PDA

View Full Version : நர்மதை



ஆதி
24-04-2008, 05:01 PM
தூறலுக்கும் பயந்து
சுகம் கெடுமென
மழைக்கோட் கொணர்வாள் அம்மா..

கிணற்றையும் எட்டிப்பார்க்க
அனுமதிக்க மாட்டார் அப்பா..

வைகறையின் வண்ணங்களை
அப்பிக் கொண்டு கனவுகளோடு
விடிந்தது அன்றையப் பொழுது..

கைத்தட்டல்களோடும்
பாடல்களோடும் புரப்பட்ட
அந்தப் பயணம்
கூக்குரலோடும்
அழுகையோடும் முடிந்தது..

மேனியெங்கும் மிதந்த
பச்சைச் செடிகளைப் பார்த்த
நர்மதை வருத்தப்பட்டது
கபினிக்குள்ளாவது அடைப்பட்டிருக்கலாம்
காவிரியாய் பிறக்கவில்லையே என..


நன்றி : சிவா அண்ணா, இறைவனுக்கு இரக்கமில்லை என்றக் கவிதையின் இன்னொரு முகமாய் பின்னவீனத்துவமாய்..

ஓவியன்
02-05-2008, 03:25 PM
தூறலுக்கும் பயந்து
சுகம் கெடுமென
மழைக்கோட் கொணர்வாள் அம்மா..

கிணற்றையும் எட்டிப்பார்க்க
அனுமதிக்க மாட்டார் அப்பா..

எத்துணை உண்மையை கோர்த்து நிற்கும் வரிகள்.....

நர்மதையின் வருத்தத்தில் நானும் இணைகிறேன்...
இனி மேலாவது இத்தகைய சோகங்கள்
இல்லாத நிலை ஒன்று வரட்டும் ஆதி..!!

நம்பிகோபாலன்
02-05-2008, 07:04 PM
மரணத்தின் வாயிலில்
மழலையின் வாசம்
தண்ணீரில் தான் பூக்கள்
மிதக்குமாம்.
கண்ணீருடன்
தங்களின் சோகத்தில் பங்கேற்கிறேன்....

பாலகன்
02-05-2008, 09:18 PM
மழைக்கோட் கொணர்வாள் அம்மா..

மழைஉறை கோணர்வாள் அம்மா,,,,,,,,, இப்படி இருக்கலாமா?

அருமையான எதார்த்தம்,,,,,,,,,,,

நன்றி ஆதி

அன்புடன்
பில்லா

அனுராகவன்
02-05-2008, 11:10 PM
வாழ்த்துக்கள் ஆதி!!
வாழ்க்கையில் முதல்
வாழ்க்கை தாயின் மடியில்
வாழ்வை சிறக்க தந்தையின் கல்வி
வாழ்வதற்கு உதவுமே!!
வாழ்வாங்கு நிலைக்கட்டும் உங்கள் கவி..

அமரன்
17-05-2008, 08:43 AM
நர்மதை வருத்தப்பட்டது
கபினிக்குள்ளாவது அடைப்பட்டிருக்கலாம்
காவிரியால் பிறக்கவில்லையே என..



எத்திப் பிழைக்கும் காக்கைகள்
இன்னும் இருக்கின்றன உலகத்தில்..
நர்மதை கட்டுண்டாலும்
தட்டிவிட்டு வேடிக்கை பார்க்கும்.

வருத்தங்கள் தொடர்கின்றன
எனதும்....

ஆதவா
19-06-2008, 10:10 AM
காவிரியால் பிறக்கவில்லையே என........

இதனைக் கொஞ்சம் விளக்கமுடியுமா ஆதி...

ஆதி
19-06-2008, 10:13 AM
காவிரியால் பிறக்கவில்லையே என........

இதனைக் கொஞ்சம் விளக்கமுடியுமா ஆதி...

கவிரியாய் பிறக்கவில்லையே என..

என்றிருக்க வேண்டும் ஆதவா..

தட்டச்சு பிழை.. மன்னக்கவும்.. திருத்திவிடுகிறேன்..

ஆதவா
19-06-2008, 11:05 AM
கவிரியாய் பிறக்கவில்லையே என..

என்றிருக்க வேண்டும் ஆதவா..

தட்டச்சு பிழை.. மன்னக்கவும்.. திருத்திவிடுகிறேன்..

நான் நினைத்தது சரிதான் ஆதி....

காவிரியின் கொடூரத்தை நாம் இன்று அறியவில்லை என்றாலும் காவிரியும் தின்பதில் சளைத்தவளல்ல..

நெருக்கப்பட்ட தேகத்தால் அவளின் தாகம் தீர்ந்து குருதி வற்றிக் கிடக்கிறாள். இயற்கை நிரந்தரமானதல்ல... அவள் பொங்கவும் காலம் உண்டு.

கவிதையின் தாக்கம் வலியோடு உள்ளது.

வாழ்த்துகள்