PDA

View Full Version : இப்படி ஒரு அலுவலகம் இருந்தால்?sankavi
19-04-2008, 11:29 AM
சமீபத்தில் நான் ரசித்த நகைச்சுவை , உங்கள் அலுவலகம் எப்படி ? குறைந்தது உங்களில் ஒருவராவது இப்படி இருப்பீர்கள் என நம்புகிறேன்!

:lachen001:
http://www.funwall.in/view_video.php?viewkey=fb9384c4cf38708677c4


.

praveen
19-04-2008, 11:42 AM
இப்படி இருந்தால் அந்த அலுவலகம் சீக்கிரம் விளங்கிடும்.

தோழியீர் சங்கவி உங்கள் அலுவல படமா என்ன?. படத்தில் இந்தியர்கள் மட்டுமே தோன்றியிருப்பதால் கேட்கிறேன். அந்த படத்தில் செல்போனை பறிகொடுப்பவர் தான் தாங்கள் என்று அறிகிறேன். :)

உதயா
20-04-2008, 03:29 PM
the webpage cannot be found ன்னு வருதே

விகடன்
20-04-2008, 04:54 PM
அந்த சுட்டி எனக்கு வேலைசெய்யவில்லையே!!!
சற்று சரி பாருங்கள் சங்கவி

அன்புரசிகன்
20-04-2008, 04:58 PM
எதுவும் தோன்றவில்லை. அந்த படத்தை வேறு எங்காவது ஏற்றி நம் மன்றில் பகிரலாமே....

சிவா.ஜி
20-04-2008, 05:00 PM
பார்க்க நகைச்சுவையாய் இருந்தாலும்..இப்படி ஒரு அலுவலக சூழல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

நல்லாருந்ததும்மா சாம்பவி. நன்றி.

விகடன்
20-04-2008, 05:12 PM
பார்க்க நகைச்சுவையாய் இருந்தாலும்..இப்படி ஒரு அலுவலக சூழல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று ஏங்க வைக்கிறது.

நல்லாருந்ததும்மா சாம்பவி. நன்றி.

பார்த்திட்ட படத்தை அப்படியே மன்றத்திலேற்றி அதன் சுட்டியைக் கொடுங்களேன் சிவா.ஜி

Roja
20-04-2008, 05:24 PM
படத்தைக் காணோமே சங்கவி...

சிவா.ஜி
20-04-2008, 05:34 PM
இன்னைக்கு வரலை விராடன். 401 error தான் வருகிறது. நான் நேற்று பார்த்தேன். பின்னூட்டமிட மறந்துவிட்டேன். இன்றைக்கு வரலையே

விகடன்
20-04-2008, 06:13 PM
அப்படியா?
எங்களுக்கெல்லம் 401 ஆவது தவறு என்றுதான் வருகிறது.:lachen001:

-------------------------------------------------
காலந்தாழ்த்திய பராட்டும் கவிழ்துவிடும் என்று சொல்லியிருக்கிறீர்கள்.
செயல்வடிவில் ஒரு பாடம். அருமை...

அனுராகவன்
24-04-2008, 07:02 AM
எப்படிதான் http://www.funwall.in/view_video.php...c4cf38708677c4
காணுவது..
நானும் பல முறை முயற்சி செய்தேன்..
பலனில்லை..

sureshkumaar1611
24-04-2008, 06:41 PM
விளங்குமா? ஆபீஸ் இப்படியிருந்தா?

ஓவியா
24-04-2008, 07:04 PM
எல்லாமே நடிப்பு, என் 7 நிமிடம் வீனகுவதற்க்குள் வந்துட்டேன். :sauer028:

பொண்ணுங்க என்னாமா ஆடுதுங்கோ!!!!
(இந்த வரிக்காகவே எல்லாம் பார்க்கனும்னு சபதம் எடுப்பீங்களே) :D

சுட்டிக்கு நன்றி சங்கவி.

விகடன்
24-04-2008, 07:49 PM
இன்று வேலை செய்ய்துவிட்டதே!

இதெல்லாம் நடிக்கத்தான் சரி.
இது அலுவலகம் என்று சொல்வதைவிட விளையாட்டு அரங்கம் என்று சொல்வதே சாலச்சிறந்தது..
வழமையக வேலை தலைக்குமேலிருந்து அதிலிருந்து சிறு விடுதலக்காகவும் மூளைக்களைப்பிலிருந்து விதலை அளிக்கவும் ஐந்தோ பத்து நிமிடங்கள் வேறு விளையாட்டுக்களிலீடுபடலாம். இங்கு அது மாறி நடக்கிறது..

விளையாட்டில் சலிப்பேற்படும்போது மறுதலுக்காக அல்வலகத்தில் வேலை புரிகின்றனர். அவ்வ்வளவுதான்...

வேலை இன்றி இருந்தவர்களுக்குத்தான் தெரியும் வெட்டியாக இருப்பதன் கஸ்டம். வேலை செய்வதைவிட கடினம் வெலையின்றி இருப்பது,

தமிழ் மகன்
24-04-2008, 09:02 PM
ஹை நல்லா இருக்கே இந்த ஆஃபீஸ் எங்க இருக்கு . எங்க ஆஃபிஸை விட சூப்பரா இருக்கு, எங்க ஆஃபீஸிலதான் வேலை, வெலைன்னு தொல்ல பண்றாங்கப்பா.

அறிஞர்
24-04-2008, 09:19 PM
நன்றாக இருக்கிறது...
இது மாதிரி செயல்பட்டால்.. விரைவில் கம்பெனியை மூடவேண்டியது தான்.

அக்னி
25-04-2008, 01:27 AM
இதுவல்லோ ஆபீஸ்... இதுவல்லோ வாழ்க்கை...
பகிர்தலுக்கு நன்றி சங்கவி அவர்களே...

நல்லாருந்ததும்மா சாம்பவி. நன்றி.
இவுக எங்க வந்தாங்க இங்க... :smilie_abcfra:

அனுராகவன்
25-04-2008, 02:46 AM
இன்றுதான் கண்டேன் நண்பரே!!
இப்படியும் ஒரு ஆபிசா..
இதற்கு பெயர் கேளிக்கைகூடம்போல..
இடையே நல்ல மியூசிக்..
இவ்வளவு எங்கு பிடித்தீர்,...

எண்ணம்
25-04-2008, 04:03 AM
பகிர்ந்தமைக்கு நன்றி. இது போல அலுவலகத்துல ஏதேனும் வேலை காலியாக இருந்தா சொல்லுங்க. என்ன வேலையாக இருந்தாலும் சரி. :grin::grin::grin::grin::grin::grin::grin::lachen001::lachen001::lachen001:

anusuya
25-04-2008, 06:11 AM
இப்படி எல்லாம் வேலை செய்து எப்படி எல்லா IT கம்பெனிகளும் அதிக லாபத்தை ஈட்டுகின்றன...ஆச்சரியமாக இருக்கிறது...இப்படி எல்லாம் வேலை பார்த்து விட்டு வந்து வீட்டில் வந்து ஆபிஸில் என்னமோ வெட்டி முறிச்ச மாதிரி நடந்து கொள்வதை நினைத்தால் கடுப்பாக வருகிறது....(அப்படியே எனக்கும் ஒரு வேலை பாருங்களேன் இது மாதிரி அலுவலகத்தில்....)

MURALINITHISH
25-04-2008, 06:40 AM
நல்ல அலுவலகம்
ஆனாலும் ரொம்ப அதிகம்
வேலையே செய்யாமல் அந்த 3 பென்களும் உடகார்ந்து இருப்பது இப்படியல்லாமா நடக்குது

அமரன்
25-04-2008, 07:02 AM
ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காதுன்னு சொன்னாங்க. இப்போ பார்த்தேன்..
ஓய்வு தருவது புத்துணர்ச்சி.. ஓய்வென்றால் சும்மா இருப்பதல்ல. குறிப்பிட்ட நேரத்துக்கு வேலையை மாற்றுவது. இளசை சுந்தரம் சொன்ன விளக்கம் இது. அவர் நல்ல நகைச்சுவையாளர் என்பதால் இப்படி காட்டி விட்டார்களோ???

baseer
25-04-2008, 04:49 PM
நல்ல தமாஷா இருந்தது.
வாழ்த்துக்கள்.

Mathu
20-03-2009, 07:57 AM
இப்போ புரியுது எதுக்கு இந்த IT கம்பனிகள் கோவிந்தா கம்பனிகள் ஆச்சு என்று

பா.ராஜேஷ்
20-03-2009, 10:06 AM
நன்றாக நடித்திருக்கிறார்கள்

மன்மதன்
20-03-2009, 02:41 PM
பொண்ணுங்க என்னாமா ஆடுதுங்கோ!!!!
:D

.

ஆ அண்ட அன்னாபுரம்....

ஹைதராபாத்-கு ஜம்ப் ஆக வேண்டியதுதான்..:D

நேசம்
21-03-2009, 07:50 AM
வேலை இன்றி இருந்தவர்களுக்குத்தான் தெரியும் வெட்டியாக இருப்பதன் கஸ்டம். வேலை செய்வதைவிட கடினம் வெலையின்றி இருப்பது,[/COLOR]


ரொம்ப* அனுபவ**மோ விராட*ன்.உண்மையிலே ரொம*ப* க*ஷ்ட*ம்தான்

ரங்கராஜன்
21-03-2009, 08:46 AM
ஹா இந்த அலுவலகத்தை பார்த்தால் நாங்கள் எங்கள் கல்லூரியில் முதல் ஆண்டு படிக்கும் பொழுது நடந்தது போல இருக்கு, நாங்கள் தான் முதல் செட் என்பதால் கல்லூரி யில் அப்ப தான் மொட்டை மாடி எல்லாம் கட்டிக் கொண்டு இருந்தார்கள். ஆசிரியர்களும் கிடையாது, காலையில் வந்தவுடன் அதற்கு முன் நாள் இரவு பார்த்த படத்தை பற்றி பேசுவோம், பெண்கள் வழக்கம் போல கோலங்கள், அலைகள் போன்ற நாடகங்களை பற்றி பேசுவார்கள். அப்புறம் ஒரே விளையாட்டு தான், எங்கள் கல்லூரியை சுற்றி மாங்காய் தோப்பு, ஒரு காவலாளி இருப்பான், தனியாக போய் மாங்காயை பிரித்தால் பிடித்து விடுவான். அதனால் இருபது பேர் வேறு வேறு திசையில் முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு போய் பிரிப்போம், அவன் யாரைப் பிடிப்பதுனு குழம்பி, எல்லார் மீதும் கல் வீசுவான். நாங்கள் பதிலுக்கு மாங்காயை தின்று அந்த கொட்டையை வீசுவோம். கொஞ்ச மாங்காய்களை எங்கள் வகுப்பு பெண்களுக்கு குடுப்போம், அவள்களும் என்னமோ அமிர்தமே கொடுத்தது போல நன்றியுடன் பார்ப்பார்கள். தங்களுடைய பையில் இருந்து மிளகாய் பொடி, உப்பு எடுத்து வைத்து ரூசியாக உண்ணுவோம். சில பசங்க கல்லூரியில் இருக்கும், ஃபேன், தொலைப்பேசி, இரும்பு கம்பிகள் என்று திருடி மாலை சரக்கு அடிப்பார்கள், இல்ல கிளாசுக்கே பிரியாணி வாங்கி வந்து தருவார்கள்.

காலம் சென்றது ஆசிரியர்கள் வந்தார்கள், கடுப்பாக இருந்தது. வகுப்புக்கு பக்கத்தில் இருக்கும் மரத்தில் தேன் கூடு கட்டி இருக்கும், அதை கலைத்து விட்டு வகுப்பை விட்டு எல்லோரும் ஓடிவிடுவோம் கத்திக் கொண்டே, முதலில் ஓடுவது எங்களுடைய இன்ஞினரிங் மெக்கானிங்ஸ் சாராக தான் இருக்கும்..........

