PDA

View Full Version : மீன் குழம்புக்கு மண் சட்டி வாங்கிய கதை



தங்கவேல்
20-04-2008, 12:40 PM
இந்தப் பதிவு எடிட் செய்யப்பட்டுள்ளதை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால் நீக்கிவிடுகிறேன்.

lolluvathiyar
21-04-2008, 08:31 AM
ஆகா தங்கவேல் கொஞ்சம் நாளா நன்டு மசாலா, மீன் பிடிப்பது மீன் குழம்பு வைக்க சட்டி என்றூ ஏதோ மீன் நினைவாகவே இருப்பீர்கள் போல இருக்கு அந்த அளவுக்கு மீன் குழம்பு உங்களை ஆட்டி படைக்கிறது. இந்த பதிவும் சூப்பராக இருக்கு. இன்னொரு டிப்ஸும் தருகிறேன் க*றி குழ*ம்புக்கு மிக்ஸில் ஆட்ட* கூடாது, ஆட்டுக*ல்லில் ஆட்டி குழ*ம்பு வைத்தால் சுவை இன்னும் அருமையாக* இருக்கும்

மனோஜ்
21-04-2008, 10:28 AM
மீன் குழம்பு சாப்டிங்கலா இல்லையானு சொல்லவே இல்லையே தங்கவேல் அவர்கலே

தங்கவேல்
21-04-2008, 11:06 AM
வாத்தியாரே... அம்மனி ஊருக்குப் போயிட்டாங்க. என் பையனும் , அம்முக்குட்டியும் அப்பா இன்னிக்கு நண்டு சாப்பிட்டேனே, அப்பா, இன்னிக்கு மீன் சாப்பிட்டேனே என்று சொல்ல சொல்ல நினைவுகள் என்னைச் சூழ்ந்து கொண்டு பாடாய் படுத்துகின்றது. மனோஜ் வாரம் ஒரு முறை மீன் அல்லது நண்டு அல்லது கருவாட்டுக் குழம்பு , ருசிக்கிறேன்..

இதயம்
21-04-2008, 11:35 AM
தங்கவேல் அண்ணாவின் பதிவுகளில் இருந்து அவர் கடலுணவுகளில் மிகவும் நாட்டம் உள்ளவர் என்று தெரிகிறது. இதற்காகவோ என்னவோ மீனவர்களை அதிகம் நண்பர்களாக கொண்டிருக்கிறாரோ என்று கூட சந்தேகம் வருகிறது. நான் பிறந்த ஊருக்கும் அவர் தன் பதிவுகளில் குறிப்பிட்டிருந்த மனோரா என்ற சுற்றுலாத்தலத்திற்கும் வெறும் 3 கி.மீ தூரம் தான். அந்த மனோரா இருக்கும் இடமான சரபோஜிராஜன்பட்டினம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளில் தான் தரையில் வாழும் மீன்கள் முழுக்க, முழுக்க படமாக்கப்பட்டது. சிவப்புத்தாலி என்ற படமும் அங்கு படமாக்கியிருந்தார்கள்..!! (என்ன செய்வது... நம்மவர்களுக்கு திரைப்படத்தில் பார்த்தால் தான் அந்த இடம் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக தெரிகிறது. ஒரு முறை வேளாங்கண்ணி கடற்கரையில் குஷ்பூ குளித்த இடம் என்று ஒரு இடத்தை வழிகாட்டி அறிமுகப்படுத்தியது இப்போது நினைவுக்கு வருகிறது.!). உங்களுக்கு மீனவர்கள் நண்பர்களாக இருக்கலாம், அதற்காக 50 ரூபாய்க்கு 5, 10 கிலோ மீன் கிடைக்கும் என்பதெல்லாம் ரொம்ப ஓவர்..!! உங்கள் நண்பர்கள் உங்களுக்கு இலவசமாக கொடுத்தால் அதற்காக எல்லோருக்கும் மீன் அங்கு இலவசமாக கிடைக்கும் என சொல்வீர்களா..?

