PDA

View Full Version : தொலைந்த நினைவு...!



பூமகள்
25-04-2008, 05:34 PM
http://img31.picoodle.com/img/img31/4/4/25/poomagal/f_girlwalkingm_9f383c1.jpg

தொலைந்த நினைவு..!



உன் சுவடுகள் தேடி
தொலைந்து வந்தேன்..!

கரைந்த சுவாசங்களின்
சிதறல் தேடி
இருக்கும் சுவாசத்தை
மறந்து வந்தேன்..!

நிமிட யுத்தத்தில்
திமிரோடு போரிட்டு
துமைந்து அழுது
தோற்று வந்தேன்..!

தெரியாத விழிகளில்
உனைத் தேடித் தேடி
உற்றுப் பார்த்து
உடைந்து வந்தேன்..!

இல்லாமையில் நீ
இருப்பதை இமை பூட்டி
உணர்ந்து வந்தேன்..!!

ஒளி சிந்திய நாட்களை
சுழியான வெளிச்சத்தில்
அளந்து வந்தேன்..!!

நினைவு பதியனில்
நீ நட்ட நாற்றுகளை
நீ(ர்) இன்றி வேரறுக்க
முனைந்து வந்தேன்..!

முட்களின் பாதையில்
நடந்த நினைவுகளை
வேண்டுமென்றே
தவறவிட்டு வந்தேன்..!!

உன் நினைவுகள்
மீண்டு என்னை
எட்டாது போக
வரம் வேண்டி வந்தேன்..!

பாரதி
25-04-2008, 07:59 PM
சிதைந்த சுவடுகள் எல்லாம்
சுழி வெளிச்சத்தில் மறையட்டும்.

நீரின்றி பதிந்த நாற்றுகள்
நிகழ் வெளிச்சத்தில் பட்டுப்போகட்டும்.

புது சுவாசத்தில்
பூமி புத்துணர்வு பெறட்டும்.

காலம் மாறும்
கவலை தீரும் என

கலங்காத உள்ளம் காண
காத்திருக்கிறது நாளை...

kavitha
26-04-2008, 08:15 AM
இல்லாமையில் நீ
இருப்பதை இமை பூட்டி
உணர்ந்து வந்தேன்..!!
ஞானம் பெற்றால் (அகக்)கண் திறந்தது என்று கூறுவர்.
இமைகள் பூட்டி பெற்ற ஞானம், அதுவும் இல்லாமையில் இருப்பதை உணர்ந்து நினைவுகளைக் கழட்டிவிட்டு வெறுமையில் நடப்பதும் ஒரு கனத்த சுகம்தான்.

நல்லதொரு உணர்கவிதை பூமகள். :) வாழ்த்துகள்.

பாரதியின் பின்னூட்டக்கவிதையும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. பாராட்டுகள் இருவருக்கும்.

மன்மதன்
26-04-2008, 09:14 AM
கவிதை அருமை பூ.. படமும் அட்டகாசம்..

நினைவுகளை மறக்க வேண்டும் என்ற நினைவுகளே
அந்த நினைவுகளை திரும்ப திரும்ப நினைக்க வைக்கும்..!!!

பூமகள்
26-04-2008, 09:20 AM
கலங்காத உள்ளம் காண
காத்திருக்கிறது நாளை...
அழகிய பின்னூட்டம். ரசித்தேன்.. சுழி வெளிச்சத்தை சரியாகப் பயன்படுத்தினீர்கள்..!:icon_b:
நன்றிகள் பாரதி அண்ணா. :)

பூமகள்
26-04-2008, 09:26 AM
இமைகள் பூட்டி பெற்ற ஞானம், அதுவும் இல்லாமையில் இருப்பதை உணர்ந்து நினைவுகளைக் கழட்டிவிட்டு வெறுமையில் நடப்பதும் ஒரு கனத்த சுகம்தான்.
உண்மை தான் கவி அக்கா. நம் பழைய நினைவுகளை அவ்வளவு எளிதில் கழட்டி விட இயலாவிட்டாலும், எங்கோ நினைவுப் பரணில் ஒளித்து வைத்திருப்பவை சில நேரங்களில்.. சில இடங்கள் நினைவின் முற்றத்திற்கு வந்து விடுவதை யாராலும் தடுக்க இயலாதே..!! :icon_ush:

