PDA

View Full Version : அந்தி



ஆதி
22-04-2008, 11:45 AM
பல வண்ணங்களில்
நாணம் கொள்ள
வானத்தால் மட்டும்தான்
முடிகிறது..

சிவா.ஜி
22-04-2008, 12:06 PM
அந்தி நேர வானம் ஒரு கிளைடாஸ்கோப். பலவண்ண, பலவடிவக் காட்சிகள் காணக்கிடைக்கும்.

வானத்துக்கு காதலர்கள் அதிகம். அவர்கள் வாங்கிகொடுத்த சேலைகளும் பல வண்ணம். கட்டிக்கொண்டு நாணுகிறாள், மினுக்குக்கிறாள்....ம்...அழகானவள் எதை உடுத்தாலும் அழகாகவே இருக்கிறது. வாழ்த்துகள் ஆதி.

கண்மணி
22-04-2008, 12:40 PM
அந்தி வானம்
நாணமெனில்
அப்புறம் ஏன் இருட்டு?

நாணத்தின் பண்பெதுவெனில்
வெட்கத்தில் சிவந்து
ஆசையில் வெளிறி
மோகத்தில் சூடேறி
ஆசை தீர்ந்து குளிர்ந்து
நினைவுகளை அசைபோட்டு
மீண்டும் சிவந்து
களைத்துக் கண்மூடி
இருள்வதல்லவா

அந்தியை மட்டும்
சந்திக்கு இழுப்பதேன்?

யாரணைத்தார்

ஆதி
22-04-2008, 01:20 PM
நாணம் என்றால்
மகடூஉக்குணம் மட்டுதானா ?
வட்கு விளிவு என்றும்
பொருள் படுமே..

கண்மணி
22-04-2008, 01:31 PM
பொருள் பட்டால் மட்டும் போதுமா?
பொருந்தவும் வேண்டுமே!!!

ஆதி
22-04-2008, 02:48 PM
பொருள்படுவதால்தான்
பொருந்துகிறது...

தாமரை
22-04-2008, 03:00 PM
தலைப்பைப் பாருங்கள்

வானம் நாணம் கொள்வது அந்தியில் மட்டுமா?

அதை மாற்றுங்கள்

அதைத்தான் கண்மணி சொல்கிறார்

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=338830&postcount=45

இதையும் பாருங்கள்

ஆதி
25-04-2008, 04:27 AM
உண்மைதான் அண்ணா, எனக்கு வைகறையை விட அந்தியை மிகப் பிடிக்கும் அதனால்தான் அந்தி நாணம் கொள்வதாய் எழுதினேன்.

தாமரை
25-04-2008, 06:28 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=157974&postcount=15

இதையும் படித்துப் பார்க்கவும்

ஆதி
25-04-2008, 07:03 AM
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=157974&postcount=15

இதையும் படித்துப் பார்க்கவும்

வித்யாசமான சிந்தனை அண்ணா,

இருக்கு ஆனா இல்ல என்பது இதுதானோ ? :)

மாற்றாம் என்பது மானிடத் தத்துவம்
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்

- கவியசரர்

வரிகள் தான் ஞாபகத்திற்கு வந்தன..

அமரன்
25-04-2008, 08:32 AM
எத்தனை கவிதைகளைக்
கொடுக்கிறது வானம்
அட்சய பாத்திரம் போல-

உழவர் வீட்டில்
நிறைந்திருக்கும் வறுமை
புலவர் வீட்டில்
குறைந்து போனதுக்கு
வானமும் காரணம்!


நல்ல திரி. நன்றி அனைவருக்கும்.

தமிழ்த் திரைவானில் மின்னும் நட்சத்திரக் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் "இது ஒரு பொன்மாலைப் பொழுது". (தகவல் சரியா???). "வானமகள் நாணுகிறாள்" என்று அந்தியைப் பாடி திரை உலகில் பிரவேசித்த அவர் வாழ்க்கை பிரகாசமானது..

ஆதி
25-04-2008, 08:35 AM
தமிழ்த் திரைவானில் மின்னும் நட்சத்திரக் கவிஞர் வைரமுத்துவின் முதல் பாடல் "இது ஒரு பொன்மாலைப் பொழுது". (தகவல் சரியா???). "வானமகள் நாணுகிறாள்" என்று அந்தியைப் பாடி திரை உலகில் பிரவேசித்த அவர் வாழ்க்கை பிரகாசமானது..

வானமகள் நாணுகிறாள் வேறு உடைப் பூணுகிறாள் இந்த வரி நினைவில் வைத்துதான் எழுதினேன்,ஒரு சின்ன வேறுபாடு வானம் ஏன் நாணியது என்று வைரமுத்துக் காரணம் சொன்னார் நான் சொல்லவில்லை.. :)

அனுராகவன்
25-04-2008, 09:09 AM
பல வண்ணங்களில்
நாணம் கொள்ள
வானத்தால் மட்டும்தான்
முடிகிறது..
ஆகா !! என்னே உந்தன் பிரம்மிப்பு ஆதி..
மிகவும் அனுபவத்து எழுதுதிய கவிகள்..
உங்கள் கவிதிறமை நன்கு புலப்படுகிறது..
குறைந்த வரியானலும் மிகுந்த அர்த்தங்கள்..
எப்படி இவையெல்லாம் எங்கள் மூலைக்கி எட்டமாட்டங்குது..

அனுராகவன்
25-04-2008, 10:10 AM
மேகம் கறுத்து
தீப்பொறி விசிரி
மெளம் தட்டி
தன்னை பார்க்க
காற்று மணபுரிய
வானம் அழுகிறது..