PDA

View Full Version : சித்திரமோ அவள் அழகு?



rshan4
18-04-2008, 04:55 PM
சித்திரமோ அவள் அழகு?

பொண் வர்ணச் சித்திரமோ
பூவிதளின் உதட்ட அழகோ
மாதுளையின் முத்தினில்
மங்கையவள் பல் அழகோ

கட்டிக் கரும்பு எடுத்து
கண்ணியமாய் சீவி விட்ட
பெண்ணவளின் கை அழகோ

சீராண நெத்தியிலே
சில்லென்று வண்டொன்று
வந்தமர்ந்த பொட்டழகோ

வண்டெல்லாம் மொய்த்து
மலர்க்கரங்கள் தாதூதி
மலர் கொண்ட மங்கையவள்
மகரந்தக் கூந்தல் அழகோ

கன்னத்தின் ஓரத்தில்
ஒதுக்குகின்ற கருமுடிக்கு
என் எண்ணத்தையே
ஒதுக்கிவிட்ட உனதழகோ

புன்சிரிப்பும் புதுமொழியும்
பூத்துக்குளிங்கிடும்
பொண் முகம் தானழகோ

ஐங்கோண வடிவினிலே
அசைந்தாடும் காதோரம்
சின்னச் சிமிக்கியின் சீரழகோ.

இடுப்பு மடிப்பும்
எடுப்பு நடையும் கண்டு
அடுப்பு நெருப்பின்
அணல் கொண்ட
அங்கங்கள் தானழகோ

செவ்விளனி பார்கையிலே
சீர் கொண்ட உடலமைப்பில்
வெம்பி நிற்கும் தனமழகோ.

வில்லெடுத்து வளைத்த
விண்மீன்கள் கொண்ட
புருவ வளைவழகோ.

ஈட்டி முனைப் பார்வையினை
எடுத்தெறிந்து பார்த்துவிட்டால்
தடுத்திடத்தான் கேடயம்
தான் எங்கே தேடுவது.

பட்டுப்புடவை உடுத்தி
படியாத சில அங்கமதின்
கட்டுடல் கொண்ட
கலையாத மெய்யழகோ.

இத்தனை அழகையும்
இயற்கையின் வளமென்பதா?
இறைவனின் படைப்பென்பதா?
கவிஞனின் கலையென்பதா?
காதலியின் தோற்றமென்பதா?

- முகவன் -

சுகந்தப்ரீதன்
23-04-2008, 09:03 AM
இத்தனை அழகையும்
இயற்கையின் வளமென்பதா?
இறைவனின் படைப்பென்பதா?
கவிஞனின் கலையென்பதா?
காதலியின் தோற்றமென்பதா?
:icon_b:
எப்போதும் இருப்பதில்லை என்பதால் இயற்கையின் வளமென்றோ இறைவனின் படைப்பென்றோ கூறலாகாது..!!

கவிஞனின் கலையோ அல்லது காதலியின் தோற்றமமென்பதோதான் சரியாக இருக்கும் நண்பரே..!!

முகவன் உங்களின் ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு ரகம்..பாராட்டுக்கள்..!!

rshan4
23-04-2008, 03:49 PM
உங்களுடைய கருத்துக்களுக்கு நன்றி.

shanthija
06-05-2008, 01:12 AM
நன்பரே உங்கல் அனைத்து கவிதயும் நான் படித்துகொண்டு வாரேன் மிகவும் அருமயாக உள்ளது என்ரும் உங்கல் கவிதைக்கு நான் அடிமை பாரட்டுக்கல் நன்பரே மீன்டும் தொடர்ந்தெலுதுங்கல் ...

அன்புடன்
லதுஜா

அனுராகவன்
06-05-2008, 01:22 AM
நன்றி நண்பரே!!
உங்கள் படைப்புக்கள் எல்லாமே அருமை..
இன்னும் எழுதுங்கள்..

rshan4
16-05-2008, 07:19 PM
நன்றி.