அவ்வகை நினைவுகளும் ஒரு கனத்த சுகம் தான்.. தாங்கள் சொன்னது மிகச் சரி கவி அக்கா. :icon_b::icon_b:

ஊக்க பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி. :)
--------------------------------------------------
உங்களைக் கண்டு வெகு நாட்கள் ஆகிறதே.. நலமா இருக்கீங்களா அக்கா??!!:icon_rollout:

kavitha
26-04-2008, 09:29 AM
உங்களைக் கண்டு வெகு நாட்கள் ஆகிறதே.. நலமா இருக்கீங்களா அக்கா? நலமே தங்கை. விசாரிப்புக்கு நன்றி.

பூமகள்
26-04-2008, 09:32 AM
நினைவுகளை மறக்க வேண்டும் என்ற நினைவுகளே
அந்த நினைவுகளை திரும்ப திரும்ப நினைக்க வைக்கும்..!!!
உண்மை தான் மதன் அண்ணா..
மறக்கனும்னு நினைத்தால் நினைத்துக் கொண்டே தான் இருப்போம்..!!

பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றிகள் மதன் அண்ணா. :)
------------------------------------------------------------
ப்ரீயா விடு ஃப்ரீயா விடு.. ஃப்ரீயா விடு மாமு.. லைஃப்புக்கு இல்ல கேரண்டி...!! :rolleyes::cool: :aetsch013:

சுகந்தப்ரீதன்
26-04-2008, 10:07 AM
பூ..எனக்கு உன்னோட கவிதையைவிட அந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..:confused: (அதுல ஒரு பொண்ணு இருக்கறதாலியான்னு கேட்காத சரியா..?:fragend005:)



நினைவு பதியனில்
நீ நட்ட நாற்றுகளை
நீ(ர்) இன்றி வேரறுக்க
முனைந்து வந்தேன்..!
நீரற்று போனாலே வேரற்று போகும்...
நீயின்றி போனால் நானற்று போவேனா..?

நீ நெஞ்சில் நட்டவை நாற்றுகளென்று
நாளும் நீருற்றி வளர்த்தேன் நானும்..!!

வளரும்போது தெரியவில்லை வளர்வது
நாற்றல்ல வெறும் களைக்கூட்டென்று..!!

தெரிந்தபின் வார்க்க என்னிடம் நீருமில்லை..
அன்றோபாவம் இன்று என்னுடன் நீயுமில்லை...!!


வாழ்த்துக்கள்..பூமகள்.. தொடரட்டும் உங்கள் தேடல்..தெளிவாய்..!!

பூமகள்
26-04-2008, 10:18 AM
ஆஹா... என்னோட நாலு வரிக்கு இத்தனை அர்த்தங்களா??!!:sprachlos020: :icon_b::icon_b:
அசத்திட்டேப்பா.. கவிதையிலேயே..!!:icon_b: அழகிய பின்னூட்ட கவிதைக்கு நன்றிகள் சுகந்தப்ரீதன். :)

------------------------------
என்னது.. என் கவிதையை விட படம் தான் பிடிச்சிருக்கா? :eek::eek:
ஹூம்.:fragend005:. இருக்கும் இருக்கும்....:sauer028::sauer028: மலரு மன்றத்துல சுத்தாததால ஆளாளுக்கு பயமில்லாம பேச ஆரம்பிச்சிட்டீங்க...:icon_ush::aetsch013: :redface:

எங்கம்மா போயிட்டே... மலரு.. நல்லா அருவாளத் தீட்டிட்டு ஓடியாம்மா..:mini023::rolleyes::icon_rollout: சுபியோடு சண்டை போடனும்...! :D:D

மதி
26-04-2008, 10:44 AM
நினைவுகள் சுகமான சுமைகள்.. ஆழ்மனத்தின் அடியோரத்தில் இருந்து மேலெழும்பி அவ்வப்போது பின்னோக்க வைக்கும்.
நல்ல கவிதை பூமகள்..

பூ..எனக்கு உன்னோட கவிதையைவிட அந்த படம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..:confused:


ஹிஹி..இதை நானும் வழிமொழிகிறேன்..

அமரன்
26-04-2008, 03:15 PM
கலங்காதிரு மனமே..
தூரத்தில் தெரியும் கலங்கரை
உன் பக்க(மு)ம் திரும்பும்!!

ஷீ-நிசி
26-04-2008, 03:25 PM
உண்மையிலேயே படம் மிக அருமை....

கவிதையும்.... வாழ்த்துக்கள் பூமகள்!

Keelai Naadaan
26-04-2008, 04:02 PM
கவிதையும் காட்சியும் மிக அருமை பூமகளே.
நினைவே ஒரு சங்கீதம் என்பது இது தானா..?

விகடன்
26-04-2008, 09:10 PM
மன்மதன் அண்ணா சொன்னதுபோல,
எதை தவிர்க்க/ மறக்க வேண்டுமென்று நினைக்கின்றோமோ அதுவே அந்த விடயம் ஆழ வேரூன்றி பெரு விருட்சமாக வளர அடித்தளமாக மாறிவிடுகிறது.

கவிதை அழகு (வர்ணத்தால் மட்டுமல்ல...).
எதிர்பார்த்ததை நிரைவேற்ற இப்படியே நடந்தால் சரிவராது. உடனேயே சென்று வேறு விடயங்களில் தீவிரமாக ஈடுபடலே நல்லது... பூமகள்!

பூமகள்
27-04-2008, 11:35 AM
கலங்காதிரு மனமே..
தூரத்தில் தெரியும் கலங்கரை
உன் பக்க(மு)ம் திரும்பும்!!
தெள்ளிய குளத்தில்
அமைதி குலைப்பான்
ஒற்றைக் கல்லாக
சில பயணங்கள்..

முன்னூறு நாட்கள்
முனைந்து தேற்றியது
முப்பது நொடிகளில்
பெயர்ந்து விரிசலான
மனச் சுவர்கள்..!!

காலமும் தோற்றமும்
மாறினாலும்
காட்சிகளும் பிம்பமும்
கண் பாவையில்
பத்திரமாக..!!

காணக் கிடைப்பது
அதே இடம்..!
காண்பதோ..
ஏதோ படம்..!!

தூரத்தில் தெரியும்
கலங்கரை அருகிருந்து
கலக்கம் தீர்க்குமா?:confused:
கானல் நீர் தான்
தாகம் தீர்க்குமா??:confused:

பூமகள்
27-04-2008, 11:36 AM
நல்ல கவிதை பூமகள்..
ஹிஹி..இதை நானும் வழிமொழிகிறேன்..
எல்லாரும் ஒரே குட்டையில் ஊறினவங்க தான்னு இப்போ நல்லாவே தெளிவாக்கிட்டீங்க..!!:aetsch013::lachen001:
அந்த படம் போடவா வேணாமான்னு ஒரே சண்டை எனக்கும் என் மனசாட்சிக்கும்..:eek::eek: ஏன்னா.. எப்படியும் நீங்க எல்லாருமே கவிதையை விட படம் அருமைன்னு தான் சொல்லுவீங்க.. வழக்கம் போல.. :rolleyes:அதுலயும் அந்த பொண்ணு(:aetsch013:)... இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல...!:redface: ஹூம்....:traurig001: கவிதையை விமர்சிங்கப்பா...!! :icon_ush:

பின்னூட்டமிட்டு ஆட்டோ தாக்குதலில் இருந்து தப்பிச்ச மொக்க மதிக்கு நன்றிகள்..!! :p:cool:

