PDA

View Full Version : நான் ரசித்தவை - அனுஅனுராகவன்
12-04-2008, 08:29 AM
இணையக் கடலில், நான் கால் நனைக்கையில்,
எனக்குள் சிலிர்ப்பையும் களிப்பையும் தந்த சில கவியலைகளை,
தோற்றுவாய்களுக்கு நன்றிகூறி,
உங்கள் மகிழ்வுக்காகவும் அழைத்து வருகின்றேன்...

அனுராகவன்
12-04-2008, 08:29 AM
நீ வரும் வரை
உன்னைத் தேடுகிறேன்
நீ வந்த பிறகு
என்னைத்தேடுகிறேன்...!

உன் ஒரவிழிப் பார்வையும்
புன்னகையும்
ஒருமுறையேனும் வீசிவிட்டுப் போ
காலம் முழுமைக்கும்
கவிதைபாட
அதையே
கருப்பொருளாக்கிக்
கொள்கிறேன்

அன்று உன்னிடம்
சொல்லமுடியாமல்
தவித்தேன்...!
இன்று உன்னை
மறக்க முடியாமல்
தவிக்கிறேன்...!
ஓ... இதுதான் காதலா..?

ஆக்கம் :சோனாசிவசுப்பிரமணியன்
விபரம்:தமிழ்த்தோட்டம்..

அனுராகவன்
12-04-2008, 08:42 AM
எல்லோரும்
அது குறித்து
அழுது முடித்து
எதேச்சையாகவோ அல்லது
கட்டாயமாகவோ
மறந்து விட்ட சூழலில்
இன்று தான் சாவகாசமாய்
அங்கு சென்றேன்.

சாயம் போனதாய்
சில எழுத்துக்கள் அழிந்ததாய்
கிடந்தது
முதல் மதிப்பெண்ணிற்குரிய அட்டை
பெற்றோர் கையொப்பத்தில்
அழுத்தப்பட்ட கைநாட்டு
ஒழுகியிருந்தது

அன்றுதான்
அது குறித்து
முதன் முதலாய்
அழ ஆரம்பித்திருந்தேன்

ஆக்கம்:பொன்சிவசுப்பிரமணியன்
விபரம்: தமிழ்த்தோட்டம்
என் நண்பருக்கு நன்றி

அனுராகவன்
13-04-2008, 12:14 AM
கடற்தாயே...
நீயே சொல்
சொல்லாமல் ஏன் பிந்தி வந்தாள்?
எம்மவரின் அவலங்களைச்
சடலங்களாய்ச் சுமந்துகொண்டு
கண்களில் குருதி வடிய வந்தாள்.
கண்டாயோ
என் நண்பன் என்னவானான்?
எந்தக் கரையில்
உடலூதிக் கிடந்தானோ?
ஓ...! கடற்காற்றே
நீ,
வழம்மாறி வீசியிருந்தால்...
சுனாமி வரமாட்டாள் என்று
நெடுந்தீவுக்குச் சொல்லியிருப்பாய்.
பாவம்
மரணங்களின் செய்தி கூடக்
கிட்டாத தொலைதீவில்,
ஏக்கங்களையும் துக்கங்களையும்
கடலலைகளிடம் சொல்லிவிட்டுக்
காத்திருக்கும் மக்கள்...
கடற்தாயே நீ மலடி
ஏனந்தத் தீவுகளை
அனாதரவாய்த் தனியே விட்டாய்?
கடற்தாயே...
உன் நீள் பரப்பில்
அனாதரவாய் மரணித்த எம்மவரை
புதிய கல்லறைகளை எழுப்பி
யனாதையாக கல்லறைக்குள் என் நினைவூட்டு.
ஆனால்,
இனிவருங் கல்லறைகள்
வெறும்
இழப்புக்களின் நினைவல்ல,
எமது
இலட்சியங்களின் நினைவாகட்டும்!
இனியும் சொல்லாமல் வராதே!!!

கவிஞர் பெயர் தெரியவில்லை..
நன்றி அவருக்கு

அனுராகவன்
13-04-2008, 12:21 AM
தூரப் பயணங்களுக்காகவோ,
துப்பாக்கி ஏந்தி
திரிவதற்காகவோ
அவர்கள் குழந்தைகளை
பெற்றெடுக்கவில்லை...

ஈழந்தமிழர்கள்
தன் வாழ்க்கையில்
கஷ்டபட பிறக்கவில்லை
அதைதாண்டி வெற்றிக்கொள்ள
சோகம் மறையும் காலம்..
கண் சிமிட்டும் தூரம்தான்..

அனுராகவன்
13-04-2008, 04:13 AM
முன்பைவிட என்னை
அலங்கரித்துக்கொள்வதில்
அதிக நேரம் செலவாகிறது.
புத்தாடைகள் வாங்கும்போது
இது அவனுக்கு பிடிக்குமா
என மனம் நினைக்கிறது.

நான் வெளியே எங்குசென்றாலும்
அவன் வந்திருக்கிருக்கானா?
என கண்கள் அவனை தேடுகிறது.

நான் தனியே இருக்கும்போது
அவனோடு இன்று என்ன பேசலாமென
நினைக்க தோன்றுகிறது.

என்னை அவன் தனியே திரைப்படத்திற்கு
அழைப்பானா? என மனம் ஏங்குகிறது.
திருமணமே வேண்டாமென்றவளுக்கு
திருமணத்தின்மீது ஆசை வருகிறது.

இவையனைத்தும்
அவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து...

ஆக்கம்:சோனாசிவசுப்பிரமணியன்

அனுராகவன்
13-04-2008, 04:19 AM
புலிக்கண்மாயிலே
புளியமரத்தின் ஓரத்திலே
ஓலை குடிசையிலே
வற்றகுழம்பு வாசம் வீசயிலே
சானமிட்ட தரையினிலே
தாயின் மடியினிலே
தலைசாய்த்து படுக்கையிலே
உரங்கிய நேரம் தெரியவில்லை
சுகமாய் எழுந்தேன் காலையிலே

சிங்கை சென்றேன் அன்று மாலையிலே
பஞ்சு மெத்தையிலே
படுத்து புரலுகையிலே
தூக்கம் வரவேயில்லை
நாகரீக உணவினிலே
நாக்கு செத்துப் போனாலும் – தாயே
அன்று நீ
அன்பால் பரிமாறிய வற்றகுழம்பு
வாசமிங்கே!!!!!!……

ஆக்கம்:சுடலை மணி.....

அனுராகவன்
13-04-2008, 04:38 AM
அம்மா காட்டும்
பாசத்தை விட
அதிகமான
பாசத்தை காட்டுபவர்கள்

அப்பா
நால்வழி படுத்துவதை விட
அதிகமாக
நல்வழி படுத்துபவர்கள்.

காதல் செலுத்தும்
அன்பை விட
அதிகமான
அன்பை செலுத்துபவர்கள்.

துணையுடன் உள்ள
உரிமையை விட
அதிகமாக
உரிமை கொண்டடுபவர்கள்.

மொத்தத்தில்
அனைவரையும் விட
அக்கறை கொண்டவர்களே
நண்பர்கள்.
அவர்களை வாழ்த்திகிறேன்..
என்றன்றும் நேசத்துடன்..

அனுராகவன்
17-04-2008, 06:25 AM
அவர்கள் வந்தார்கள்...
கல்வித்திட்டம் தந்தார்கள்அவர்களின்
ஆய்வுக் கூடங்களின்
கண்ணாடிக் குடுவைகளில்
கலக்கப்பட்டதெல்லாம்
கல்விக் கோட்பாடுகளும்
கலாச்சாரச் சீர்கேடுகளும் தான்...மூளைச் சலவையில்
கடைசி மூலக்கூறுகளைக் கூட
அவர்கள்
விட்டார்களில்லை!விளைவு...
மனிதாபிமானம்
குற்றுயிராய்க் கிடக்க
பணங்களின் மேல் நடந்து
பட்டம்பெற வைத்தார்கள்...கல்விப் போர்வையில்
வெள்ளையர் தந்ததெல்லாம்
கொள்ளையர்களைத் தான்...
கற்பைக் கறைப்படுத்தி
காதலர் தினம்
தந்தார்கள்!கல்லூரி தினங்களில்
ஆடையைக் கிழித்துக்கொண்டு
"நாகரீகத்தை"
நடனமாட விட்டார்கள்!...பாவம் பாலகர்கள்
ஆரம்ப பள்ளியில்
அரும்புகளின் முதுகுகளில் கூட
ஒட்டக வளைவுகள்!...பத்து வயதிலும்
பரிசோதனைக் குட்படுத்தப்படும்
பார்வை நரம்புகள்...இவர்கள்
துடைத்து போட்டுக்கொள்ளும்
மூக்குக் கண்ணாடிகளில்
எழுத்துக்களே
மங்கலாய்த் தெரிய
எதிர்க்காலம்?!

ஆக்கம்:பொன்சிவசுப்பிரமணியன்

அனுராகவன்
17-04-2008, 06:38 AM
காதல் தோல்வி!!-
உன் இதயம் இரும்பென்று
தெறியாமல் மோதியதில
என் இதய கண்ணாடியில்
சேதம்……….

அனுராகவன்
18-04-2008, 01:05 AM
எது நாகரீகம் ????

குறை ஆடையை
அணியச் சொல்லி
"கற்பை" மட்டும்
கழட்டி வைக்கச் சொல்கின்றனர்!

விளைவு!...

கிழிக்கப்பட்ட ஆடைகளுக்குள்
கற்புத் துகள்களைத் தேடி
காவல் நிலையங்களில்
பெண் வரிசைகள்!...

உடலை மறைப்பது
உரிமை மீறல் என்றால்
உடையைக் குறைப்பதற்கு
என்ன பெயராம்?

அனுராகவன்
18-04-2008, 01:07 AM
மெல்ல அழு
உன் கண்ணீரால்
நம் காதல் புனிதப்படட்டும்

வெளிச்சத்தை மட்டும் நேசிக்காதே
இருளையும் நேசிக்கப் பழகு
சுட்ட களிதான் மட்பாண்டமாகும்
அதுபோல் நம் காதலும் சுடப்படட்டும்

முள் குத்துகிறது என்பதற்காக
பாதங்களை வெட்டி விடலாமா?
பாதையைத்தான் சுத்தப் படுத்த வேண்டும்

கடிகார முள் சுற்றாமல் இருக்கலாம்
ஆனால் காலம் கடந்துகொண்டேதானிருக்கும்
அதுபோல் நான் உன்னைச் சந்திக்காவிட்டாலும்
நம் காதல் வளர்ந்துகொண்டேதான் இருக்கும்

ஆக்கம்:ஆரென்
விபரம்:தமிழ்தோட்டம்

அனுராகவன்
18-04-2008, 04:45 PM
நான் கவிஞன் இல்லை
எனக்கும் கவிதைக்கும் வெகு தூரம்...
இருந்தும்
நான் கவிதை எழுதுகிறேன் என்றால்
அது நீ கேட்பதால் மட்டுமே
எத்தனையோதடவை
உன் பெயரைவிட சிறப்பாய் ஒரு
கவிதை எழுத முயன்றிருக்கின்றேன்.
அத்தனை தடவையும்
என் கவிதை பிடிக்காமல்
உன் பெயரை எழுதி படித்திருக்கிறேன்
சிறப்பான காதல் கவிதைகள்
பல பல இருப்பினும்
நான் எழுதும் ஒவ்வோர் கவிதையும்
புதிதாய் உயிர்பெறுகிறது...
உன்னைப் பற்றி எழுதுவதால்
மீண்டும் சொல்கிறேன்
நான் கவிஞன் இல்லை
எனக்கு கவிதைகள் எழுதத்தெரியாது.
ஆனால்,
உன்னைப்பற்றி நான் எழுதும் அனைத்தும்
கவிதைகளாகி விடுகின்றன.

என் தோழியின் கவி..
பெயர்;ஜெபா..