PDA

View Full Version : காதல் என்று பெயர் ...



rshan4
18-04-2008, 07:12 PM
காதல் என்று பெயர் ...

காதல் என்னும் மோகம்தனை
கண்கள் அங்கு சித்தரிக்கும்.
காதல் என்னும் வாழ்க்கைதனை
காலம் கடந்து சித்தரிக்கும்.

காதலுக்கான விடை தெரிய
காலம் தள்ளி பாருங்களேன்.
காலம் கடந்த காதலர்கள் (வாழ்க்கை)
கண்டு கொண்டு பாருங்களேன்.

காதலுக்கும் கா.மு, கா.பி என
கணக்கு ஒன்று உள்ளதல்லா!
காதலுக்கு வழிகாட்டி
கற்றுத்தந்த பாடமுண்டு.

எல்லாக் காதலும்
இலக்கணமாய் இருந்ததில்லை.

காதலைக் காத்தல்
காகம் அடைகாப்பது போல்
குயிலுக்கு இடமில்லை
இருந்தும் குயிலங்கே
குடிபுகத்தான் பார்க்கிறது.

இப்படித்தான் எல்லாமே
இயற்கையாய் நடக்கின்றது.

உண்மை சொல்லிக் காதலித்தும்
ஊடலங்கு இருக்கிறது
உண்மை மறுத்துக் காதலித்தும்
ஊடலங்கே இருக்கிறது.

காதல் தவிர்ந்த திருமணங்கள்
கலங்கம் அற்று இருக்கிறதா?
காதல் தாண்டி வந்துவிட்டால்
கடைசியில் எல்லாம் ஒன்றுதான்.

வாழ்க்கை என்ற நியதிக்குள்
வாலிபத்தை அடைவு வைத்து
காதல் என்று பெயர் கொடுத்து
காத்திருந்து தவித்திருந்து
திருமண பந்தத்தில்
தினமங்கே போராடி
வாழ்க்கை என்ற வட்டத்துள்
வாழ்ந்துதான் ஆகவேண்டும்.

:icon_b:

விகடன்
20-04-2008, 05:19 PM
இதுவும் அதே தளத்தில் திருடப்பட்டிருக்கிறது முகவன்....
எந்த தளமா???
இந்தத்தளத்தில்த்தான்... (http://mukavan.blogspot.com/2008/01/blog-post_6723.html)

விகடன்
20-04-2008, 05:21 PM
உண்மையிலேயே நீங்கள்தான் முகவன் என்றல் மன்றப்பெயரையும் முகவன் என்றே வைத்திருக்கலாமே???

rshan4
21-04-2008, 04:55 PM
வணக்கம் அன்பரே!

எந்தக்கவிதையும் திருடப்பட்டதாக தெரியவில்லை. நான் முகவன் என்னும் பெயரில் கவிதைகளை எழுதிவருகின்றேன். நீங்கள் குறிப்பிட்ட 'இணைப்பு' என்னுடையது தான். நான் தான் என்னுடைய கவிதைகளை அத்தளத்தில் பதிவு செய்துள்ளேன். இதில் எதுவும் குளப்புவதாகத் தெரியவில்லை.
அதிலும் முகவன் என்ற பொயரில்தான் எழுதுகின்றேன்..இதுலும் முகவன் என்ற பெயரில்தான் எழுதுகின்றேன்.

நன்றி கருத்திற்கு...

-முகவன்-
:icon_b:

விகடன்
26-04-2008, 08:27 PM
நான் சொன்னது கையொப்பத்தை இல்லை.