மன்மதன்
27-04-2008, 12:00 PM
ப்ரீயா விடு ஃப்ரீயா விடு.. ஃப்ரீயா விடு மாமு.. லைஃப்புக்கு இல்ல கேரண்டி...!! :rolleyes::cool: :aetsch013:

ஓ.. அந்த பொண்ணு பேரு ப்ரீயாவா.. அட்......ர(ஸ்) சக்கை..அட்ரா சக்கை....:D:rolleyes:

பூமகள்
27-04-2008, 12:04 PM
உண்மையிலேயே படம் மிக அருமை.... கவிதையும்.... வாழ்த்துக்கள் பூமகள்!
நன்றிகள் ஷீ..! :)
கவிதை அருமை..படமும்..அப்படின்னு சொல்லியிருந்தா இன்னும் சந்தோசப்பட்டிருப்பேனே..??!! :rolleyes: :icon_rollout:

கவிதையும் காட்சியும் மிக அருமை பூமகளே. நினைவே ஒரு சங்கீதம் என்பது இது தானா..?
நினைவு வாத்தியத்தில் உருவாகும் கீதம் உணர்வுகளின் மீட்டலால் தானே
அண்ணா?? :icon_ush:
அப்படியெனில், அது சங்கீதம் தான்..!! :icon_rollout:

ஆதவா
27-04-2008, 12:07 PM
நீரற்று போனாலே வேரற்று போகும்...
நீயின்றி போனால் நானற்று போவேனா..?

நீ நெஞ்சில் நட்டவை நாற்றுகளென்று
நாளும் நீருற்றி வளர்த்தேன் நானும்..!!

வளரும்போது தெரியவில்லை வளர்வது
நாற்றல்ல வெறும் களைக்கூட்டென்று..!!

தெரிந்தபின் வார்க்க என்னிடம் நீருமில்லை..
அன்றோபாவம் இன்று என்னுடன் நீயுமில்லை...!!

.!!

வாவ்!!! சுபீ! அருமை. இயல்பான ஓட்டத்தில் எழுதியிருக்கிறீர்கள்.. குறிப்பாக இறுதி வரிகள்...அலேக்க்காக மனதில் ஒட்டுகிறது.. பழக்கப்பட்ட கருவென்றாலும் எழுதப்பட்ட நடையில் எனக்கு புதிதாகவே தோன்றுகிறது. எக்ஸலண்ட்!!!:icon_b: மேலும் எழுதுங்கள்.

பூமகள்
27-04-2008, 12:16 PM
சுபியின் பின்னூட்டக் கவியை பாராட்டிய ஆதவ கதிர்களுக்கு எனது கவியில் ஒளிபடவில்லையோ??!!:icon_ush:

பாராமுகம் ஏனோ??!!:confused:

ஆதவா.. இதென்ன விளையாட்டு??:eek::eek: என் வரிகளை விமர்சிக்க கூடாதா நீ(ங்க)???!!:frown: :fragend005:

நாகரா
28-04-2008, 09:29 AM
தொலைந்த நினைவு..!




உன் சுவடுகள் தேடி







தொலைந்து வந்தேன்..!





கரைந்த சுவாசங்களின்



சிதறல் தேடி



இருக்கும் சுவாசத்தை



மறந்து வந்தேன்..!





நிமிட யுத்தத்தில்



திமிரோடு போரிட்டு



துமைந்து அழுது



தோற்று வந்தேன்..!





தெரியாத விழிகளில்



உனைத் தேடித் தேடி



உற்றுப் பார்த்து



உடைந்து வந்தேன்..!





இல்லாமையில் நீ



இருப்பதை இமை பூட்டி



உணர்ந்து வந்தேன்..!!





ஒளி சிந்திய நாட்களை



சுழியான வெளிச்சத்தில்



அளந்து வந்தேன்..!!





நினைவு பதியனில்



நீ நட்ட நாற்றுகளை



நீ(ர்) இன்றி வேரறுக்க



முனைந்து வந்தேன்..!





முட்களின் பாதையில்



நடந்த நினைவுகளை



வேண்டுமென்றே



தவறவிட்டு வந்தேன்..!!





