PDA

View Full Version : கன்னியாகுமரியில்



mgandhi
19-04-2008, 07:11 PM
கன்னியாகுமரியில்
ஒரே நேரத்தில் சூரிய அஸ்தமனம்; சந்திரன் உதயம்
இன்று பார்க்கலாம்


கன்னியாகுமரி, ஏப்.20-

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியன்று கன்னியாகுமரியில் சூரிய அஸ்தமனமும், சந்திரன் உதயமும் ஒரே நேரத்தில் நடைபெறுவது வழக்கம். இந்த காட்சியை இந்தியாவில் கன்னியாகுமரியில் மட்டுமே நேரில் கண்டுகளிக்க முடியும். இந்த ஆண்டின் சித்ரா பவுர்ணமி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வருகிறது. இன்று கன்னியாகுமரியில் இந்த அபூர்வ காட்சியை பார்க்கலாம்.

மேற்கு திசை கடல் பகுதியில் சூரியன் மறையும் அதே நேரத்தில் கிழக்குத்திசையில் சந்திரன் உதயமாவது கண்கொள்ளா காட்சியாக அமையும். இந்த அபூர்வ காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கன்னியாகுமரி கடற்கரையில் கூடுவார்கள்.

சித்ரா பவுர்ணமியையொட்டி, கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகளும், பழத்தோட்டம் அருகே உள்ள முருகன் குன்றத்தில் நிலாச்சோறு விருந்தும் நடைபெறுகிறது.