என்னத்தை சொல்ல, அது கல்லூரியே அல்ல, கல் மட்டும் தான் இருக்கும் லூரி இருக்காது

மன்மதன்
21-03-2009, 09:58 AM
சில பசங்க கல்லூரியில் இருக்கும், ஃபேன், தொலைப்பேசி, இரும்பு கம்பிகள் என்று திருடி மாலை சரக்கு அடிப்பார்கள், இல்ல கிளாசுக்கே பிரியாணி வாங்கி வந்து தருவார்கள்.படு இண்டரஸ்டிங்கா இருக்கே... அதென்ன சில பசங்க..
எல்லாம் முன்னெச்சரிக்கைதானோ??:icon_rollout:

படிக்கும் போது புள்ளங்களுக்கு மாங்கா கொடுத்த
மவராசன் நீங்கதானா??? :rolleyes::D

ரங்கராஜன்
21-03-2009, 11:12 AM
படு இண்டரஸ்டிங்கா இருக்கே... அதென்ன சில பசங்க..
எல்லாம் முன்னெச்சரிக்கைதானோ??:icon_rollout:

படிக்கும் போது புள்ளங்களுக்கு மாங்கா கொடுத்த
மவராசன் நீங்கதானா??? :rolleyes::D

மன்மதன் அண்ணா, எதுவாக இருந்தாலும் நம்ம இரண்டு பேரும் பேசி தீர்த்துக் கொள்ளலாம், ஹீ ஹீ ஹீ:lachen001::lachen001::lachen001::lachen001:

நூர்
21-03-2009, 03:05 PM
பகிர்வுக்கு நன்றி.அந்த சுட்டி நல்லதான் வேலை செய்கிறது!.

SathyaThirunavukkarasu
21-03-2009, 03:51 PM
பகிர்தலுக்கு மிக்க நன்றி நல்ல அலுவலகம்

இன்பா
28-03-2009, 04:53 AM
நன்றாக இருக்கிறது...
இது மாதிரி செயல்பட்டால்.. விரைவில் கம்பெனியை மூடவேண்டியது தான்.

அதனாலோ என்னவோ இன்று நிலைமை இப்படி இருக்கிறது :)

sreeram
21-04-2009, 08:46 PM
சங்கவி, சூப்பர் அலுவலுகம்.... அதிலும் என்னை மீன் பிடிப்பவனாய் சித்தரித்ததைக்கண்டு விழுந்து விழுந்து சிரித்தேன்....:):):)

lolluvathiyar
22-04-2009, 09:45 AM
ஒருவருடத்துக்கு முன்பு போட்ட திரி இது ஆனால் இன்றுதான் பார்கிறேன். மிகவும் ரசிச்சு பாத்தேன் இந்த மாதிரி ஆபீசில் வேலை கிடைச்சா ஆகா லைப் நல்லா இருக்கும்

மதி
22-04-2009, 10:31 AM
எங்க ஆபிஸ் மாதிரியே இருக்கு....:D:D:D:D
யாரும் கண்ணு போட்டுடாதீங்க.... ஹிஹி

நேசம்
22-04-2009, 11:01 AM
எங்க ஆபிஸ் மாதிரியே இருக்கு....:D:D:D:D
யாரும் கண்ணு போட்டுடாதீங்க.... ஹிஹி
அப்ப படு பிசியுன்னு சொல்லுங்க :redface:

மதி
22-04-2009, 11:07 AM
அப்ப படு பிசியுன்னு சொல்லுங்க :redface:
ஹைய்யோ ஹைய்யோ....
நல்லா கேக்கறாங்கய்யா டீடெயிலு...:icon_ush::icon_ush::icon_ush:

Tamilmagal
22-04-2009, 11:10 AM
ஆபிஸ் போறது குமுதம் போன்ற சஞ்சிகைகள் படிக்க என்று நினைதேன், ஆனால் ஆபிஸ்ல இவ்வளவுபன்றாங்களா???
பலே, நல்ல நகைச்சுவை.