PDA

View Full Version : வாழ்க்கை

ஆதி
24-04-2008, 05:39 AM
என்னென்னவோ
வந்து விழுந்து
சில
நெளிவு சுழிவுகளை
ஏற்படுத்துகிறது

இருந்தாலும்
வாழ்க்கை நதி
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
தன் துருவம் நோக்கி..

அனுராகவன்
24-04-2008, 07:13 AM
ஆதியே மிக அருமையான கவி..
வாழ்க்கை பயணம் எதனை நோக்கி என்ற கேள்விக்கு அரும்மருந்து..
வாழ்வியல் கேள்விக்கு நல்ல பதில்..

pathman
24-04-2008, 10:35 AM
வாழ்கையின் ஓட்டம் எதை நோக்கி அருமையான கவிதை ஆதி அவர்களே

ஆதி
24-04-2008, 10:47 AM
ஆதியே மிக அருமையான கவி..
வாழ்க்கை பயணம் எதனை நோக்கி என்ற கேள்விக்கு அரும்மருந்து..
வாழ்வியல் கேள்விக்கு நல்ல பதில்..

பின்னூட்டத்திற்கு நன்றி அனு அக்கா..

ஆதி
29-04-2008, 10:34 AM
வாழ்கையின் ஓட்டம் எதை நோக்கி அருமையான கவிதை ஆதி அவர்களே

நன்றி பத்மன்...

சாலைஜெயராமன்
29-04-2008, 01:39 PM
நெளிவு சுழிவுதானே ஆறு.
ஆறுதல் அடைவதும் நெளிவு சுழிவினால்தானே.
அனைத்தும் நேராக இருந்தால் கர்வம் கவிழ்த்துவிடுமே,
அனுபவப் பாடத்திற்கு இறைவனின் கருணைப் பிரசாதம் வாழ்க்கையின் நெளிவு சுழிவான இடர்பாடுகள். தெளிந்த நேரான பாதை வாழ்வியலின் முடிவான முக்தினிலை. நெளிவைத் தட்டிச் செல்ல நேர் பாதையாகும்

நல்ல சிந்தனை ஆதி.

நாகரா
29-04-2008, 02:13 PM
மெய்ப்பொருள் மறந்து
இருள் சேர் இரு வினை
விழுந்து
பிறந்து நெளிந்து
இறந்து சுழிந்து
இம்மாயச் சுழலில்
சுழன்று சுழன்றுப்
பின்
மறந்ததைத் தெளிந்து
இறைக் கடல் சேரும்
வாழ்க்கை நதியின்
பயணத்தைப் படம் பிடிக்கும்
உம் குறுங்கவிதை
அருமையிலும் அருமை ஆதி.
ஆதியில் தோன்றிய தெளிவு
மாயையில் சிக்கி
நடுவிலே குழம்பினாலும்
அந்தத்தில் தெளிந்து
ஆதியைச் சேரும்
ஜீவ நதியின் ஓட்டத்தை
ஆதியேயன்றி வேறெவர்
அறிவார்!

ஆதி
05-05-2008, 09:58 AM
அனைத்தும் நேராக இருந்தால் கர்வம் கவிழ்த்துவிடுமே,
அனுபவப் பாடத்திற்கு இறைவனின் கருணைப் பிரசாதம் வாழ்க்கையின் நெளிவு சுழிவான இடர்பாடுகள். தெளிந்த நேரான பாதை வாழ்வியலின் முடிவான முக்தினிலை. நெளிவைத் தட்டிச் செல்ல நேர் பாதையாகும்

வெகு அழகான விளக்கத்தால் இந்த கவிதை இன்னும் சிறப்பு பெற்றுவிட்டது ஐயா.. கவிதையின் ஆழமளந்த உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றிகள் ஐயா..