PDA

View Full Version : இப்படியும் ஒரு காதல்….



rshan4
18-04-2008, 07:08 PM
இப்படியும் ஒரு காதல்….

காதலைச் சொன்னபோது
சம்மதம் செல்லவில்லை.
காலம் கேட்டபோது
காரணம் சொல்லவில்லை
காத்திருந்த போதிலும்
காதலைச் சொல்லவில்லை
தொலைபேசியில் பேசியபோதும்
தொல்லை எனச் சொல்லவில்லை.
காத்திருந்து காத்திருந்து
கடைசியாகக் கேட்டபோது
சம்மதம் சொல்லவில்லை.

மௌனமாகப் பிரிந்தபோது
மனதுக்குள் சொன்னதென்ன?
நீ வேண்டும் என நான் நினைத்தேன்
நான் வேண்டும் என்று நீ நினைத்தாயா?

என்னாலே முடியவில்லை
என்ன நீ நினைக்கின்றாய் என
நண்பர்கள் சேர்ந்து
நாம் முடிவு எடுப்போம் என்றாய்
நண்பர்களின் பேச்சில்
நடுநிலமை இல்லை என்றேன்.

சந்திப்போம் பின்
சிந்திப்போம் என்றாயே
கடைசியில் நடத்தது என்ன?
காத்திருந்தேன் கடைசிவரை
நீ சொல்லும் பதிலுக்காய்…..

கனவாகிப் போனதடி
காரணம் மட்டும்
சொல்லவில்லை.

தவிக்கின்றேன்
தனியாக நான் மட்டும்
தினம் உன்னை மட்டும்
நினைக்காத நாளில்லை.

நம்பியிருந்தேன் - ஆனால்
நீ நண்பியாக் கூட இல்லையம்மா!

ஆனாலும் ஓர் வார்த்தை
அழகாகச் சொன்னாயடி…
கணவனுக்காய் வாழ்வேன்
கன்னியம் தவறினும் - அவன்
என் கணவன் என்றாய்.

காதலிப்பவன் யான் உன்னை
கணவன் ஆக்கிக்கொள் என்றேன்.
சாதாரணமாகச் சொல்லியிருந்தால்
சரியென இருந்திருப்போன்.
காரணம் தப்பம்மா – உன்
காரணம் தப்பம்மா…

கடைசி வரை கூட
நீ என்னைப் புரியவில்லையடி
கண்ணீர்தான் வடிக்கின்றேன்
என் கனவுக் காதலுக்காய்.

By: முகவன்
:icon_b: