PDA

View Full Version : ஸ்ரீசாந்துக்கு "பளார்"..ஹர்பஜன் ஆவேசம்..!



ராஜா
26-04-2008, 12:21 PM
பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்தை அறைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக விளக்கமளிக்க வேண்டும் என்று மும்பை அணி கேப்டன் ஹர்பஜனுக்கு, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஹர்பஜன் தனது தரப்பு விளக்கத்தை இம்மாதம் 28-ம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்ட நிலையில், இந்த விவகாரத்தை போட்டி நடுவர் ஃபரூக் எஞ்சினீர் விசாரிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹர்பஜன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் இருந்து அவர் நீக்கப்பட்டுவிடுவார்.

இதுதொடர்பான விசாரணையை மேற்கொள்ள ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடி உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்கு இந்தச் சம்பவம் உகந்ததல்ல என்றும், இதனை முக்கியப் பிரச்சனையாகக் கருதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மொஹாலியில் நேற்று பஞ்சாப் அணிக்கும், மும்பை அணிக்கும் இடையே நடந்த போட்டியின்போது, ஹர்பஜன் சிங்குடன் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தால் வேகப் பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மனமுடைந்து அழுதார்.

இவ்விருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டதால், பஞ்சாப் அணியின் வேகப் பந்துவீச்சாளரான ஸ்ரீசாந்தை, மும்பை இந்தியன் கேப்டன் ஹர்பஜன் சிங் அறைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பிறகு, ஸ்ரீசாந்தை சமாதானப்படுத்தும் விதமாக நீண்ட நேரம் பேசி ஹர்பஜன் மன்னிப்பும் கேட்டுள்ளதாக கிரிக்கெட் வட்டாரம் தெரிவித்தன.

இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு ஹர்பஜனிடம், "ஹார்ட் லக்" என்று வெறுப்படையச் செய்யும் தொனியில் ஸ்ரீசாந்த் பேசியதாகவும், அது கோபமாக உருவெடுத்ததால்தான் ஹர்பஜன் அறைந்தார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆட்டம் நிறைவடைந்த பிறகு, இச்சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு, ஹர்பஜன் பதிலளிக்க மறுத்துவிட்டார். கிரிக்கெட்டைப் பற்றி மட்டும் பேசுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

அதேநேரத்தில், இப்போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங்கும், அந்த அணியின் பயிற்சியாளர் டாம் மூடியும் ஹர்பஜனின் செயலைக் கடுமையாக கண்டித்தனர்.

இந்த விவகாரம் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளதுடன், பிசிசிஐ-யும் நடவடிக்கை மேற்கொண்டுள்ள சூழலில், பாதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளார். இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்றும் ஹர்பஜன் தனது மூத்த சகோதரர் போன்றவர் என்று அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)

ராஜா
26-04-2008, 12:33 PM
அதேநேரத்தில், இப்போட்டியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ் சிங், தனது அணியின் வீரரிடம் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஹர்பஜனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த அசிங்கமான சம்பவம் தன்னை மிகுந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும், ஸ்ரீசாந்துக்கு நிகழ்ந்ததை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.

இதே கருத்தைத் தெரிவித்த பஞ்சாப் அணி பயிற்சியாளர் டாம் மூடி, ஹர்பஜனின் நடவடிக்கை மிகவும் தவறானது என்று சுட்டிக்காட்டினார்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கியதில் இருந்து, தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளதால், ஹர்பஜன் தனது மும்பை அணி வீரர்களிடம் கூட கோபமாகவே நடந்து கொண்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பை வகித்து வருவது குறித்து அவரிடம் கேட்டபோது, தோல்வியுறுவதை தாம் ஒருபோதும் விரும்புவதில்லை என்றும், அந்தத் தருணங்களில் யாராலும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.
(மூலம் - வெப்துனியா)

ஷீ-நிசி
26-04-2008, 01:59 PM
ஹர்பஜன் தடை செய்யபடவேண்டும்......

அன்புரசிகன்
26-04-2008, 02:39 PM
அவருக்கு வாழ்க்கை கொடுத்ததே பந்து தான். அந்த பந்தையே பிடி எடுத்தபின் காலால் போட்டு உதைக்கும் கேவலம்.... இதை விட வேறு என்ன வேண்டும். அவரது ஒழுக்கத்திற்கு சான்றாக...

