PDA

View Full Version : பிரித்து மேயுங்களேன்!!



கண்மணி
20-04-2008, 12:09 PM
இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிகோடியாய் கொட்டப்பட்டன...
கடலில்!

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

ஆழ்கடலோ அமைதியாக!!!

எனது இந்தக் கவிதையையும் பிரித்து மேயுங்களேன்..
கவிதையை நாராக்கினாலும் பரவாயில்லை..:icon_rollout:

தாமரை
20-04-2008, 01:11 PM
இது புதுக் கவிதை அதனால் கருத்து உட்கருத்து நுணுக்கம் பார்த்தால் போதுமே!!

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிகோடியாய் கொட்டப்பட்டன...
கடலில்!

கடல் என்பது கடல் அல்ல.. வேறு ஏதோ ஒன்று கடல் மாதிரி..

இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

அதாவது இல்லாத ஒன்று இருக்கிறதென்று தோற்றம் உருவாகும் படி..
கவிதைகள், கதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன.. கடலில்.. எந்தக் கடல்? தமிழ்க் கடலா? மன்றக் கடலா? இல்லை காகிதக் கடலா?

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

கரையோரம் இருக்கும் அலைகள் ஆர்ப்பரிக்கின்றன. எதற்கு? கொட்டப்பட்ட கதைகளுக்கு.. அப்படியானால், கடல் என்பது என்ன என மறுபடி ஆராய்வோம்..

இல்லாதது இருக்கிறதென்று பொய்யாய் புனைச்சுருட்டாய் கவிதைகள் கதைகள் கடலில் கொட்டப்பட்டன.. ஆராவாரித்துக் கொண்டு இருக்கும் கரையோர அலைகளைக் கண்டு கடல் பாராட்டுகிறதென்று எண்ணம் கொண்டு!!

ஏன் கவிதைகளைக் கொண்டு போய் கடலில் கொட்ட வேண்டும்? அலையோசையை கரவோசையாய் ஏன் தவறாய் எடுத்தக் கொள்ள வேண்டும்?

அப்படியென்றால் அது என்னக் கடல்? அது என்ன புனைக(வி)தை?

ஆழ்கடலோ அமைதியாக என்பது எதையோ கொட்டி சுட்டிக் காட்டுகிறது..

சொல்லும் புனைக்கதைகளும் கவிதைகளும்
கடலில் கரைத்த பெருங்காயம்..

அலைகளும் கைதட்டவில்லை
ஆழ்கடலிலும் மாற்றமில்லை

ஆதலால் பொய்க்கதை புனையாதே

என்று சங்கேதமாய்


உட்கருத்து -- சும்மா ரீல் விட்டுகிட்டே போகாதே.. இங்க யாரும் நம்பலை என்பதா???

தாமரை
20-04-2008, 02:54 PM
இருக்கிறதென்று
இல்லாததுக் கருதப்படவேண்டி..

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்
கோடிக்கோடியாய்க் கொட்டப்பட்டன...
கடலில்!

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!

ஆழ்கடலோ அமைதியாக!!!

எனது இந்தக் கவிதையையும் பிரித்து மேயுங்களேன்..
கவிதையை நாராக்கினாலும் பரவாயில்லை..:icon_rollout:

சந்திப் பிழைகள் உண்டு இதில்..

வார்த்தை மாலைகள் - வானவில் கவிதைகள். என்ன வித்தியாசம் இருக்கு முரணா?

மாலைகள் மற்றவரைப் போற்ற, புகழப் போடப்படுபவை.. ஆக துதிபாடல்கள்..

வானவில் கவிதைகள் - வானவில்லின் குணங்கள் என்ன? அந்நேரத்து அதிசயம், ஒரு நிறப்பிரிகை, அதாவது இருக்கும் ஒரு வெள்ளொளியை (ஏற்கனவே இருக்கும் ஒரு கருத்தை) பிரித்து ஜாலம் காட்டும் சிறு கவிதைகள்.. அதாவது வசீகர வார்த்தைகள்..போட்டு ஏற்கனவே இருப்பதை மேக்கப் போட்டு காட்டும் கவிதைகள்.. அதாவது அலங்காரச் சொற்கள்.. அதாவது வாய்ஜாலங்கள்

துதி பாடுவது, வாய்ஜாலங்கள் என ஆயிரக்கணக்காய் வார்த்தைகள் கொட்டப் படுவது அரசியல் மேடைகளில்..

அப்போ ஆராவாரிக்கும் அலைகள், பிரியாணிப் பொட்டலத்திற்கு அழைத்து வரப் பட்ட கூட்டமோ?

ஆழ்கடல் வாக்காளரோ?

அப்போ மேடைப் பேச்சிற்கு கிடைக்கும் கைதட்டல்களும் உண்மையில்லை,
வாக்காளனின் மனமும் ஆழமான அமைதியில்
மேடையில் பொன்னாடை. மாலை, சோடா, வாய்ஜாலம்..

இப்படி அரசியல் பிண்ணனியில் ஒரு அர்த்தம் எடுக்கலாமே!!!

அதுசரி கொஞ்சம் போலிச்சாமியாருக்கும் போகலாமே!!!


இல்லாத சக்திகள் இருக்கிறது எனச் சொல்லி, துதி பாடி, வர்ணஜாலமாய் பாடல்கள் பரப்பி விளம்பரங்கள் செய்து

கூடி வரும் கூட்டத்தின் ஆரவாரம் கண்டு அதை மிகச் சிறந்த பாராட்டாய் எடுத்துக் கொண்டு, தன்னை கடவுளாக, சக்திபடைத்தவராக எண்ணிக் கொண்டு

மிதப்பில் இருப்பவர்களுக்கு..

ஆழ்கடலாய் கடவுள் அமைதியாய் இருப்பது புரிவதில்லை..








இப்படியும்

தாமரை
20-04-2008, 03:26 PM
இதைக் கவிதை என்று சொல்வதை விட ஒரு ஃப்ரேம் வொர்க் எனச் சொல்லலாம்..

பொய்யை உண்மையாக்க முயற்சி, வீண் ஆடம்பரம், முகஸ்துதி, உண்மை

இந்த நான்கு டொமைன்கள்.. அவற்றிற்கு உள்ள தொடர்புகள்..

இதுவே கவிதையாய் வெளிப்பட்டிருக்கிறது..

உதாரணத்திற்கு ஒரு தலைக் காதல்

அவள் தன்னைக் காதலிக்கிறாள், அவளிடம் காதல் இருக்கிறது என்று இல்லாததை இருப்பதாய் காட்ட,

வார்த்தைகளால், கவிதைகளாய் அவளுக்காய் கோடியாய் கொட்ட

அதைக் கேட்ட நண்பர்கள் பொழுது போக்காய் ரசிக்க, அவன் போலி மயக்கத்தில்.. அந்தப் பெண்ணோ அமைதியாய், இவை எதனாலும் பாதிக்கப் படாமல்..

இதையே இருதலைக் காதலில்லா காதல் என்றால்

தங்களுக்குள் காதல் இருக்கிறது எனக் காட்ட, காதலர்கள்னா அப்படித்தான் இப்படித்தான் என உணர்ச்சி பூர்வமாய் வசனம் பேசிக் கொள்ளும் காதலர்கள்,,. சுற்றி இருக்கும் ஜால்ராக் கூட்டத்தின் கேலிகள் கிண்டல்கள்..

உண்மைக் காதலோ அமைதியாய்.. இவர்களுக்கு மத்தியில் காதலும் இல்லை. நண்பர்களும் இதை ஒரு டைம் பாஸ் என்று அறிந்தே இருக்கிறார்கள்.. காதலும் அலட்டிக் கொள்ளவில்லை..

சும்மா நம்ம வெங்கடாஜலபதியை எடுத்துக் கொள்வோம்..

அவர் கடல்.. கோடிக் கோடியாய் அவருக்கு ஸ்ரீவாரி உண்டியலில் கொட்டவும் தான் செய்கிறார்கள்.. அதைக் கண்டு பக்தர்கள் ஆஹா ஓஹோ என்று ஆரவாரம் செய்யத்தான் செய்கிறார்கள்..

ஆனால் அப்படி கோடிக் கோடியாய் கொண்டு வந்து கொட்டுபவனிடம் பக்தி இருப்பதில்லை அவன் பக்தனாக காட்டிக் கொள்கிறான்..

அவன் கோடிக் கோடியாய் கொட்டியபோது ஆராவாரித்த கூட்டத்திற்கும் உண்மையில் அவன் பக்தி மேல் அக்கறையில்லை..

நம்ம வெங்கடாஜலபதியோ பட்டை நாமத்திற்குப் பின் மறைந்து அமைதியாய் ஆழ்கடலாய்..


ஆக இது ஒரு ஃபிரேம் ஒர்க், வெறுமனே ஒரு ஃபிரேம் ஒர்க் போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு கவிதை ஒன்றுக்கு மேற்பட்டவைகளை குறி வைக்கும் பொழுதோ அல்லது சங்கேதமாய் யாருக்கோ எதையோ சொல்ல நினைக்கும் பொழுதோ மட்டுமே இது போன்ற ஃபிரேம் ஒர்க்குகள் கொடுக்கப் பட்டு விடுகின்றன.. இக்கவிதையின் அடுத்த முனையில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து கவிதையின் அர்த்தம் வேறுபடுகிறது..

