PDA

View Full Version : அறிதல்

ஆதி
25-04-2008, 10:06 AM
சீனிப் பணியாரத்தை
சுவைத்தவாறு
வியப்பில்
காதுவரை நீண்டக் கண்களுடன்
ராஷச ராட்டினத்தைப்
பார்த்திருந்தவளுக்கு
தெரிய வந்தது தான்
திருவிழாக் கூட்டத்தில்
காணாமல் போனது
பணியாரம் தீர்ந்த பொழுது..

அனுராகவன்
25-04-2008, 10:26 AM
தன் நிலையே காணாத
மானிடன் பிறர் பற்றி
சிந்தித்து என்ன பயன்?
வாழ்கையே கையிலே
கொண்டு வெளியில்
தேடுவது இருட்டில்
காணாம போன
வாழ்க்கை...

எண்ணம்
26-04-2008, 03:10 AM
தன் நிலையே காணாத
மானிடன் பிறர் பற்றி
சிந்தித்து என்ன பயன்?

ஆம் அனு அவர்களே, பிறரை பற்றி சிந்தித்தே நம்மைப்பற்றி சிந்திப்பதை மற்ந்து விடுகிறோம்

நாகரா
26-04-2008, 05:16 AM
இகத்தில் படர்ந்திருக்கும் மாயாஜாலத்தில்
மனம் இலயித்துத்
தன்னை மறந்திருந்த தான்
இலயிப்பு தீர்ந்து போக
மறதி தெளிந்து
தான் காணாமல் போனதை
ஞாபகங் கொள்கிறதோ!
மாயையின் கோலங்கலைத்து
பரத்தை இகத்தில் சேர்க்கும்
அறிதல் அருமை
ஆதி
வாழ்த்துக்கள்

நாகரா
26-04-2008, 06:46 AM
சீனிப் பணியாரத்தை
சுவைத்தவாறு
வியப்பில்
காதுவரை நீண்டக் கண்களுடன்
ராஷச ராட்டினத்தைப்
பார்த்திருந்தவளுக்கு
தெரிய வந்தது தான்
திருவிழாக் கூட்டத்தில்
காணாமல் போனது
பணியாரம் தீர்ந்த பொழுது..

ஆரிருள் உய்த்து விட்ட அடங்காமை தான் உணர்ந்து
ஒருமையுள் ஆமை போல் தான் ஐந்தடக்கல் ஆற்றி
அமரனாய்த் தான் உய்யும் ஞான மார்க்கம் தெளிந்து
இருதயத்தில் மனமடங்கி அருள் உய்க்கும் அறிவின்
தெருள்சுட்டும் பேரதிர்ச்சி தெரிவிக்கும் குறுங்கவி
அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ஆதி

kavitha
26-04-2008, 09:33 AM
நல்லதொரு வாழ்வியல் கவிதை.
'விழிப்பாயிரு' என்பது புறத்திற்கும் அகத்திற்கும் பொதுவாய். நன்றி ஆதி

ஆதவா
27-04-2008, 07:13 AM
நல்ல கவிதை.. சொன்னவிதத்தில் அருமை/ விழிப்புடன் இரு, வேடிக்கையில் தன்நிலை மறக்காதே என்ற அற்புத கருத்துகள் நிறைந்து இருக்கின்றன...

வாழ்த்துகள் ஆதி

ஆர்.ஈஸ்வரன்
27-04-2008, 10:31 AM
சீனிப் பணியாரத்தை
சுவைத்தவாறு
வியப்பில்
காதுவரை நீண்டக் கண்களுடன்
ராஷச ராட்டினத்தைப்
பார்த்திருந்தவளுக்கு
தெரிய வந்தது தான்
திருவிழாக் கூட்டத்தில்
காணாமல் போனது
பணியாரம் தீர்ந்த பொழுது..

இந்த எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை

ஷீ-நிசி
27-04-2008, 11:26 AM
:) தான் தொலைந்திருக்கிறோம் என்பது பணியாரம் தீரும்வரை தெரியவில்லை... நிஜ வாழ்க்கையிலும் நாம் தொலைந்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தாமல் வைத்திருக்கும் பணியாரம் போன்ற பல நிகழ்வுகள் கறைந்தால் தான்.. நமக்கும் உறைக்கும். நாம் எவற்றிலெல்லாம் தொலைந்திருக்கிறோம் என்று...

வாழ்த்துக்கள்!