ஓவியன்
26-04-2008, 02:51 PM
ஹர்பஜன் ஒழுக்கயீனமாக நடந்து கொள்வது ஒரு புறமிருக்க, ஸ்ரீசாந்தின் நடவடிக்கைகள் மைதானத்தி இரசிக்கத் தக்கதாகவா இருக்கிறது...???

துடுப்பாட்ட வீரர்களை முறைப்பதும், கிண்டல் செய்வது போல வாயால் பழிப்பதும்.......

அவரது நடவடிக்கைகளும் இரசிக்கத் தக்கவை அல்லவே.......!! :frown:

ஷீ-நிசி
26-04-2008, 03:05 PM
http://i174.photobucket.com/albums/w81/avavanaraj/Cricket%20Worldcup/Cric-Sri-Hs.jpg

ஸ்ரீசாந்த்: பிரட்லீ ய மட்டும்.... கட்டி புடிச்சாங்க... ம்ம்..ம்ம்ம்..

வி.ஆர்.வி சிங்: விடு மச்சான்.. என்ன கூடத்தான் கட்டி புடிக்கல.. இதுக்குப் போயி அழலாமா?

ஓவியன்
26-04-2008, 04:07 PM
ஸ்ரீசாந்த்: பிரட்லீ ய மட்டும்.... கட்டி புடிச்சாங்க... ம்ம்..ம்ம்ம்..

வி.ஆர்.வி சிங்: விடு மச்சான்.. என்ன கூடத்தான் கட்டி புடிக்கல.. இதுக்குப் போயி அழலாமா?

பாம்பின் கால் பாம்பறியும்.....!! :D:D:D

________________________________________________________________________________________________

சூப்பர் டைமிங் ஜோக் ஷீ :icon_b:, நான் இன்னமும் சிரித்து முடியவில்லை...!! :)

அனுராகவன்
26-04-2008, 04:38 PM
ஷீ-நிசி!! ஸ்ரீசாந் அழுவது உங்களுக்கு ஜோக்கா இருக்கா..
அப்ப ஹர்பஜனின் நிலைமை என்னவாக இருக்கும்..

மன்மதன்
27-04-2008, 12:11 PM
ஸ்ரீசாந்த்: பிரட்லீ ய மட்டும்.... கட்டி புடிச்சாங்க... ம்ம்..ம்ம்ம்..

வி.ஆர்.வி சிங்: விடு மச்சான்.. என்ன கூடத்தான் கட்டி புடிக்கல.. இதுக்குப் போயி அழலாமா?


ஆஹா...:D:D

aren
27-04-2008, 04:24 PM
ஸ்ரீசந்த் செய்ததையும் மன்னிக்கமுடியாது. ஒரு டீம் தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்தால் தலைமை ஏற்றவருக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கவே செய்யும், அப்பொழுது அவரை இன்னும் வெறுப்பேத்தினால் இப்படித்தான் நடக்கும்.

இருவரையும் தடை செய்யவேண்டும். ஒருவரை மட்டும் தடை செய்வது தவறானது.

அன்புரசிகன்
27-04-2008, 04:36 PM
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஹர்பஜானுக்கு ஆயுள் தடை விதிக்கப்படலாம் என இன்று ஒரு செய்தி கண்டேன்... ஆப்புத்தான்....

பென்ஸ்
27-04-2008, 05:16 PM
ஸ்ரீசந்த் செய்ததையும் மன்னிக்கமுடியாது. ஒரு டீம் தொடர்ந்து மூன்று முறை தோல்வியடைந்தால் தலைமை ஏற்றவருக்கு கொஞ்சம் வருத்தம் இருக்கவே செய்யும், அப்பொழுது அவரை இன்னும் வெறுப்பேத்தினால் இப்படித்தான் நடக்கும்.

இருவரையும் தடை செய்யவேண்டும். ஒருவரை மட்டும் தடை செய்வது தவறானது.

மிக சரி ஆரென்...
விளையாட்டு வீரர்களுக்கு ஒழுக்கம் மிக முக்கியம்.. அது இருவருக்கும் இல்லை. இருவரையும் தூக்கினால் மற்றவர்களுக்கு இது பாடமாக இருக்கும்.
கங்கூலி இப்போ அடக்கி வாசிப்பது மாதிரி.