ஆக இந்தக் கவிதை ஒரு ஆவி.. ஆன்மா மட்டுமே!.. எந்தக் கூட்டுக்குள் நுழைகிறதோ அதாக ஆகி விடுகிறது..

சும்மா ஜாலிக்கு டைட்டானிக் கப்பலை கருப் பொருளா எடுத்துக்குவோம்

இது மூழ்கவே மூழ்காது ... பொய்யான உத்திரவாதம்

அதற்காக எத்தனை விளம்பரங்கள்.. கதைகள்..

அதை நம்பினார்களோ இல்லையோ உலகின் மிகச் சொகுசான கப்பலில் பயணம் செய்யும் ஆர்வத்துடனும், முடியாவிட்டாலும் பரவாயில்லை எனப் பார்க்கும் ஆர்வத்துடனும் மக்கள் அலைகளின் ஆரவாரம்..

ஆனால் ஆழ்கடல் அமைதியாக இருந்தது... அதில் ஒரு பனிமலை தன் தலையை சற்றே வெளிக்காட்டியபடி நீச்சல் அடித்துக் கொண்டிருந்தது..

அடுத்த சில நாட்களில் நடந்தது அனைவருக்கும் தெரியும்..

பல நாடோடிப் பாடல்களில் இப்படி சங்கேதமாய் மாமனுக்குச் சேதி சொல்லும் மயில்கள் உண்டு

அடுத்த கவிதை எதுப்பா? எடுத்துக் கொடுங்களேன்!!

கண்மணி
20-04-2008, 04:48 PM
உட்கருத்து சரிதான் தாமரை அண்ணா!..

நம்புகிறார்களோ இல்லையோ எனத் தெரியாமலேயே, அடுக்கடுக்காய் பொய்களையும், துதிகளையும் சொல்லி ஏமாற்றுகிறோம் ஏமாற்றி விட்டோம் என திருப்தி அடையும் சில மனிதர்கள்..

ஆனால் இவரின் ஏமாற்றுதல் அனைவருக்குமே தெரிந்துதான் இருக்கிறது.. கைதட்டுபவருக்கும் சரி, மௌனம் சாதிப்பவருக்கும் சரி

ஆனால் கவிதையில் உரிபொருளை தனியே வைக்காததால், கவிதை ஒரு ஆயத்த ஆடையாக ஆகி விட்டது.. அதுவும் அழகுதான்.. பலருக்கு பொருந்துகிறதே!

பிரித்து மேய அடுத்த கவிதையை யாராவது போடட்டும்..

காத்திருப்போம்..

இன்னும் யாராவது சந்தேகம் இருந்தாலும் கேளுங்கள்..

முடிந்த வரை பதில் அளிக்கிறேன்.

சிவா.ஜி
20-04-2008, 04:55 PM
இருக்கிறதென்று
இல்லாதது கருதப்படவேண்டி..

இந்த வரிகளை மட்டும் பார்ப்போம்.....

அதாவது அப்படி ஒரு பாலமே இல்லையென்று சொல்வதை இருக்கிறதென்று சொல்வதற்காக...

வார்த்தை மாலைகளும்
வானவில் கவிதைகளும்

எதிர்கட்சிகள் என்றும், மத இயக்கங்கள் என்றும் பலவித அறிக்கைகளை விடுத்ததை வார்த்தை மாலைகளுமாய், வானவில் கவிதைகளுமாய் எடுத்துக்கொள்வோம்.

கோடிகோடியாய் கொட்டப்பட்டன...
கடலில்!

இவை எதையுமே கண்டுகொள்ளாமல் கோடிக்கோடியாய் கொட்டப்பட்டன கடலில், சேதுக்கடலில்....

கரையோர அலைகளின் ஆர்ப்பரிப்பை
கரகோஷமாய் எண்ணிப்
புளகாங்கிதமாய்!
எதற்கும் வழக்கம்போல கைத்தட்டல்கள் இருக்கத்தானே செய்கின்றன. இருக்கு என்று சொல்வோருக்கும், இல்லை என்று மறுப்போருக்கும் கிடைப்பது கரகோஷமா..இல்லையா என்று தெரியாமலேயே புளகாங்கிதமாக இரண்டு பக்கத்தாரும்.....

ஆழ்கடலோ அமைதியாக!!!

இதற்கு விளக்கம் தேவையில்லை. அப்படித்தேவையானால் ஆழ்கடலாய் பொதுமக்கள்.

கண்மணி
21-04-2008, 04:05 AM
நன்றி சிவாஜி அண்ணா!

அழகான விளக்கம். ;)

ஆனால் இந்த தாமரை அண்ணாதான் முந்திரிக் கொட்டையாய்

அமரன்
21-04-2008, 07:24 AM
ஒரு பக்கம் மரபுக் கவிதை.. இன்னொரு பக்கம் புதுக்கவிதையா.. பலே பலே...
அப்படியே இதையும், பிரித்து மேய்வதிற்கு ஏதும் இருந்தால் செய்யுங்களேன்

கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள் சுருங்கிவிட..
வெக்கையில் வெந்து -கருகிய
காலம் அஸ்தமனாமனபோது
உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!