Keelai Naadaan
27-04-2008, 04:17 PM
முதலில் படித்த போது நகைச்சுவை போல் தோன்றியது. சற்று யோசிக்கும் பொழுது வேறு பொருள் புரிந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம்...நீங்கள் நகைச்சுவையாக எழுதினீர்களா அல்லது விழிப்புணர்வுக்காக எழுதினீர்களா..?

ஓவியன்
28-04-2008, 07:59 AM
கவனக் கலைப்பான் என்று கூறுவார்கள், சின்னஞ்சிறு ஆசைகளினால் பெரிய குறிக்கோள்களிலிருந்து விலகித் தவிப்போருக்கு உரைக்கப்பட்ட கவியமுது...!!
பாராட்டுக்கள் ஆதி..!! :)

(உங்கள் கவிதைகள் நிறையவற்றை என்னால் வாசித்து பின்னூட்டமிட முடியவில்லை, நேரம் கிடைக்கையில் செய்கின்றேன்)

ஆதி
29-04-2008, 07:50 AM
இகத்தில் படர்ந்திருக்கும் மாயாஜாலத்தில்
மனம் இலயித்துத்
தன்னை மறந்திருந்த தான்
இலயிப்பு தீர்ந்து போக
மறதி தெளிந்து
தான் காணாமல் போனதை
ஞாபகங் கொள்கிறதோ!
மாயையின் கோலங்கலைத்து
பரத்தை இகத்தில் சேர்க்கும்
அறிதல் அருமை
ஆதி
வாழ்த்துக்கள்

ஆரிருள் உய்த்து விட்ட அடங்காமை தான் உணர்ந்து
ஒருமையுள் ஆமை போல் தான் ஐந்தடக்கல் ஆற்றி
அமரனாய்த் தான் உய்யும் ஞான மார்க்கம் தெளிந்து
இருதயத்தில் மனமடங்கி அருள் உய்க்கும் அறிவின்
தெருள்சுட்டும் பேரதிர்ச்சி தெரிவிக்கும் குறுங்கவி
அருமையிலும் அருமை வாழ்த்துக்கள் ஆதி

உங்கள் பின்னூட்டத்தை நான் எதிர்ப்பார்த்திருந்தேன் ஐயா, அந்த ஞானப்பின்னூட்டம் கிடைத்ததால் கவிதை பெரும்பேரு பெற்றுவிட்டது..

வாழ்த்துக்களுக்கு என் நன்றிகள் ஐயா..

ஆதி
29-04-2008, 07:53 AM
'விழிப்பாயிரு' என்பது புறத்திற்கும் அகத்திற்கும் பொதுவாய். நன்றி ஆதி

உண்மைதான் அக்கா, அகம் புறம் இரண்டையும் மனதில் வைத்துத்தான் இந்தக் கவிதையை எழுதினேன் அக்கா..

ஆதி
29-04-2008, 07:56 AM
சொன்னவிதத்தில் அருமை/ விழிப்புடன் இரு, வேடிக்கையில் தன்நிலை மறக்காதே என்ற அற்புத கருத்துகள் நிறைந்து இருக்கின்றன...

தன்னையிழத்தல் மெய்ஞானம் தன்னை மறத்தல் அஞ்ஞானம்..

வாழ்த்துக்கு நன்றி ஆதவா..

ஆதி
29-04-2008, 08:00 AM
:) தான் தொலைந்திருக்கிறோம் என்பது பணியாரம் தீரும்வரை தெரியவில்லை... நிஜ வாழ்க்கையிலும் நாம் தொலைந்திருக்கிறோம் என்பதை நினைவுபடுத்தாமல் வைத்திருக்கும் பணியாரம் போன்ற பல நிகழ்வுகள் கறைந்தால் தான்.. நமக்கும் உறைக்கும். நாம் எவற்றிலெல்லாம் தொலைந்திருக்கிறோம் என்று...

ஆம் ஷீ, எல்லாரும் ஏதாவது ஒரு மயக்கத்தில் நம்மைத் தொலைத்துதான் விடுகிறோம் அந்த லயிப்பு தீரும் போதுதான் உணர்கிறோம் தொலைந்ததை..

வாழ்த்துக்களுக்கு நன்றி ஷீ..

