PDA

View Full Version : மழைத்துளிகளே போதும்!!ஷீ-நிசி
18-04-2008, 03:22 PM
http://i128.photobucket.com/albums/p163/shenisi/Photo%20Poems/MazhaithuligalePothumNew.jpg
"மழை"
அது ஒரு வளையாத
ஒற்றை நிற வானவில்!

தவழ்ந்திடும் மேகங்கள் உருகி,
பூமியில் கலந்திடும் வைபவம்!

நாமதில் நனைவது பரவசம்!!
நம்மில் அது வழிவது ஒருசுகம்!!

என்றெல்லாம் வாசித்து,
கைதட்டல் பெற்று
கூட்டம் முடிந்ததும்,
வெளியில் வந்தான்!!!

வேகமாய் தூறலிட
ஆரம்பித்தது வானம்....

'ச்சே' .....
போற நேரத்துலதான்
பெய்யனுமா?!

மழையைப் பற்றியறிய,
கவிதைத்துளிகள் எதற்கு?!
மழைத்துளிகளே போதும்!!!

பூமகள்
18-04-2008, 04:53 PM
கவிதையில் புகழ்ந்து
களத்தின் கைதட்டை
மயங்கிப் பார்த்த
மழை மின்னலோடு
வெட்டிச் சாய்த்தது..

பொய் புகழ்
போகும் பாதையை
தடையாக்கி... ஆனால்
கவிஞரின் சற்று முன்
கவிந்திருந்த மரத்தின்
மேல்..!!

மழையின் கருணை
துளிகளாக கவிஞர்
கண்களில்..!!

பூமியின் சீற்றங்களுக்கும் இத்தகைய நியாயமான கோபங்கள் தான் காரணமோ??!!

மரம் மட்டும் வளர்த்தால் போதாது.. மரகத மனங்களையும் கொண்டால் தான் இனி இயற்கைத் தாயின் அன்பினை புனலருவியாக பெற முடியுமென்று புரிகிறது..!!

நல்ல கவிதை ஷீ..!!
வித்தியாசமாக கொண்டு சென்றுள்ளீர்கள்..!! எங்கே படம்??? அந்த டச் உங்களின் ஸ்பெசல் ஆச்சே..!!

வாழ்த்துகள்..!!

ஷீ-நிசி
19-04-2008, 01:48 AM
நன்றி பூமகள்....

கவிதை எழுதியவுடனே இங்கே பகிர்ந்துக்கொண்டேன். படம் போட தாமதமாகும் என்பதால்....

ஆனால் பொறுமையாகவே கவிதையை பதித்திருக்கலாம்...
நன்றி பூ!

ஆதவா
27-04-2008, 07:50 AM
அருமை ஷீ!

மழை பற்றிய வர்ணிப்போ என்ற யோசனையில் கவிதை படித்தால் நிழலுக்கும் நிஜத்துக்குமான யதார்த்த இடைவெளியைப் படம் பிடித்துப் போட்டிருக்கிறீர்கள்..

வீழா கற்பனை அடங்கியிருக்கும் உங்கள் எழுதுகோல் முனைகள் எதை எழுதினாலும் புதுமையாகவே எழுத முனைகிறது. ஒரு கவிஞனுக்குள் கவிஞன் பேசும் கவிதை, அழகாகவே இருக்கிறது.

ஒற்றை மழைத்துளியை மிக கவனமாக கற்பனை கலந்து கையாண்ட விதம் அருமை. ஒற்றை நிறம் எனச் சொன்னாலும் நீருக்கு நிறமில்லை. கவிதையாக எடுத்துக் கொள்ளப்படுமேயானால் முரண்பாட்டை நீக்கியே படிக்கவேண்டும். மேலும் "வளையாத" என்று சொல்லும்போது மாற்று உருவம் எடுக்க முடியாத என்ற அர்த்தம் இல்லாமையால் அவ்வார்த்தைக்கான பலம் மேலும் அதிகமாகிறது. கண நேரத்தில் எழுதியிருந்தாலோ அல்லது யோசித்து எழுதியிருந்தாலோ சரி, மிக அழகாக கையாளப்பட்ட வரிகள் அவை.