சுகந்தப்ரீதன்
21-04-2008, 08:39 AM
எல்லோரும் கண்மணி பேச்ச கேட்டு ஆடு மாடாட்டாம் பிரிச்சி மேயுறாங்க..:cool: அதிலும் நம்ப தாமரை அண்ணா கொஞ்சம் அதிகமாவே மேயுறாரு....:fragend005: பாத்துங்கன்னா அப்புறம் வயிறு உப்பிக்கிட்டு இருக்குன்னு ஓமத்தண்ணியை உங்களுக்கு புகட்டிட போறாங்க..:confused:.:icon_rollout:

சரி அமரண்ணா தின்னுட்டு போட்டதை கொஞ்சம் மேயலாமா..??:icon_b:


கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள சுருங்கிவிட..
வெக்கையில் வெந்து -கருகிய
காலம் அஸ்தமனாமனபோது
உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!
முதுமையை அடைந்து தளர்ந்துவிட்ட ஒரு முதியவர்களின் நிலையை குறிப்பிடுவதாக உள்ளது முதலிரு வரிகள்..!!

அவர்கள் பாடுபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய காலங்கள் கடந்து விடும்பொழுது அவர்களை ஒரு உதவாக்கரையாக எண்ணி குடும்பத்தார் அவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும்போது அறிமுகமாகிறது இந்த நன்றிக்கெட்ட இந்த உலகம் அவர்களுக்கு... அதைத்தான் அந்த கடைசி நான்கு வரிகள் சொல்கின்றன..!!

இதே கவிதையை ஒரு நிறுவனத்தின் அல்லது கட்சியின் வளர்ச்சியில் பெரும்பங்கு பகித்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் செல்வாக்கை பயன்படுத்தி ஒருவர் முன்னிலை பெறும்போதும் பொருத்திப் பார்க்கலாம்.. என்று தெரிகிறது.

கண்மணி
21-04-2008, 09:58 AM
ஒரு பக்கம் மரபுக் கவிதை.. இன்னொரு பக்கம் புதுக்கவிதையா.. பலே பலே...
அப்படியே இதையும், பிரித்து மேய்வதிற்கு ஏதும் இருந்தால் செய்யுங்களேன்

கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள் சுருங்கிவிட..
வெக்கையில் வெந்து -கருகிய
காலம் அஸ்தமனாமனபோது
உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!

முதல்ல வார்த்தைகளை சரிபார்ப்போமாண்ணா


அஸ்தமனாமனபோது - அஸ்தமனமானபோது

வெந்து - கருகிய


வேகணும்னா ஈரம் இருக்கணும், கருகணும்னா ஈரம் இருக்கக் கூடாது.. வேகவைத்தல் என்பது தண்ணீரில் இட்டு சூடாக்குதல்.

அதாவது சூட்டில் ஈரம் வத்திப் போச்சுன்னு சொல்றீங்கண்ணா

வெந்து ஈரம் வற்றிக் கருகிக் காலம் காலமாக உதயமானது கறுப்பு உலகம்..
இது எப்ப நடந்தது? கிளைபரப்பிய மரங்களின் நிழல் சுருங்கிய போது..


அதாவது மரம் சுருங்கலை.. நிழல் சுருங்கிட்டது.. அதாவது சுயநலம் அதிகரிச்சுட்டது.. ஏன்னா நிழல் என்பது கொடுக்கும் குணம்.. காப்பாற்றும் குணம் இல்லையா?

சுயநலம் அதிகரிச்சதால இரக்க குணம், ஈரம் காணாம போயிட்டது.. இல்லியாண்ணா? இந்த இரக்ககுணம் போய் கருகினது என்ன?

காலமா?

உதைக்குதே அண்ணா இங்க.. ஒண்ணு உவமை சரியில்லை.. இல்லியின்னா உவமேயம் சரியில்லை. குணவேறுபாடு இருக்கே!!!

மரம் கருகினதுன்னா, அதற்குக் காரணம் நிழல் சுருங்கினதென்றால் மரமே அந்த மரத்துக்கு நிழல் கொடுக்குமா என்ன?

சரி எதோ ஒண்ணு கருகிப் போச்சு! அதாவது பூமியே கருகிருச்சு அதிகமான வெப்பத்தால்னு வச்சுக்கலாம்..

அதாவது மரங்களை வெட்டிட்டாங்க.. அதால மழை குறைந்து பூமி ஈரமிழந்து காய்ந்து வரண்டு வெடித்து கருகுது..

உலகத்தில உயிர் வாழமுடியாம காலம் ஒரு முடிவுக்கு வருது...

இதனால் உருவாவது ஒரு கருப்பு உலகம். கார்பன் நிரம்பிய உலகம், இருண்ட உலகம் உருவாகுது..

....

கண்மணி
21-04-2008, 01:01 PM
எல்லோரும் கண்மணி பேச்ச கேட்டு ஆடு மாடாட்டாம் பிரிச்சி மேயுறாங்க..:cool: அதிலும் நம்ப தாமரை அண்ணா கொஞ்சம் அதிகமாவே மேயுறாரு....:fragend005: பாத்துங்கன்னா அப்புறம் வயிறு உப்பிக்கிட்டு இருக்குன்னு ஓமத்தண்ணியை உங்களுக்கு புகட்டிட போறாங்க..:confused:.:icon_rollout:

சரி அமரண்ணா தின்னுட்டு போட்டதை கொஞ்சம் மேயலாமா..??:icon_b:


முதுமையை அடைந்து தளர்ந்துவிட்ட ஒரு முதியவர்களின் நிலையை குறிப்பிடுவதாக உள்ளது முதலிரு வரிகள்..!!

அவர்கள் பாடுபட்டு உழைத்து குடும்பத்தை காப்பாற்றிய காலங்கள் கடந்து விடும்பொழுது அவர்களை ஒரு உதவாக்கரையாக எண்ணி குடும்பத்தார் அவர்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்பும்போது அறிமுகமாகிறது இந்த நன்றிக்கெட்ட இந்த உலகம் அவர்களுக்கு... அதைத்தான் அந்த கடைசி நான்கு வரிகள் சொல்கின்றன..!!

இதே கவிதையை ஒரு நிறுவனத்தின் அல்லது கட்சியின் வளர்ச்சியில் பெரும்பங்கு பகித்தவர்களை பின்னுக்கு தள்ளிவிட்டு தன் செல்வாக்கை பயன்படுத்தி ஒருவர் முன்னிலை பெறும்போதும் பொருத்திப் பார்க்கலாம்.. என்று தெரிகிறது.


கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள் சுருங்கிவிட..

கூட்டுக் குடும்பங்கள் - கிளைபரப்பிய மரங்கள் என்று எடுத்துகிட்டா
அவற்றின் நிழல்கள் சுருங்குது என்றால், இலைகள் உதிருகிறது.. அதனால் அது தரும் நிழல் குறையுது..


வெக்கையில் வெந்து -கருகிய
காலம் அஸ்தமனாமனபோது

இதனால் என்ன நடக்குது? வெக்கை.. அதாவது இரத்தம் சூடாகுது.. உணர்வுகள் கொதிக்குது... மெல்ல மெல்ல மனிதம் கருகிப்போகுது.
குடும்பம் என்ற நல்ல காலம் முடிவிற்கு வருகிறது.

உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!

இருண்ட மனங்களுடன் கூடிய புதிய உலகம் இங்கே உதயமாகிறது.


-----------------------------------

பிரீதன் சொன்னபடி பார்த்தாலும், குடும்ப மரத்தின் நிழல் சுருங்கிக் கொண்டே வருகிறது.. ஒதுக்கல்களின் காரணமாய், கொடுமைகளின் காரணமாய் மனம் வெந்து, கருகி - அவர்கள் காலம் சென்றது

உதயமானது கருப்பு உலகம்,. அதாவது

தள்ளி வைத்தவர்களுக்கும் வந்தது
தள்ளாமை!!!!


இந்த அர்த்தம் எடுக்க தடையாய் இருக்கும் வார்த்தைகள்

வெக்கையில் வெந்து -கருகிய
காலம் அஸ்தமனமானபோது

அஸ்தமனம் ஆவது காலமா???

அமரன் விளக்குங்களேன்!!

அமரன்
21-04-2008, 03:35 PM
இங்கே இந்தக்கவிதையை பதிந்தது, கற்றுக்கொள்ளும் சுயநலத்திலேயே.. கண்மணிக்கோணம் தந்த பாடம், சுபி சொன்ன சேதி இரண்டும் எனக்கு பயன் மிக்கது. என்பக்கம் கொஞ்சம் விரைவில் தருகிறேன்..

தாமரை
21-04-2008, 03:38 PM
கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள் சுருங்கிவிட..
வெக்கையில் வெந்து -
கருகிய காலம்

அஸ்தமனமானபோது
உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!

உச்சிவெயில் மண்டை காயுது (அப்பொழுது தானே நிழல் குறையும்)

துன்ப வெய்யில் கொளுத்துகிறது, குடும்பத்தின் நிழல் சுருங்கியது.. ஆதரவற்றுப் போனாள். சுட்டது தனிமை.. கருகியது வாழ்க்கை. இருண்ட காலம்.

