PDA

View Full Version : நட்பு



rshan4
18-04-2008, 07:05 PM
நட்பு

நாம் மட்டும் புரிந்து கொள்ள
நம் நட்பு புனிதமடி
தவறுகள் இருப்பினும்
தனியான பெருமையுண்டு.

உணர்ச்சியின் எல்லைக்கும்
உணர்வுகளின் எல்லைக்கும்
எமை அணைத்து வைக்க
எம்மாலே முடியுமடி!

புரிதல்கள் மட்டுமல்ல
பிரிதல்கள் கூடவே
இயல்பாக புரியுமிங்கே
இலக்கணம் தேவையில்லை.

கனமான எம் பாசம்
ரணமாகிப் போகாமல்
இயல்பாக வெளிப்படுத்த
எம்மாலே முடியுமிங்கே.

நட்பு என்ற உறவு
நம்மளவில் இருந்தாலும்
ஒரு படி உயர்த்தியாக
உயிரையும் கொடுப்போம்.

எம் நட்பின் புனிதம்
இருந்தாலும் வாழும்
இறந்தாலும் வாழும்
உயிர் உள்ளவரை தொடரும்

- முகவன் -
:icon_b:

விகடன்
20-04-2008, 05:17 PM
முகவன்...
உங்கள் ஆக்கம் இங்கே (http://mukavan.blogspot.com/2007/12/blog-post_6663.html)திருடப்பட்டிருக்கிறது...
ஆனால் 10 ஐப்பசி மாதம் 2007 ஆம் ஆண்டே திருடப்பட்டதுதான் விந்தை

விகடன்
20-04-2008, 05:24 PM
உங்கள் ஆக்கங்கள் குறிப்பிடப்பட்ட ஒரு தளத்திலிருப்பதன் பிரதியாகவே காணப்படுகிறது. அதுவும் உங்களுடையதா?? இலையா என்ற வாதத்திற்கு வரவில்லை. இரண்டு இடங்களில் ஒரே அக்கம் இருப்பதுதான் வில்லங்கமே...
இதற்கு இரு வழிகள் இருக்கின்றன...
1. ஒரே பத்வுகளை இரண்டிடத்திலும் பிரசுரிக்காமல் சிலவற்றை இங்கும் மீதியனைத்தியும் அங்கும் பிரசுரித்துகொள்ளுங்கள்.

2. ஒருங்கிணைப்பாளர் விஷேட அனுமதியுடன் திரிகளை ஆரம்பிப்பது!!!