பூமியில் கலந்திடும் வைபவம், மேலே "உருகி" என்பதை காதலாக எடுத்துக் கொள்ளலாம். காதலியான மேகம் "உருகி" பூமிக் காதலன் மேல் "கலந்திடும்" உற்சவம். மேலும் "தவழ்ந்திடும் மேகங்கள்" ஒரு Innocent காதலியைச் சுட்டுகிறது..

நாம் அதில் நனைவது பரவசம், இந்த வரிகள் கவிதைக்கு மிக முக்கியத்துவம் தருகின்றன. ஒருவனின் நிழல் ரூபத்தை அடக்கிய வரிகள், சாதாரண சம்பவம் என்றாலும், எண்ண வெளிப்பாட்டின் வேறுபாட்டை உறுதிப்படுத்தும் சம்பவமாக இருக்கிறது. அக்கவிஞன் தன்னை யுகத்தில் அடையாளப்படுத்திக் கொள்ளத்தான் "மழை" எண்ணத்தை வெளியிடுகிறானே தவிர, அடையாளத்திற்குரிய அர்த்தமுள்ள வாழ்வை உலகுக்குக் காட்ட அல்ல.

கவிதை இரண்டாகப் பிரிகிறது. முதல் பாதி கவிஞனின் வாசிப்பாகவும், மறுபாதி, அந்த வாசிப்பின் எதிர்மறை விளைவுகளாகவும் இருக்கிறது.
அவன் சுயரூபத்தைக் காட்டிக் கொடுக்கும் மழைத்துளிகளே போதும்தான். கவிதைத் துளிகள் தேவையில்லை.

வெளிப்படும் எண்ணம் யாவுமே நாமல்ல. ஒரு கெட்டவனுக்கும் நல்ல எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு. எண்ணம், ஒரு மனிதனின் நடத்தையைக் காட்டாது என்பதற்கும் இதுவே சாட்சி. இக்கவிதையில் இறுதி க்ளைமாக்ஸ் பத்தி மாற்றியிருக்கவேண்டும் என்பது என் கருத்து. பெரும்பாலான வரிகள் அதாவது க்ளைமாக்ஸ் தவிர மீதியனைத்தும் அவனது மாறுபட்ட நடத்தையைக் காட்டுவதாக இருக்கும் பொழுது மழையைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு அவசியமில்லை. "அவனைப் பற்றி அறிய" என்பன போன்ற சில மாற்றங்கள் வரிகளில் இருக்கலாம்.

குறைந்த வரிகள்... நிறைந்த கருத்துகள்......

பதினாறு பேர் பார்த்தும் ஒருவரின் மட்டுமே பின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கிறது கவிதை.... மன்றம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது????
-------------
ஆதவன்......

அமரன்
27-04-2008, 09:07 AM
பதினாறு பேர் பார்த்தும் ஒருவரின் மட்டுமே பின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கிறது கவிதை.... மன்றம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது????

கோடை விடுமுறையைக் கழிக்க போகுதோ தெரியவில்லை..
கொடைக்கானல் போல உங்கள் பதிவு களிக்க வைக்குது.

கவிதைகளுக்கான விமர்சனப்பார்வைகள் மட்டுமல்ல அரட்டைக்கூட அண்மைக்காலத்தில் குறைவுதான்..

சிலர் விடுப்பில்.., நேரம் கிடைக்காதவர்கள் சுவை பார்ப்பதுடன் சரி.. ருசித்து உண்ண விரும்பினாலும் முடிவதில்லை..

மாறும் ஆதவா.. நம்பிக்கை உள்ளது.. மாற்றத்தை விரும்பும் ஒவ்வொருவரும் மாற்ற முனைந்தால் நிச்சயம் மாறும்..

ஆதவா
27-04-2008, 09:27 AM
கோடையினால் ஓடையிலே நாடையிலே
மேடையிலே வாடையிலே
நான்
கூடையிலே கோடையினால் நீ ஓடையிலே
பீடையம்மா எனக்கும் சேற் றோடையம்மா!!

ஷீ-நிசி
27-04-2008, 10:13 AM
வெளிப்படும் எண்ணம் யாவுமே நாமல்ல. ஒரு கெட்டவனுக்கும் நல்ல எண்ணங்கள் தோன்ற வாய்ப்புண்டு. எண்ணம், ஒரு மனிதனின் நடத்தையைக் காட்டாது என்பதற்கும் இதுவே சாட்சி. இக்கவிதையில் இறுதி க்ளைமாக்ஸ் பத்தி மாற்றியிருக்கவேண்டும் என்பது என் கருத்து. பெரும்பாலான வரிகள் அதாவது க்ளைமாக்ஸ் தவிர மீதியனைத்தும் அவனது மாறுபட்ட நடத்தையைக் காட்டுவதாக இருக்கும் பொழுது மழையைப் பற்றி அறிந்துகொள்ள நமக்கு அவசியமில்லை. "அவனைப் பற்றி அறிய" என்பன போன்ற சில மாற்றங்கள் வரிகளில் இருக்கலாம்.


நன்றி ஆதவா... எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி எழுதுகிறவனின் மனஓட்டத்தை மிக அழகாக கண்டுபிடித்து உரைக்கிறாய் என்று..

அந்த கடைசி வரிகள் இந்தக் கவிதையில் திணிக்கபட்டவை... அந்த கடைசி வரிகள் தான் எனக்கு முதலில் தோன்றியது. ஆனால் கவிதை எழுத முற்பட்டவுடனே கரு மாறியது.

'ச்சே' .....
போற நேரத்துலதான்
பெய்யனுமா?!

இதோடு நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் அந்த வரிகள் சேர்த்தால் இன்னும் கவிதை வலுப்பெறும் என்று எண்ணியே சேர்த்தேன். மிக ஆழமான விமர்சனம்.

என் கவிதை வளர்ச்சியில் உன் பங்கு பிரிக்க இயலாது.


பதினாறு பேர் பார்த்தும் ஒருவரின் மட்டுமே பின்னூட்டம் மட்டுமே பெற்றிருக்கிறது கவிதை.... மன்றம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது????

நாகரா
27-04-2008, 10:47 AM
மழையைப் பற்றிக் கவி பேசி
மழையில் நனைய மனமின்றி
மழையை சபிக்கும் கவிஞன்!

மழையே தன் ஈரத் துளிகளால்
உன் மேல் எழுதும் கவிதையே
போதுமே மழையை அறிய!

மனிதனென்னும் செயற்கைக் கவிஞனின்
உயிர்ப்பிலா வரண்ட வரிகள்
மழையென்னும் இயற்கைக் கவிஞனின்
உயிர்ப்புள்ள ஈர வரிகள்

இத்தனையும் படம் பிடிக்கும்
அற்புதக் கவிதை
வாழ்த்துக்கள் ஷீ-நிசி

ஷீ-நிசி
27-04-2008, 12:17 PM
பிரமாதம் நாகரா...

எத்தனை ஆழமான விமர்சனம்... நன்றி!

மன்மதன்
27-04-2008, 01:03 PM
யதார்த்த கவிதை..

படத்துடன் மினுக்கிறது...


பாராட்டுகள் ஷீ..!!

ஷீ-நிசி
27-04-2008, 02:59 PM
நன்றி மன்மதன்

பென்ஸ்
27-04-2008, 07:29 PM
அனுபவிக்க முடியாதவற்றை இரசிக்கமுடிவதில்லை...
இரசிக்கமுடியாதவற்றை அனுபவித்து கவிதை கொடுக்க முடிவதில்லை....
ஷீ....
இந்த நல்ல கவிஞனுக்கு எப்படி அது சாத்தியமாகிறது..????
கவிதை சொல்ல வருவதௌ எண்ணிபாராட்டுகிறேன்... ஆனால் அதஒ ஒத்து கொள்ளமிடியவில்லை. காதலிக்காதவன் காதல் கவிதை கொடுக்க முடியாது என்று சொல்லவில்லை, ஆனால் அவன் காதலையாவது காதலித்து இருப்பான்....
காதல் இல்லை என்றால் கவிதை இல்லை....
மழையோ, மண்ணாங்கட்டியோ... அதை அடுத்தவனும் அனுபவிக்கு விததில் எழுத இவனும் காதலித்து இருக்கவேண்டும்....
இந்த எண்ணம் இருப்பதாலே நான் பாராட்ட முடியாமல் போகிறேன் ஷீ....
ஆதவா...
உன் ஆதங்கம் புரிகிறது... கவிதையை வாசித்து விட்டு மட்டும் செல்பவர்களுக்கு இன்னொரு கவிதையை தண்டனையாக கொடுத்திடு....

