PDA

View Full Version : கவிதைப் பாய்ச்சல்



நாகரா
26-04-2008, 05:05 AM
காகிதத்தில்
நின்று
ஊர்ந்து
நின்று
ஊர்ந்து
மிக மிக மெதுவாக நகர்ந்த
அச்சிறு பூச்சி
திடீரென்று
அசுரப் பாய்ச்சலாய்ப்
பறந்து மறைந்தது
நம்பவே முடியாதவாறு.

அனுராகவன்
26-04-2008, 05:25 AM
இயற்கை ஓர் அதிசிய
பூந்தோட்டம் அதில்
மனிதர்கள் சிறு துகள்
பெற்ற இறை
சொல்லாமல் நம்மை
வியக்க வைக்கிறது..
எத்தனை எத்தனை
அதிசய காட்சிகள்
பார்ப்பது நம்
கண்களா?
ஓர் பிரம்மிப்பு..

நன்றி நாகரா அவர்களே!!
நல்ல உட்சென்று பார்த்து சிறு நொடியே அதியமாக காட்டுகிறது உங்கள் கவி..
ஆகா..எத்தனை உள் அருத்தங்கள்..
மிக நன்று..

நாகரா
26-04-2008, 06:06 AM
உம் பாராட்டுக்கும் அழகிய பின்னூட்டத்துக்கும் நன்றி பல அனு.