பானை வாங்கப்போன கதையை இரசனையாக எழுதி இருந்தீர்கள்..! நன்றி...!!

உங்களிடம் ஒரு கேள்வி..!! மாணிக்கம் என்பது உங்கள் தந்தையின் பெயர். தேவர் என்பது அவர் படித்து வாங்கிய பட்டமா..? (நன்றி பாரதிராஜா.!).வானளவு விஞ்ஞானம் வளர்ந்து விட்ட இந்த சூழலிலும் இத்தனை விபரம் அறிந்த நீங்களே இன்னும் ஜாதியின் வாலை பிடித்துக்கொண்டிருப்பது ஏன் என்று புரியவில்லை. மனிதர்களில் கள்ளர், பறையர், தேவர், இடையர், வலையர் என்று அவர்கள் செய்த தொழிலை வைத்து தான் அப்போது குறிப்பிட்டார்கள். இப்பொழுது கள்ளர்கள் திருடிக்கொண்டும், பறையர்கள் பறையடித்துக்கொண்டும், இடையர்கள் கால்நடைகளை வளர்த்துக்கொண்டும், தேவர்கள் வானுலகத்தில் வாழ்ந்து கொண்டும் (இவர்களுக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்று தெரியவில்லை), வலையர்கள் மீன் பிடித்துக்கொண்டுமா இருக்கிறார்கள்?. தான் பிறந்த இனத்தை கொண்டு யாரும் உயர்ந்தவரில்லை. உயர்வு, தாழ்வு என்பது அவரவர் நடத்தையில் இருக்கிறது. இது புரியாமல் இன்றும் பெயரோடு ஜாதியை இழுக்க வேண்டிய அவசியம் என்ன என்று தெரியவில்லை.

இதை நீங்கள் ஒரு கதையில் எழுதியிருந்தால் ஜாதியின் தீமையை வெளிக்காட்ட பயன்படுத்தியதாக சொல்லலாம். ஒரு உண்மைச்சம்பவத்தில் நீங்களே மாணிக்கத்தேவர் பையன் என்று சொன்னதாக எழுதியிருக்கிறீர்கள். மனிதர்களை சக மனிதர்களாக பாருங்கள். அவர்களை ஜாதி கொண்டு தயவு செய்து பிளவு படுத்தாதீர்கள். இதை உங்களுக்காக மட்டும் சொல்லவில்லை. யார், யாரெல்லாம் தன் மதம், இனம் ஆகியவற்றை கொண்டு பெருமை கொள்வது மட்டுமல்லாமல், அதை கொண்டு மனிதர்களையும் பிளவு படுத்துகிறார்களோ அவர்களுக்கும் நான் கேட்கும் கேள்வி இது..! பதில் தெரிந்தவர்கள் சொல்லட்டும்..!! மற்றபடி உங்களை வருத்தப்பட வைக்க சொல்லியதாக தயவு செய்து நினைக்க வேண்டாம். நம் தலைமுறை மேற்கொள்ளும் மாற்றம் தான் இனி வரும் தலைமுறையாவது நிம்மதியாக வாழ வழி வகுக்கும்..!!

தங்கவேல்
22-04-2008, 01:26 AM
இதயம் முதலில் மீன் கதைக்கு வருவோம். இன்றும் என் ஊரில் ஐந்து ரூபாய் கொடுத்தால் அரை கிலோ மீன் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. என் ஊர் என்பது கடற்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. தமிழ் மன்றத்தில் தவறான தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இன்னும் நேரவில்லை என்று நினைக்கிறேன்.

என்னடா இன்னும் எவரும் ஒரு எதிர்ப்புக் குரல் கூட கொடுக்கவில்லையே என்று எண்ணி இருந்தேன். இதயம் அந்தப் பெருமையினை தட்டிக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் என்ன நடந்ததோ அதை அப்படியே மாற்றாமல் கொடுத்தால் தான் சுவையாக இருக்கும் என்று எழுதினேன். மேலும் எனக்கு ஜாதி வெறி ஆசையெல்லாம் இல்லை என்பதற்கு ஒரு உதாரணம் என் திருமணம். ஜாதிக்காக வாழ்வினையே தொலைக்கும் அளவுக்கு பழக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த நான் வெள்ளாள கவுண்டர் இனத்துப் பெண்ணைக் காதலித்து திருமணம் செய்து பிள்ளைகளைப் பெற்று வாழ்வது இதயத்துக்கு தெரிந்து இருந்தால் இந்தக் கேள்வியினைக் கேட்டு இருக்கமாட்டார் என்று எண்ணுகிறேன்.


என் அப்பா பெயர் மாணிக்கத்தேவர் தான். ரெஜெஸ்டரில் அப்படித்தான் இருக்கிறது. எனது பாஸ்போர்ட்டிலும் கூட அப்படித்தான் இருக்கிறது. அதற்கு நான் என்ன செய்வது. பதிவு செய்யப்பட்ட ரெக்கார்டுகளில் இருப்பதால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது. பெயர்களில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அது ஒரு அடையாளச் சின்னமாகத்தான் நினைப்பேன்.

இருக்கட்டும். இதயத்தின் அடுத்த ஒரு கருத்துக்கு வரலாம். என்னை மாணிக்கதேவர் பையன் என்று அறிமுகப்படுத்தியதாக சொல்லி இருக்கிறார். வேறெப்படி அறிமுகம் செய்து கொள்வது உள்ளூரிலே.... ஊரில் என்னை தேவரே என்று தான் அழைப்பார்கள். அதற்கு நான் என்ன செய்வது ?

கிராமத்து சூழலில் வாழ்ந்து வரும் போது சில நடைமுறைகளை மாற்ற இயலாது. உண்மையினை எழுதினால் சிலருக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது. அதற்கு நான் என்ன செய்வது... இதே நான் வேறொரு ஜாதியில் பிறந்து இருந்தாலும் என்ன நடந்ததோ அதைத்தான் எழுதியிருப்பேன். என்னை வளர்த்தது, தூக்கி கொஞ்சியது, பள்ளிக்கு தூக்கிச் சென்று படிக்க வைத்தது எல்லாம் பிற ஜாதிகாரர்களே.


ஆதலால் இதயம் எனக்கு ஜாதி பற்று இல்லை என்பதை இப்போதாவது புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். மேலும் அந்தப் பதிவு கிராமத்து சூழ் நிலையில் நடந்ததால் அப்படியே பதிவு செய்தேன். அதை ஒரு சம்பவமாக மட்டும் பாருங்கள்...

அப்புறம் இதயம்....

இதயம்
22-04-2008, 07:28 AM
இதயம் முதலில் மீன் கதைக்கு வருவோம். இன்றும் என் ஊரில் ஐந்து ரூபாய் கொடுத்தால் அரை கிலோ மீன் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. என் ஊர் என்பது கடற்கரையில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. தமிழ் மன்றத்தில் தவறான தகவலைச் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இன்னும் நேரவில்லை என்று நினைக்கிறேன்.
பதிலுக்கு நன்றி தங்கவேல் அண்ணா..! இத்தனை மலிவாய் மீன் விற்கும் உங்கள் ஊர் என்னவென்று தெரிய ஆவலாய் இருக்கிறேன். பொதுவில் இல்லாவிட்டாலும் தனி மடலிலாவது உங்கள் ஊரின் பெயரை தரவும். நான் ஊர் வந்தால் மீன் வாங்க அங்கே வருகிறேன். எனக்கும் தமிழ் மன்றத்தில் தவறான தகவலை தருதல் பிடிக்காது என்பதால் தான் நான் அறிந்ததை இங்கே குறிப்பிட்டேன்.

நீங்கள் எதிர்ப்பு குரலை எதிர்பார்த்தது எதற்கென்று குறிப்பிடவில்லை. அது மீனின் மலிவு விலைக்கா..? அல்லது ஜாதியை குறிப்பிட்டதற்கா..? முதலாவதற்கு எதிர்ப்பு அவசியமில்லை. நான் அறிந்த சூழ்நிலை என்பதால் தான் விலை பற்றி குறிப்பிட்டேன். மற்றபடி எதிர்ப்பு அல்ல அது..!! ஆனால், இரண்டாவது காரணத்திற்கு மற்றவர்கள் இல்லாவிட்டாலும் என் எதிர்ப்பு அவசியம் வரும்..!!

உங்கள் திருமணம் காதல் + கலப்பு திருமணம் என்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். மனித சமூகத்திற்குள் ஒற்றுமை ஏற்படுத்த காதல் எப்போதும் பேருதவியாக இருக்கிறது. பொதுவாகவே ஜாதியை உடும்பாக பெயரிலும், செயலிலும் பிடித்துக்கொண்டு அலையும் நபர்களை கண்டால் எனக்கு கோபம், கோபமாக வரும். காரணம், தேசத்தின் ஒற்றுமை குலைவுக்கும், பொருளாதார சீரழிவுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அவர்கள் காரணமாக இருக்கிறார்கள். ஒரு இனத்தில், மதத்தில் பிறப்பதில் ஒருவருக்கு என்ன பெருமை அல்லது பங்கு இருக்கிறது. எந்த இனத்தில் அல்லது மதத்தில் பிறக்கிறானோ அவன் அதிலேயே நிலைத்து விடுவது தான் நடக்கிறது. அதற்காகவே அந்த மதத்தில், இனத்தில் நடக்கும் தீமைகளை கேட்க அறிவு தூண்டுவதில்லை. இது மிக, மிக மோசமான விஷயம். ஏன், எதற்கு, எப்படி என கேட்க தகுதியுள்ள ஒரே உயிரினம் மனித இனம். நீங்கள் சொன்னது போலவே சமூகம் ஏற்படுத்தி வைத்த நடைமுறை தான் இன்று மாறுதல் ஏற்படுத்த மிகவும் கஷ்டப்படவேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தி விட்டது. அதை இந்த தலைமுறையும், இனி வரும் தலைமுறையும் தான் அதை மாற்ற வேண்டும். உங்கள் பிள்ளை தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள நான் தங்கவேல் தேவர் பிள்ளை என்ற நிலை வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை..!

ஜாதியை குறிப்பிட்டதால் ஏற்பட்ட மனவருத்தம், உங்கள் காதல் திருமணம் அறிந்து பறந்தோடி விட்டது..!! நன்றி உங்கள் பயனுள்ள தகவலுக்கு..!!

lolluvathiyar
22-04-2008, 03:50 PM
அந்த மனோரா இருக்கும் இடமான சரபோஜிராஜன்பட்டினம், மல்லிப்பட்டினம்

தஞ்சையை ஆன்ட மராட்டிய மன்னன் சரபோஜி மகராஜா ஆட்சியில் இருந்த ஊர் மனோரா, இந்த ஊரில் சரபோஜி கப்பல் படை அமைக்க திட்டமிட்டிருந்தாராம் ஆனால் அதற்குள் இறந்து விட்டாராம். அவர் மகன் சிவா ஜி சில நாட்கள் ஆட்சி செய்தாலும் வாரிசு இல்லாமல் இறந்து விடவே தஞ்சையை பிரிட்டிஸ் அரசு எடுத்து கொன்டதாம். இது நான் கேள்விபட்ட வரலாறு சரியாக தெரிந்தவர்கள் சொல்லவும், இதயம் உங்களுக்கு முழு விபரம் தெரியுமா?