PDA

View Full Version : எழுதுகின்றேன் மடலுனக்கு இவ்வருடத்தில்...



rshan4
18-04-2008, 07:15 PM
எழுதுகின்றேன் மடலுனக்கு இவ்வருடத்தில்...
(உண்மைக் காதல் காவியம்)

புது வருடத்தில் மலர்கின்றது
என் வாழ்வுக்கான வழிகாட்டி.
உன் புரிதலும் தருதலும்
புத்தாண்டின் போதுதான் புரிந்தது.

விடையினை யான் பெறவில்லை
வினாவினைத்தான் கேட்டு நிற்கின்றேன்.

நித்தம் உன் நினைவை
நெஞ்சில் சுமப்பதனால்
சற்றேனும் மறக்க முடியாத
உன் மலர் முகத்தை
அவ்வப்போது புகைப்படம்
கொண்டு பார்த்துக் கொள்கின்றேன்.

புன்னகையை மட்டுமே
தருகின்ற உன் புகைப்படம்
புதிதாக எந்தப் பதிலையும்
தரவில்லை.

மாறாக மனதுக்குள்
வேதனை மட்டுமே.

இத்தனையும்
போன ஆண்டிலே பெற்ற
பொதுவான வேதனைகள்.

ஆண்டும் மலர்ந்தது
அம்மன் தரிசனம்
பெறச் சென்றது
ஜங்கரன் கோவிலில்த்தான்

ஆனாலும் பதிலை நீ
கூறவில்லை.

புன்னகையில் செய்த
புதிய வரவேற்பும்
பின்னர்
கையைக் கட்டி நின்று
என்னைக் கவனித்த
விதமுமே போதுமடி..

பதுலுக்காய் உன் கண்கள்
எனைத் தேடிய விதமும்
பார்த்தவுடனேயே
புரிந்து கொண்டேன்
உன் பதிலின் முடிவை.

இருந்தாலும்......
சிறு தயக்கம்
இரவினில் தொலைபேசியில்
சொன்ன போதுதான்
இன்னொரு முறை
பிறந்ததாய் உணர்ந்தேன்.

நீ வந்தது
என் நெஞ்சினிலே
நிம்மதியைத் தந்ததுவே.

பொதுவாகச் சொன்னால்…..

பிள்ளையார் கோவிலில்
புத்தாண்டு தினத்தினில்
காத்திருந்து பெற்றது
காதலுக்கான முடிவு.


- முகவன் -
:icon_b: