PDA

View Full Version : கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி?



shibly591
26-04-2008, 07:25 AM
கவிதைக்கு தலைப்பிடுவது எப்படி?எனக்கு தலைப்பிடும்போது சில சிக்கல்கள் நேர்கின்றன.முடிந்தால் தீர்த்து வையுங்கள்

அமரன்
26-04-2008, 07:35 AM
திரி இருப்பது கணினி சந்தேகங்களில். நீங்கள் கேட்டிருப்பது கவிதை தொடர்பானது. மன்றத்தில் கவிதைகளைப் பதிக்கும்போது தலைப்பை தட்டச்சுவதில் சிக்கலா? அல்லது உங்கள் கவிதைகளுக்கு பொருத்தமான தலைப்பை தெரிவு செய்வதில் குழப்பமா? எதுவானாலும் குழப்பத்தை தெளிவாகச்சொல்லுங்கள். அப்பதான் தெளிவாக்க முடியும்.

shibly591
26-04-2008, 08:00 AM
மன்னிக்கவும்.திரி மாறிவிட்டது...இதை ஒரு விவாதமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.அதாவது கவிதை ஒன்றுக்கு தலைப்பு மிக அவசியம்.இடப்படும் தலைப்பு கவிதையின் பொருளை நேரடியாக விளக்கத்தக்கவாறு தலைப்பிடுவது நன்றா?அல்லத மாறுபட்ட கவர்ச்சியான தலைப்பிடுவது நன்றா?

kavitha
26-04-2008, 08:35 AM
எனக்கு தலைப்பிடும்போது சில சிக்கல்கள் நேர்கின்றன.முடிந்தால் தீர்த்து வையுங்கள்
திடீரென இப்படி ஒரு சந்தேகம் வந்ததன் காரணம் என்ன ஷிப்லி? புத்தகம் வெளியிட்ட உங்களுக்கே சந்தேகமா? என்ன சிக்கல் வந்தது என்று கூறினால் தீர்வு கூற முயற்சிக்கலாம்.

ஆதவா
26-04-2008, 08:45 PM
மன்னிக்கவும்.திரி மாறிவிட்டது...இதை ஒரு விவாதமாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.அதாவது கவிதை ஒன்றுக்கு தலைப்பு மிக அவசியம்.இடப்படும் தலைப்பு கவிதையின் பொருளை நேரடியாக விளக்கத்தக்கவாறு தலைப்பிடுவது நன்றா?அல்லத மாறுபட்ட கவர்ச்சியான தலைப்பிடுவது நன்றா?

ஒரு கவிதைக்குத் தலைப்பு தந்தே ஆகவேண்டுமென்ற அவசியமில்லை. மன்றத்தில் தலைப்பில்லா கவிதைகளே ஏராளம்.

பொதுவாக, கவிதையின் மையப்பொருளை மையமாக வைத்தே தலைப்பிடுவார்கள், அது சற்றே முழு கவிதையையும் விவரிப்பதுவும், அதே நேரத்தில் தலைப்புக்குரிய வார்த்தை அடங்கங்களோடு இருப்பவதும் அவசியம்.

தலைப்பு என்பது கதவைப் போல... உள்ளே நுழைய கதவைக் கடக்கவேண்டும்... தலைப்பில்லாத கவிதை, சுவரில்லா வயக்காட்டில் குறுகிய எல்லையை, பிரபஞ்ச எல்லையோடு ஒப்பிடுவது. அது கடக்கவேண்டியதென எதுவுமில்லை.. ஆனால், சில கவிதைகள் தலைப்பில்லாவிடில் மனதில் நுழைவதற்கும் கடினமாக இருக்கும்.........

பிரசவம் உங்களுடையது.. பெயர் வைப்பதுவும் உங்களுடையதே! எந்தப் பெயராயினும் பால் மாறாமலிருப்பது அவசியம் (கருவுக்கு சம்பந்தமில்லா தலைப்பாக)

ஷீ-நிசி
27-04-2008, 12:45 AM
நீங்கள் எழுதின மொத்த கவிதையும் கூற வேண்டும் உங்களின் தலைப்பு. கவிதை எழுதுவதைக் காட்டிலும், தலைப்பு வைப்பது மிக கடினம்.

என் நண்பன் ஒருவன் குறும்படங்களை இயக்கிவருகிறான். என் கவிதைகள் அவனுக்கு பிடிக்கும். அதைவிடவும் என் கவிதை தலைப்புகள் பிடிக்கும். அவன் இயக்கும் ஒரு குறும்படத்திற்கு என்னிடம் தலைப்பு கேட்டான். தனக்கு எதுவும் தோன்றவில்லையென்று.

சரி கதை சொல்லுடானு சொன்னேன். ஒரு இளைஞன் வாழ பிடிக்கவில்லை. தற்கொலை செய்துகொள்கிறான். அதை திரைக்கதையாய் விவரித்தவிதம் அழகு. இதுதான் கரு.

சரி என்று நானும் இரண்டு நாட்களாக யோசித்தபின், நான்கைந்து தலைப்புகள் சொன்னேன். திருப்தியடையவில்லை. பின்னர் இந்த தலைப்பை சொன்னேன்.

"கைப்பிடியில்லாத கதவுகள்"

இதை சொன்னதும் அவனுக்கு பிடித்துவிட்டது. இந்த தலைப்பு எப்படி அந்த கதைக்கு பொருந்துகிறது.

கைப்பிடியில்லாத கதவுகளை நான் முதுகெலும்பற்ற, தன்னம்பிக்கையற்ற இளைஞர்களை குறிப்பிடுவதாய் எடுத்துக்கொண்டேன்.

இந்த கதவுகளை திறப்பது சுலபம், முடுவதுதான் கடினம். இந்த இளைஞர்களுக்கு பிரச்சினைகளை எதிர்த்து போராடுவது கடினம். தன்னால் முயற்சிக்க முடியவில்லை என்றால் அழுதுகொண்டு, ஊரை குறைகூறிக்கொண்டு, சாக்குபோக்கு சொல்லிகொண்டு திரிவது சுலபம்.

இவர்களுக்கு கைப்பிடிகள் என்னும் தூண்டுகோல் தேவை..
முழுக் கதையையோ, கவிதையையோ தலைப்பு கூறவேண்டும். அதுதான் முக்கியம்.

கவிதையைப் பொருத்தமட்டில் தலைப்புகள் கவிதையாய் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ஓவியன்
28-04-2008, 10:27 AM
தலையங்கம் வைப்பது பற்றிய ஆதவன் மற்றும் ஷீயின் பார்வைகள் அருமை, ஷீ உதாரணமாக் கூறிய “கை பிடியில்லாக் கதவுகள்” என்ற தலைப்பின் கனகச்சிதப் பொருத்தம் 'அட' போட வைக்கிறது.
________________________________________________________________________________________________

என்னைப் பொறுத்த வகையில் ஒற்றை வரியில் பதிவின் கருவை உள்ளடக்க கூடியவையாகவும் அந்த பதிவுகளை நாடிப் படிக்க வைக்கும் வரவேற்பாளர்களாகவும் தலையங்கங்கள் இருத்தல் வேண்டும். 'சுபா' தோழர்களின் நாவல் ஒன்றில் படித்ததை இங்கே பகிரலாமென நினைக்கின்றேன்.

சுபாவின் ஒரு நாவலில் ஒரு ஓவியன் தன் ஓவியம் ஒன்றில் ஒரு பெண்ணின் கண், காது, உதடு, இதயம் என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக வரைந்து விட்டு 'காதலன்' எனத் தலைப்பிட்டிருப்பான், அந்த தலையங்கத்தின் காரணம் யாதென ஒருவர் வினவுகையில் காதலியின் இதயத்தைத் திருடி, அவள் கண்களின் அசைவே பழியெனக் கிடந்து அவள் அழகிய உதட்டில் முத்தமிடத் துடித்துக் கொண்டிருக்கும் காதலனை நினைத்து இந்த ஓவியத்தை வரைந்தேன் என்பான்.