PDA

View Full Version : தந்துவிட்டேன் என்னை



rocky
22-04-2008, 08:24 AM
திருவாக இருந்தநான்
இன்று திருநங்கையாகிவிட்டேன்?
என்னுள் நீ வந்ததால்.


*****************************************

தன்னில் பாதியை பார்வதிக்குத்
கொடுத்தான் பரமசிவன் - அவன்
கடவுள் பாதியைக் கொடுத்தான், நான்
காதலன் நீ முழுமையாக எடுத்துக்கொள்.

********************************************

என்னை முழுவதும்
கொடுத்துவிடுவேன் உன்னிடம்,
கடவுளிடம் தஞ்சம்புகும்
துறவிபோல் இல்லை,
அவனுக்கும் முக்தி
என்ற எதிர்பார்ப்பிருக்கும்.
நான் குழந்தையின்
கைகளில் கொடுக்கப்படும்
பொம்மை போல்,
என்னை அலங்கரித்து
அழகு பார்க்கவும் சரி,
வீசியெரிந்து உடைக்கவும் சரி,
உனக்கு உரிமையுண்டு.

ஓவியன்
22-04-2008, 10:04 AM
திருவினுள் மங்கை நீ
நுளைந்ததால் நான்
திருநங்கை.....!!

ஆகா, அழகாக புது அர்த்தம் கற்பித்தீர் ராக்கி, திருநங்கை என்ற பதத்திற்கு...
மனதார்ந்த பாராட்டுகள் நண்பரே..!!