ஆதி
29-04-2008, 08:03 AM
முதலில் படித்த போது நகைச்சுவை போல் தோன்றியது. சற்று யோசிக்கும் பொழுது வேறு பொருள் புரிந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம்...நீங்கள் நகைச்சுவையாக எழுதினீர்களா அல்லது விழிப்புணர்வுக்காக எழுதினீர்களா..?

இல்லை கீழை நாடன், இது நகைச்சுவைக்காக எழுதிய கவிதையல்ல.. தலைப்பை அறிதல் என்றுதானே வைத்திருக்கிறேன்..

ஆதி
29-04-2008, 08:07 AM
கவனக் கலைப்பான் என்று கூறுவார்கள்

(உங்கள் கவிதைகள் நிறையவற்றை என்னால் வாசித்து பின்னூட்டமிட முடியவில்லை, நேரம் கிடைக்கையில் செய்கின்றேன்)

நான் பத்து வரிகளில் சொல்ல முயற்சித்ததை நீங்கள் இரண்டு வார்த்தையில் சொல்லிவிட்டீர்கள் ஓவியன்.. :)

நேரம் கிடைக்கும் பொழுது படித்து பின்னூட்டம் இடுங்கள் ஓவியன்..

பாராட்டுக்களுக்கு நன்றிகள்..

சாலைஜெயராமன்
29-04-2008, 01:48 PM
அறிகின்ற அறிவே அறிவென்று அறிவாய்

தன்னை அறிதலே இந்னில வாழ்வு

ஈகை இரக்கம் என்றும் மறவேல்

இன்றைய நாகரீக உலகிற்கு வேண்டிய புதிய ஆத்திச் சூடி ஆதி. இந்தக் கருத்தை மிகத் தெளிவான முறையில் புதிய நடையில் வடித்துள்ளீர்கள். உலக மாயை என்ற இந்த சிறிய சிற்றின்பச் சுவையின் மயக்கத்தை காலத்தே அறிவுறுத்தும் கல்வி முறையை இன்று தொலைத்து விட்டோமே. வருத்தமாக இருக்கிறது.

பெங்களூரில் இருந்து இப்படி கடுமையான கவிதையெல்லாம் தரக்கூடாது. சக IT மக்கள் தங்களைக் கோவித்துக் கொள்வதில்லையா-

நன்றாக சமூக நோக்கோடு சிந்திக்கும் திறன் பெற்றிருக்கிறீர்கள் திரு ஆதி. தொய்வில்லாது இச்சிந்தனை உங்களைச் சார்ந்தோரைச் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா.

அகம் குளிர்ந்த வாழ்த்துக்களை முன்வைக்கிறேன் திரு ஆதி. விவேகானந்தர் கனவு கண்ட புதிய எழுச்சி மிகு இந்திய இளைஞர் கூட்டத்தின் முன் மாதிரியாக உங்களைப் பார்க்கிறேன் திரு ஆதி.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

ஆதி
05-05-2008, 09:46 AM
இன்றைய நாகரீக உலகிற்கு வேண்டிய புதிய ஆத்திச் சூடி ஆதி. இந்தக் கருத்தை மிகத் தெளிவான முறையில் புதிய நடையில் வடித்துள்ளீர்கள். உலக மாயை என்ற இந்த சிறிய சிற்றின்பச் சுவையின் மயக்கத்தை காலத்தே அறிவுறுத்தும் கல்வி முறையை இன்று தொலைத்து விட்டோமே. வருத்தமாக இருக்கிறது.

அகம் குளிர்ந்த வாழ்த்துக்களை முன்வைக்கிறேன் திரு ஆதி. விவேகானந்தர் கனவு கண்ட புதிய எழுச்சி மிகு இந்திய இளைஞர் கூட்டத்தின் முன் மாதிரியாக உங்களைப் பார்க்கிறேன் திரு ஆதி.

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்

நெஞ்சத்தை நெகிழ வைக்கிறப் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சியில் உள்ளம் குளிர்கிறது ஐயா..

எழுச்சி மிகு இளைஞனா ? தெரியாது... எண்ணியதை எழுதத்தெரிந்தவன் என்பது உண்மை..

தொடர்ந்து வரும் உங்களைப் போன்ற பெரியோர்களின் நற்சிந்தனை ஊக்கங்களும் அறிவுரைகளுமே என்னை செதுக்குகிறது இன்னும் சிறப்பாய் எழுத வேண்டும் என்று முயற்சிக்க வைக்கிறது.. அந்த வகையில் நான் பேருபெற்றவனே ஐயா..