த ஆபாசம் நிறைந்ததாகவுள்ளது என்று சாடிய அவர், 'இப்போட்டிகளில் கிரிக்கெட்டைக் காண்பதே மிகவும் சிரமமாகவுள்ளது' என்று குறிப்பிட்டார்.

இருபதுக்கு 20 போட்டி வடிவம் குறித்து கருத்து தெரிவித்த அவர், 'ஐந்து நாள் போட்டிகள், ஒரு நாள் ஆனது; ஒரு நாள் போட்டிகள் இப்போது 20 ஓவர் வடிவம் பெற்றுள்ளது; இனி, டாஸ் வெல்லும் அணியே போட்டியை கைப்பற்றும் நிலை வந்துவிடுமோ என அச்சமாகவுள்ளது' என்று கேலியுடன் விமர்சித்தார்.

திரைப்பட நடிகராக இருந்து அரசியல்வாதியான சத்ருகன், வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(மூலம் - வெப்துனியா)

எண்ணம்
26-04-2008, 01:32 PM
உற்சாகமூட்டும் பெண்கள், விளையாட்டு வீரர்களுக்காகவா அல்ல்து பார்வையாளர்களுக்காகவா ?

arun
05-05-2008, 07:33 PM
உற்சாகமூட்டும் பெண்கள், விளையாட்டு வீரர்களுக்காகவா அல்ல்து பார்வையாளர்களுக்காகவா ?

நல்ல கேள்வி.. :D:D

அன்புரசிகன்
06-05-2008, 02:17 AM
தற்போது நடைபெறுவது துடுப்பாட்டப்போட்டிகள் என்பதிலும் சிறந்த வியாபார சந்தையாக மைதானத்தை நோக்குவது சாலச்சிறந்தது. அவனவன் தனது சொந்தப்பணத்தை முதலிட்டிருக்கிறான். நாட்டின் இறையாண்மையை பாதிக்காது அவன் செய்யும் எந்த வியாபாரமும் சரியானது தான். இதை ஒரு பெரிய விடையமாக கருதுகிறார்கள். அந்த பெண்களிடம் கவர்ச்சி இருக்கிறதே தவிர ஆபாசம் இல்லை.....

இந்திப்படங்களை எடுத்து நோக்குங்கள். ஆங்கிலப்படங்கள் எவ்வளவோ தேவலை என தோன்றும். அந்தளவு ஆபாசம் சர்வ சாதாரணமாக இருக்கிறது.... யார் யாரை குறைசொல்கிறார்கள் என தெரியவில்லை....