PDA

View Full Version : சொல்ஆதி
24-04-2008, 05:23 PM
ஜீரணத்திற்காய்
உரசப்பட்ட
அதன் அலகு
கீறி பழைய ரணங்களில்
சீழும் இரத்தமும் வடிய
குரூர நாவுகள் நக்கி
தகிப்புகளை தணிக்கின்றன..

கண்மணி
24-04-2008, 06:37 PM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=340503&postcount=1940

அனுராகவன்
25-04-2008, 03:40 AM
ஆதி அவர்களே உங்கள் கவிகள் மிக அருமையான கருத்துக்களை தரும் அமுதங்கள்..
நீங்கள் குறிப்பிட்டது பறவையே தழுவிய கவிபோல தெரியுது..
நான் கொஞ்சம் மக்குங்க..
பொருள் தருவிங்களா..
சொல் வன்மை
தினர வை*க்கிறது..

ஆதி
25-04-2008, 04:39 AM
முன்பே கவிசமரில் வாசித்தக் கவிதைதான் சகோதரி கண்மணி.. சுட்டியமைக்கு நன்றி.

அனு அக்கா, இந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..

ஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் குமுதாயத்தின் சுயனலத்திற்கு தீனியானவர் என்று பலரின் மேல் வீசப் படும் பழிச்சொல்லை வைத்து எழுதியது..

பின்னவீனதுவக் கவிதை என்பதால் நவீனத்துவத்தின் சுதந்திரத்தை முழுக்க முழுக்கப் பயன்படுத்திக் கொண்டேன்..

ஆதி
25-04-2008, 08:50 AM
இந்தக் கவிதையில் உள்ளப் பெரும் முரண் சொல்லிவிடும் இது நவீனத்துவப் படைப்பிலக்கியம் என்று, ஆனால் இது தலித்திலக்கியம் ஆகவிடக் கூடாது என்பதில் கொஞ்சம் அதிகமாய் கவனம் செலுத்தினேன்..

பெரும் முரண் - அலகு உள்ளிருக்கும் நாக்கால் நீள முடியாது பிறகு எப்படி நக்கி தாகம் தணிக்கும்..

நவீனத்துவத்தின் சுதந்திரம் இதுதான், காலம் நிதர்சனம் என்று பலற்றைக் கடந்து எழுத இயலும்.. பகலைப் பற்றிப் பாடும்கவிதையில் நட்சதிரங்கள் கண்சிமிட்டிக் கொண்டிருந்தன என் வீட்டைப் பார்த்து என்று எழுதினாலும் எதிர்கேள்விகள் கேட்கதேவையில்லை சொல்லவந்த கருத்தை தெளிவாக சொல்லிவிட்டு சென்றுவிட்டால் போதும்.. இதுவே நவீனத்துவத்தில் உள்ளப் பெரும் வசதி..

அனுராகவன்
25-04-2008, 10:38 AM
இந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..

விளக்கம் தாங்க..
எனக்கு புரியல..

kavitha
26-04-2008, 09:26 AM
ஆதியின் கவிதை நிதர்சனம்.
கண்மணியின் கவிதை பாடம்.


ஜீரணத்திற்காய்
உரசப்பட்ட
அதன் அலகு
கீறி பழைய ரணங்களில்
சீழும் இரத்தமும் வடிய
குரூர நாவுகள் நக்கி
தகிப்புகளை தணிக்கின்றன..
__________________
அன்புடன் ஆதி

....
ஒடுக்கப்பட்டவர் தாழ்த்தப்பட்டவர் குமுதாயத்தின் சுயனலத்திற்கு தீனியானவர் என்று பலரின் மேல் வீசப் படும் பழிச்சொல்லை வைத்து எழுதியது
...... ஆதி


Originally Posted by ஆதி
இந்தக் கவிதை பின்னவீனத்துவக் கவிதை..

விளக்கம் தாங்க..
எனக்கு புரியல..
__________________அனு

நவீனத்துவ கவிதை என்பது சொல்ல வந்த கவிதையை நேரடியாகச் சொல்லாமல் குறிப்பால் சொல்வது அனு.
பிறகு எப்படி புரிந்துகொள்வது? .... என்றால் கவிதையில் எங்கேனும் சிறு இடறல்/துணுக்கு இருக்கும். இங்கே ஆதி குறிப்பிட்டிருப்பது..பெரும் முரண் - அலகு உள்ளிருக்கும் நாக்கால் நீள முடியாது பிறகு எப்படி நக்கி தாகம் தணிக்கும்..
இது தான் துணுக்கு.

ஒடுக்கப்பட்டவர்களாக - பழைய ரணம்
நிவாரணம்/அவர்களுக்காக எடுக்கப்படும் முயற்சிகள் - தீட்டப்பட்ட அலகு
ஒடுக்குபவர்களின் சுயநலம் - குரூர நாவு

இப்பொழுது மீண்டும் கவிதையைப்படியுங்கள். புரிகிறதா?

மனோஜ்
06-05-2008, 03:39 PM
ஆதியின் கவியும் விளக்கமும் அருமை நன்றி ஆதி
மற்றும் கவி

சுகந்தப்ரீதன்
13-05-2008, 10:32 AM
நவீனத்துவத்தை பற்றி நயமாய் உரைத்த
ஆதி...
கண்மணி..மற்றும்..
கவிதா அக்கா அவர்களுக்கு என் நன்றி..!!

சாலைஜெயராமன்
13-05-2008, 10:47 AM
ஆதி கவனமாய் பின்னப்பட்ட கவிதைக் கரு.

ஆனால் எதார்த்தம் எது வென்றால் இன்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயம் ஒன்றும் அவ்வளாய் முன்னேறவில்லை. ஓடுக்கப்பட்டுத்தான் வாழ்ந்து வருகிறது.

ஒரு காலத்தில் மேல் தட்டு வக்கரங்களால் ஒடுக்கப்பட்ட ஒரு கூட்டம் இன்று தங்கள் இனத்தாலேயே மேலும் ஒடுக்கப்படும் பல கதைகள் இன்று நம் நாட்டில் உண்டு. அனைத்து அரசாங்கச் சலுகைகளும் பெறுவதற்காகவே ஒரு சமூகத்தை இன்னும் அறியாமையில் ஆழப் புதைத்து வைத்திருப்பது பல கிராமங்களில் இன்றும் நடைமுறையில் உள்ளது.

கல்வியறிவு ஒன்றுதான் அவர்களை முன்னேற்றப்பாதையில் முன்னிறுத்தும்.

எதிர்மறை உவமானங்களை வைத்து அழகான கவிதை தந்ததற்கு வாழ்த்துக்கள்.