ஷீ-நிசி
28-04-2008, 05:46 AM
நன்றி பென்ஸ்... நலமா?

நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்களின் விமர்சனம் காண்கிறேன்.. தொடர்ந்து விமர்சியுங்கள்.!!

அறிஞர்
02-05-2008, 10:03 PM
மழைக் கவிஞன்
மழையை பார்த்து
ஏற்படும் எண்ணங்கள்
உம் வரிகளில்....

மழைத்துளிகளே அனுபவித்தலே...
கவிதைக்கு இணையானது..

வாழ்த்துக்கள் ஷீ...

பாலகன்
02-05-2008, 10:14 PM
மழை அது இறைவனின்
கருணைக் கண்ணீர்

மழை பற்றிய கவிதைகள் அருமை

அன்புடன்
பில்லா

ஷீ-நிசி
05-05-2008, 06:46 AM
நன்றி பில்லா

ஆதி
05-05-2008, 09:17 AM
குடை மழைக்கு
எதிராய்ப் பிடிக்கும்
கறுப்பு கொடி..

- இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல..

என்று எழுதிய வைரமுத்து, பெய்யெனப் பெய்யும் மழை கவிதை தொகுதியில் மழையில் குடைப் பிடித்து நடப்பது போல் அட்டைப் படம் இருக்கும்.. அந்த படமும் அவரின் "குடை மழைக்கு எதிராய்ப் பிடிக்கும் கறுப்பு கொடி" என்கிற வரிகளையே என்னை அசைப் போட வைத்தன.. இதை குறிப்பிடுவது கவிபேரரசைக் குறைத்து பேசும் குறுமதியுடனல்ல.. கவிதை வேறு யதார்த்தம் வேறு என்பதைச் சுட்டிக் காட்டவே..


மழை ஒரு கலைடாஸ்கோப் ஒரே சமயத்தில் வெவ்வேறாய் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும், கவிபேரரசின் இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல என்கிற தொகுதியில் மழைப் பற்றியக் கவிதையில் இதை அவர் அழகாய் விவரித்திருப்பார்..

தண்ணீருக்கு அதிகமாய் கடினமுறு சென்னைவாசிகளிடம் நான் அதிகமாய் கேட்ட வார்த்தை "சனியன் எங்கையாவது கெளம்பும் போதுதான் பெய்து தொலையும்" என்பதுதான்..

இயந்திர வாழ்க்கையில் நிரந்தர கலைஞன் என்று இருப்பவர்கள் மிக சிலரே, மற்ற சிலருக்குள் இருக்கும் படைப்பாளி எப்போதாவதுதான் விழிக்கிறான், அப்போதுதான் தன்னைச் சுற்றியுள்ளதை ரசிக்கிறான், அவனெல்லாம் நிசி கவிதையின் நாயகன் போலத்தான் இருப்பான், இதில் வியப்பில்லை...


"மழை"
அது ஒரு வளையாத
ஒற்றை நிற வானவில்!


இந்தச் சுட்டியைப் பாருங்கள்..

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=304018&postcount=571

நம் இருவரின் சிந்தனையும் ஒருமைப் பட்டிருக்கிறது..
யாதார்த்த கவிதைக்கு வாழ்த்துக்கள் நிசி..

விகடகவி
06-05-2008, 07:06 AM
உந்தன் கவிக்கு அடியேனின் நன்றி..
கவிஞர்களில் கவிதை என்றும் அழியாதவை..

ஷீ-நிசி
06-05-2008, 03:30 PM
நன்றி ஆதி! நன்றி விகடகவி