உன் நினைவுகள்



மீண்டு என்னை



எட்டாது போக



வரம் வேண்டி வந்தேன்..!



உனைக் காண
எனைத் தொலைத்தேன்

புதியன கூடப்
பழையன கழிந்தேன்

தோல்விகளின் தோலுரித்து
காலத்தை வென்று
திமிர்ந்த ஞானச் செருக்கோடு
பூமியில் நடந்தேன்

தீட்சண்ய விழிகளில்
உன் நிஜங் கண்டு
நமைப் பிரிக்க எழுந்த
மாயச் சுவர்களைப் பிளந்து
உனைக் கூட வந்தேன்

ஊன விழி மூடி
ஞான விழி திறந்து
இல்லாது
நீ இருப்பதை உணர்ந்து
இருப்பதாய் நடிக்கும்
ஆணவத்தின் ஆர்ப்பாட்டம் முடித்தேன்

சுழியும் நெற்றியுள்
உன் முழுமை கண்டு
தொண்டையுள்
வழியும் சுழிக்குள்
என் மெய் சிக்க
பொய்யுலகக் கணக்கைக்
கழிந்தேன்

இருள் சேர் இரு வினையின்
கருவினைக் கலைத்து
ஒருமையில்
உனைச் சேர்ந்தேன்

பொய்த் தளைகளிலிருந்து
கவனம் கழல
மெய்ப் பொருளாம்
உன்னில் இலயித்தேன்

கனவுகள் கலைந்த
ஞான விழிப்பில்
பேதங்களற்று
நீயானேன்
நானே

பூமகளே! உன் தொலைந்த நினைவில் நான் கண்டெடுத்த நம்(கடவுள்+மனிதன்) இருப்பின் நிஜம் இது. நம் இருப்பின் நிஜத்தை உணர்த்திய உன் அருங்கவிக்கு என் நன்றியும் பாராட்டும்.

shanthija
05-05-2008, 09:31 PM
ஆகா ஆகா என்ன அருமையான கவிதை நன்பியே ...சில நாட்கல் மன்றத்த்திர்கு வரமுடியாமல் போய் விட்டது என்னால் காரனம் பாடாசாலை வேலைகல் இருந்ததால்..அந்தக்கவலை உங்கல் கவிதையை பார்த்ததும் கானாமல் போய் விட்டது நன்பியே...என் மனமார்ந்த வழ்த்துக்கல்


அன்புடன்
லதுஜா

சுஜா
28-05-2008, 08:33 AM
//ஒளி சிந்திய நாட்களை
சுழியான வெளிச்சத்தில்
அளந்து வந்தேன்..!!//

புதிய குத்துவிளக்கின் ஒளியில்
பழைய வானவேடிக்கையை மறந்து விடலாம் .

அருமையான கவிதை ....பூமகள் அக்காவிற்கு எனது வாழ்த்துகள்.

______________________________
அன்புடன் சுஜா

பூமகள்
24-07-2008, 01:14 PM
நாகரா அண்ணா,

ஞான வெளிச்சத்தில் என் கவிதைக்கு இறைவனின் பார்வை தந்த உங்களின் கவிதைக்கு எனது நன்றிகள்.

தோழி லதுஜா, தம்பி சுஜா இருவரின் அன்பான பின்னூட்ட ஊக்கத்துக்கு எனது நன்றிகள்..!!

அறிஞர்
24-07-2008, 01:25 PM
தொலைந்த நினைவுகள் பற்றி பூமகள்.
இயல்பான வரிகளில் தெளிவான விமர்சனம்... பாரதி, சுகந்தப்ரீதன்..
புதிதான கோணத்தில் நாகராவின் கவி.....

அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்.

எஸ்.எம். சுனைத் ஹஸனீ
24-07-2008, 03:17 PM
உங்கள் இரண்டு கவிதைகளுமே கொள்ளை அழகு. (கவிதைக்கான படத்தையும் சேர்த்துதான் சொல்கிறேன்).