PDA

View Full Version : சில எளிய முக்கிய குறிப்புகள்



SathyaThirunavukkarasu
21-04-2008, 12:42 PM
1 வயிறு உப்புசம் இருந்தால் நன்கு நீர்க்க கரைத்தமோருடன் 1/4 tsp மிளகுதூள், சிட்டிகை பெருங்காயத்தூள் சேர்த்து குடித்தால் தீர்வு கிடைக்கும்
2 பித்தத்தை குறைக்க:- துவர்ப்பு, கசப்பு, இனிப்பு ஆகியவற்றை கொண்ட காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்றவை பத்தியமாகும். மாதுளம்பழமும், நெல்லிக்காயும் புளிப்பு சுவை இருந்த்தாலும் பித்தத்தை குறைத்துவிடும். எலும்பிச்சைசாறு வெல்லம் கலந்த கலவை, கறும்புச்சாறு வெல்லம் கலந்த் கலவை, புதிதாக கடைந்தமோரு வெல்லம் கலவை மிக நல்லது
3 வயிற்று போக்கை நிறுத்த:- ஓமத்தை வறுத்து அதனுடன் தண்ணீரில் வசம்பை உரைத்து கொடுத்தால் கட்டுப்படும்
மாங்கொட்டை பருப்பை பொடி செய்து சாப்பிட்டாலும் கட்டுப்படும்
சுத்தமான டீ டிக்காசனில் பால் சேர்க்காமல் சர்க்கரை சேர்த்து கொடுத்தாலும் கட்டுப்படும் (இது குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்)
சீரகத்தையும் உப்பையும் சம அளவில் எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்கினால் அஜீரனத்தால் ஏற்படும் வயிற்று போக்கு நிற்கும்

ராஜா
02-12-2008, 01:20 PM
பயனுள்ள தகவல்.. நன்றி..!

வசீகரன்
02-12-2008, 01:40 PM
நல்ல மருத்துவ குறிப்புகள்
நண்பரே....!
வேறு குறிப்புகள் இருந்தாலும் கொடுங்கள்...

vseenu
26-09-2011, 09:07 AM
மிக்க நன்றி

sujeendran
04-10-2011, 07:46 PM
அருமை பகிர்வுக்கு நன்றி