சூரியாஸ்தமனம் ஆகியதும் அவளது கறுப்பு உலகம் உதயமாகிறது.. நாளுக்கு நாள் அவள் வாழ்வில் இருள் அதிகரித்துக் கொண்டே போகிறது.. இரவு உலகத்தில் இருண்டுகொண்டே போகும் வாழ்வு..

இதைத் தவிர வேறு அர்த்தம் எடுத்தாலும் எதாவது ஒரு வார்த்தை இடிக்கிறது அமரா..
:icon_rollout:

செல்வா
21-04-2008, 03:46 PM
இதில எதாவது பிரிக்க முடியுமா பாருங்க.... அடிப்படையே தவறாகவும் இருக்கலாம். ரொம்ப நாளக்கி முன்னால எழுதுனது ஆனா எழுத நினைத்தக எழுதிருக்கனானு என்னாலே புரிஞ்சுக்க முடியல. நீங்க பிரிச்சி மேய முடியுமானு பாத்து சொல்லுங்க.


ஒன்று ஒன்று ஒன்றென
ஒன்றை மூன்றாக்கினரே
மூவொன்றை ஒன்றிணைத்தால்
மூன்றென்ற ஒன்றாகும்
மூன்றும் ஒன்றான பின்னும்
ஒன்றாத தேனோ?

அமரன்
21-04-2008, 09:06 PM
கிளைபரப்பிய மரங்களின்
நிழல்கள் சுருங்கிவிட..
வெக்கையில் வெந்து -
கருகிய காலம்

அஸ்தமனமானபோது
உதயமாகியது
அதிகரித்த கறுப்பு உலகம்!

உச்சிவெயில் மண்டை காயுது (அப்பொழுது தானே நிழல் குறையும்)

துன்ப வெய்யில் கொளுத்துகிறது, குடும்பத்தின் நிழல் சுருங்கியது.. ஆதரவற்றுப் போனாள். சுட்டது தனிமை.. கருகியது வாழ்க்கை. இருண்ட காலம்.

சூரியாஸ்தமனம் ஆகியதும் அவளது கறுப்பு உலகம் உதயமாகிறது.. நாளுக்கு நாள் அவள் வாழ்வில் இருள் அதிகரித்துக் கொண்டே போகிறது.. இரவு உலகத்தில் இருண்டுகொண்டே போகும் வாழ்வு..

இதைத் தவிர வேறு அர்த்தம் எடுத்தாலும் எதாவது ஒரு வார்த்தை இடிக்கிறது அமரா..
:icon_rollout:

இதையும், நிழலுக குற்றவியலாளர்களையும் சொன்ன முயன்றேன். இலை உதிர்ந்த மரங்கள்/ பசுமை குறைந்த மரங்கள் என்ற அர்த்தம் கொண்டும் எழுத விளைந்தேன். (உடனடிக் கவிதை என்றாலும் இதுபோலத் தவறுகள் என்கவிதைகளில் மலிந்திருப்பதை நானே கண்டிருக்கிறேன்.)

இப்போ பார்க்கும்போது இன்னும் பல அர்த்தங்களை கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது - பொருத்தமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால்.. பொருத்தமான வார்த்தை எதுவோ???

சாம்பவி
22-04-2008, 01:21 AM
இதில எதாவது பிரிக்க முடியுமா பாருங்க.... அடிப்படையே தவறாகவும் இருக்கலாம். ரொம்ப நாளக்கி முன்னால எழுதுனது ஆனா எழுத நினைத்தக எழுதிருக்கனானு என்னாலே புரிஞ்சுக்க முடியல. நீங்க பிரிச்சி மேய முடியுமானு பாத்து சொல்லுங்க.


ஒன்று ஒன்று ஒன்றென
ஒன்றை மூன்றாக்கினரே
மூவொன்றை ஒன்றிணைத்தால்
மூன்றென்ற ஒன்றாகும்
மூன்றும் ஒன்றான பின்னும்
ஒன்றாத தேனோ?

:)
மாமனாரின்
கோட்டுக் காவியம்... ;)
கவிச்சமரில் ... !
இதோ இங்கே...
http://www.tamilmantram.com/vb/showpost.php?p=268091&postcount=277

தாமரை
22-04-2008, 01:55 AM
இதையும், நிழலுக குற்றவியலாளர்களையும் சொன்ன முயன்றேன். இலை உதிர்ந்த மரங்கள்/ பசுமை குறைந்த மரங்கள் என்ற அர்த்தம் கொண்டும் எழுத விளைந்தேன். (உடனடிக் கவிதை என்றாலும் இதுபோலத் தவறுகள் என்கவிதைகளில் மலிந்திருப்பதை நானே கண்டிருக்கிறேன்.)

இப்போ பார்க்கும்போது இன்னும் பல அர்த்தங்களை கொள்ளலாம் என்றும் தோன்றுகிறது - பொருத்தமான வார்த்தைப் பிரயோகம் இருந்தால்.. பொருத்தமான வார்த்தை எதுவோ???

கிளைபரப்பிய மரங்களின்
நிழல் சுருங்கியது..

இப்படிச் சொன்னாலே உடனே நினைவுக்கு வருவது கூட்டுக் குடும்பம் அழிவது தான்.. வேறு எதுவுமே அதற்குப் பொருந்துவதில்லை..

அமரத்தனமாக யோசித்தால் மட்டுமே, காடுகளின் பரப்பளவு சுருங்கி வருகின்றன எனக் கொள்ள முடியும். கண்மணி கூட அமரத்தனமாய் யோசிக்கக் கற்றுக் கொண்டார் என நினைக்கிறேன்.

அஸ்தமிக்கும் போது உதயமாகும் அதிகரித்த கறுப்பு உலகம்...

இதில் அதிகரித்த என்ற வார்த்தை தொண்டையில் முள்ளாய்...

1. இப்பொழுதெல்லாம் கறுப்பு உலகங்கள் அஸ்தமனத்திற்கு காத்திருப்பதில்லை..

2. நிழல் சுருங்கியது.. நிழலான காரியங்கள் விரிந்தது.. நிழல் என்பது இங்கே என்ன? நீதியா? அரசாட்சியா? காவல்துறையா? நல்லெண்ணங்களா? இவை எதுக்குமே ஒத்துவராத ஒன்றல்லவா?

பிறிது மொழிதல் அணியை உபயோகப் படுத்தினால் பல பொருள் தோன்றும் கவிதையைச் சட்டென எழுதி விடலாம். ஆனால் உவமை உவமேயத்தோடு பொருந்த வேண்டும்..

என்னுடைய விளக்கத்தில் கூட பார்த்தால் அதிகரித்த என்பது தொண்டையில் சிக்கிய முள்தான்..

பசுமை குறைந்த மரங்கள்.. மரங்கள் வேர் விட்டு வளர்கின்றன,, இலைகள் உதிரும் மறுபடி துளிர்க்கும்.. நிழல் சுருங்கிப் போவதனால் மரங்கள் கருகுவதில்லை.. மரம் கருகக் காரணம் அதிகப் படியான வெப்பம். அதனாலேயே மரங்கள் பட்டுப் போய்விடுகின்றன. ஆனால்
வெந்து - கருகி என்ற வார்த்தைகள் மரத்துக்குப் பொருந்தாது.. அம்மர நிழலில் வாழ்ந்தவருக்கு மட்டுமே பொருந்தும்..

ஆக, மரங்களின் நிழல்கள் சுருங்கியதால் வெப்பம் அதிகரிக்கும்.. உலகம் வெள்ளக்காடாகும்.. அழியும்.. அதன் பின் தோன்றுவது கறுப்பு உலகமல்ல..

நீல உலகம் அதன் பின் வெள்ளை உலகம்.. ஆம் பனியுகம் வரும்..

இருட்டு உலக சாம்ராஜ்யதிபதிகள் வெளிச்ச உலகத்திலேயும் சாம்ராஜ்யபதிகள் ஆகிறார்கள்.. ஆக இருட்டு வெளிச்சத்தை விழுங்கிக் கொண்டு இருக்கிறது.. இருட்டு உலகம் அதிகரிக்கவில்லை.. ஆக்ரமிக்கிறது..
வெளிச்ச உலகையும். அஸ்தமனத்திற்குப் பின் வரும் அது இப்பொழுது அஸ்தமனத்திற்குக் காத்திருப்பதில்லை..

நிழல்களே இருட்டாகி
நிழலான காரியங்கள்
இரவுகள் நீள்கின்றன
---------------
வெளிச்சத்தில் ஊரெல்லாம் பார்க்க
ஆடை அவிழ்ப்பு
பணம் புகழ்
நடிகை
இருட்டிலும் அதேதான்
பணம் வியாதி
விபச்சாரி
-------------------


இப்படி எழுதும் பொழுது சற்று கோர்வையாய் சிந்தித்தால் போதும்..

முரண்களை களையலாம்..

வாழை மரத்துக்கு தாலி கட்டி
வெட்டினான்
வாழாவெட்டி!

சின்ன ஒற்றை நிகழ்ச்சி

வாழை மரம்
தாலி கட்டி வெட்டப்பட்டது
வாழ வந்த மரம்
பொசுக்கப்பட்டது
போகும் போது கிடைக்கவில்லை
பச்சை மூங்கிலும் மட்டையும்

இது மூன்று வெவ்வேறு நிகழ்ச்சிகள் ஒரே கரு,, கோர்த்தது..

மரத்தை வெட்டினான்
எரித்தான்
கிடைக்கவில்லை
பச்சை மூங்கிலும் மட்டையும்

என்று இதில் உள்ள சுட்டு பொருள்களை எடுத்து விட்டு அதை பலபொருள் படும்படி எழுதி பார்க்கிறோம்..

ஆனால் பதியும் முன் செலுத்த வேண்டிய கவனம், பொருள்கள் லாஜிக்காக பொருந்துகிறதா எனப் பார்க்க வேண்டும்..

தாமரை
22-04-2008, 02:32 AM
இதில எதாவது பிரிக்க முடியுமா பாருங்க.... அடிப்படையே தவறாகவும் இருக்கலாம். ரொம்ப நாளக்கி முன்னால எழுதுனது ஆனா எழுத நினைத்தக எழுதிருக்கனானு என்னாலே புரிஞ்சுக்க முடியல. நீங்க பிரிச்சி மேய முடியுமானு பாத்து சொல்லுங்க.


ஒன்று ஒன்று ஒன்றென
ஒன்றை மூன்றாக்கினரே
மூவொன்றை ஒன்றிணைத்தால்
மூன்றென்ற ஒன்றாகும்
மூன்றும் ஒன்றான பின்னும்
ஒன்றாத தேனோ?

இறைவன்
ஒன்று ஒன்று ஒன்று
என்று தனித்தனியே சொன்னார் மூவர்
மூவொன்றையும் இணைத்து
மூன்றென்ற ஒன்றாக்கினால்
எப்படி ஒன்றும் செல்வா?

மூன்றென்ற ஒன்று எப்போதுமே உடைந்து
மீண்டும் ஒன்றொன்றாய்
அதனால் தான் ஒன்று ஒன்றாது..

பேச்சளவில் ஒன்று
மனதளவில் ஒன்று
செயலளவில் ஒன்று
ஒன்று ஒன்று ஒன்று
ஒன்று இல்லையெனில் பூஜ்யம்
பைனரி வாழ்க்கை


ஒன்று என்று தமிழில் எவ்வளவு அழகாய் சொல்லி இருக்கிறார்கள்..

ஆங்கிலத்தில் கூட மேக் இட் ஒன், என்று சொல்வார்கள்.. ஹிந்தியிலோ ஏக் ஏக்தா என ஒரு எழுத்தையாவது சேர்க்கவேண்டும்.. தமிழிலே ஒன்று என்ற ஒரே வார்த்தையிலேயே ஒற்றுமைக்கு விழையும் உள்ளம் இருக்க வேண்டும் என ஒன்று எனச் சொல்லி இருக்கிறார்கள்

மூன்று ஒன்றுகள் சேர்ந்து மூன்றானால் மூன்றும் கலக்கவில்லை.. இன்னும் தனித்தனியேதான்.. அப்படி இருக்க மூன்று எப்படி ஒன்றாகும்?

ஒன்றிலொன்று ஒன்றினால் ஒன்று நன்று
ஒன்றிலொன்று ஒண்டினால் ஒன்று நன்று இன்னொன்று தீது
ஒன்றிலொன்று கூட்டணி வைத்தால் நன்றா தீதா?

ஒன்றிலொன்று ஒன்றுமின்றி ஒன்றி ஒன்றாய்

செல்வா
22-04-2008, 05:47 PM
மூன்றென்ற ஒன்று எப்போதுமே உடைந்து
மீண்டும் ஒன்றொன்றாய்
அதனால் தான் ஒன்று ஒன்றாது..


மூன்று ஒன்றுகள் சேர்ந்து மூன்றானால் மூன்றும் கலக்கவில்லை.. இன்னும் தனித்தனியேதான்.. அப்படி இருக்க மூன்று எப்படி ஒன்றாகும்?



நன்றி அண்ணா தங்களின் பின்னூட்டத்திற்கு. மிகச் சரியாக நான் நினைத்ததை சொல்லிவிட்டீர்கள்
(அப்புறம் சொல்வேந்தரைப் பற்றி என்ன நினைத்தாய் என அமரன் பின்னாலிருந்து குட்டுவது தெரிகிறது)

நான் மூன்றென்ற ஒன்றாகும் என சொல்ல நினைத்தது. 1+1+1=3
3 என்ற ஒற்றை எண் (single digit).

ஆனால் மனதில் நெருடியது தான் அந்த உதாரணம். ஒன்று என நிறுவ வேண்டும் வேறெதைச் சொல்ல எனத் தோன்றவில்லை... எனவேதான்...
சரி அப்படியே இருக்கட்டும் என விட்டுவிட்டேன்.

நன்றி அண்ணா... இதே கருத்தை தங்கள் பாணியில் மாற்றி எழுதுங்களேன்..... நானும் கற்றுக் கொள்கிறேன்.