PDA

View Full Version : விண்ணின் பரிசு



rshan4
18-04-2008, 06:55 PM
விண்ணின் பரிசு

விண்ணின் பரிசு
மண்ணின் மோகவிரிப்பு
கண்ணின் கவர்ச்சி அள்ளும்
மென்மை கொண்ட பரவல்.

வேண்டாம் என கெஞ்சும்
தன்மை கொண்ட குளிர்மை.
காற்றின் வேகம் கனம்
காதுகள் முதல் பறிபோகும்.
பின்னர்தான் கை, கால்.

சின்னாதாய் தூவினாலும்
சிலருக்கு பிடிக்குமுனை
காதல் கவர்ச்சி
கண்களுக்கு விருந்து.

சிறுவருக்கு
சுற்றிலா பயணிகளுக்கு
மற்றும் மானிடர்சிலருக்கு
உன் கொண்டாட்டம்.

பள்ளியில்லை
படமெடுக்க
பார்த்துமகிழவென
கண்டுகொண்டு களியாட
மென்மைகொண்ட பரவல்
மேனி உனது.

சினுங்கல் பெண்ணின் பேச்சு
சிலிர்த்துக் கொள்ளும் மேனி.
உந்தன் தன்மை கண்டு
உறைந்து கொள்ளும் மேனி

சுண்டியிழுக்கும் கவர்ச்சி
கண்டுகொள்ளா மானிடர்
சிலர் - உன்மீது வெறுப்பு.

இயற்கையாய் சிலகாலம்
இறைத்துவிடும் உன்னை
"பனி" என்கிறார்கள்.

-முகவன்-
:icon_b: