PDA

View Full Version : நிலை மாறுமா?



விகடகவி
21-04-2008, 03:26 AM
கண்கள் கசக்கிய
இளம் விதவைகள்
தனி இனம் கோரும்
அரவாணிகள்
எப்போது இந்த
நிலை மாரும்...

சிவா.ஜி
21-04-2008, 06:38 AM
இளம் விதைவைகளின் நிலை இப்போது பரவாயில்லை. இளைஞர்களிடையே நல்ல பரந்த மனப்பான்மை இருப்பதால் பலருக்கு வாழ்க்கை கிடைக்கிறது.

அதேபோல அரவாணிகளுக்கும் ஆதரவாய் செயல்பட இயக்கங்களும் இருப்பது வரவேற்கப்படவேண்டியது.

இன்னும் எழுதுங்கள் விகடகவியாரே. வாழ்த்துகள்.

ஓவியன்
21-04-2008, 06:44 AM
எல்லோரும் மனிதரே என்ற எண்ணம் எல்லோரிடமும் வந்துவிட்டால் போதும் விகடகவி, இரண்டு பிரச்சினைகளும் மாறிவிடும்....

ஆனால் அது நடக்குமா......???

அமரன்
21-04-2008, 09:18 PM
கண்கள் கசக்கிய
இளம் விதவைகள்
தனி இனம் கோரும்
அரவாணிகள்
எப்போது இந்த
நிலை மாரும்...


இறந்தகாலத்தை மாற்ற
வாழ்க்கையில் இல்லை
ரீவைண்ட் பொத்தான்!!

விகடகவி
05-05-2008, 03:59 AM
உந்தன் வாழ்த்துக்கு நன்றி..
அடுத்த கவியொடு வருகிறேன்,,,

சுகந்தப்ரீதன்
13-05-2008, 10:24 AM
எப்போது இந்த
நிலை மாரும்...
மனிதம் மலரும்போது
மற்றவை எல்லாம் மாறும்..
விகடகவியாரே..!!

சாலைஜெயராமன்
13-05-2008, 10:37 AM
சமூகத்தால் ஒதுக்கப்பட்ட "Transsexual" அரவாணிகளின் இனம் மிகப் பரிதாபத்துக்குரியதுதான்.

அவர்கள் வாழ்க்கைத் தரத்தைச் சின்னாபின்னப்படுத்தும் சமூக விரோத சக்தி அவர்களிடையே தோன்றியுள்ளதுதான் கொடுமையான விஷயம். பாலியல் தொழிலின் வக்கிரங்களுக்கு அதிகமாகத் துணைபோவது அவர்களில் ஒரு கூட்டம்தான். பாவம் இந்த அறியாமை நிலையை அவர்களுக்கு உணர்த்துவதற்காக தற்போது சமூக ஆர்வலர்களும் அவர்களிடையே தோன்றிவருவது ஒரு நல்ல அறிகுறி.

சென்னை மதுரை போன்ற நகரங்களில் இப்பாவப்பட்ட ஜென்மங்களுக்கு தங்கு வதற்கு ஒரு வீடு கூட வெகு ஜனங்களால் மறுக்கப்படுவது கொடுமை. சமூக அங்கீகாரம் பிறரைப் போல இவர்களுக்கும் தரப்பட்டால் புறநகர்ப் பகுதிகளுக்கு புலம் பெயர்ந்து சமூக நலத்திற்கு கேடுவிளைவிக்கும் தொழிலை விரும்பியோ விரும்பாமலோ கைக் கொள்ளும் பாவத்திலிருந்து விடுதலை பெற இவர்களுக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இதில் அரசாங்கத்தின் பங்களிப்பு மட்டும் போதாது. அனைவரும் நல்லிதயம் கொண்டு அவர்களையும் ஒரு உயிரினமாக அங்கீகரிக்கும் மனப்பான்மை நம்மில் அனைவரும் பெற வேண்டும்.

சமூக அக்கறை தாங்கி வரும் கவிதைகள் நம் மன்றத்தில் வெளிவருவது கண்டு மிக்க மகிழ்ச்சி திரு விகடகவி. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

அறிஞர்
13-05-2008, 02:01 PM
முன்பு இருந்த நிலைக்கு
இப்பொழுது நிலை பரவாயில்லை...

எதிர்காலம் இன்னும் பிரகாசமாக மாறும்
என்ற நம்பிக்கை இருக்கிறது..

பிச்சி
13-05-2008, 03:51 PM
மிக நல்ல கவிதை இன்னும் எழுதுங்கள்

அன்புடன்
பிச்சி

விகடகவி
14-05-2008, 04:00 AM
நன்றி அனைவருக்கும்..

அனுராகவன்
16-05-2008, 04:17 AM
புது கவிஞரே அருமை..
இன்னும் கவிகள் தாங்க..