PDA

View Full Version : சொல்லாமல் சொல்லிவிட



நாகரா
23-04-2008, 04:29 PM
கடந்தாயிற்று
கடைசிச் சுவர்.
அடைந்தாயிற்று
அதிசய வீடு.
பேரா இயற்கையாய்ப்
பேரானந்தம்
சொற்கடந்ததேயாயினும்
வீடு விட்டு
சுவர்களின் வியூகத்துள்
புகத்தான் வேண்டும்
சொல்லாமல் சொல்லிவிட.

அனுராகவன்
28-04-2008, 01:18 AM
நன்றி நாகரா அவர்களே!!
வாழ்க்கையின் கடைசி
சொட்டும் இறை
நாமமே !!
அறிந்திடு இறை!
கண்டிடு நிறை!

நன்றி கவிஞரே!!

நாகரா
28-04-2008, 03:28 AM
உம் அழகிய பின்னூட்டத்துக்கு நன்றி அனு.

ஓவியன்
28-04-2008, 04:42 AM
சொற்கடந்ததேயாயினும்
வீடு விட்டு
சுவர்களின் வியூகத்துள்
புகத்தான் வேண்டும்
சொல்லாமல் சொல்லிவிட.

இந்த வரிகளின் பின்னேயுள்ள அர்த்தத்தை கொஞ்சம் விளக்க முடியுமா நாகராஜன் அவர்களே...??

நாகரா
28-04-2008, 05:07 AM
"பரமானந்த அனுபவம்
வார்த்தைகளால் விவரிக்க முடையாததே ஆயினும்
அதைப் பற்றி
இந்த இக உலகத்துக்கு
மந்திரச் சொற்களால்
சொல்லி விட வேண்டும்"

இதுவே இவ்வரிகளின் உட்கருத்து, உம் கேள்விக்கு நன்றி ஓவியன்.