PDA

View Full Version : கடற்கரை அனுபவம்



தங்கவேல்
18-04-2008, 12:21 PM
என் அக்கா மகளுக்கு திருமணம். ஊருக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஆதலால் எனது நண்பர் இருவருடன் காரில் பேராவூரணி என்ற ஊருக்குப் பயணம் செய்தோம். அங்கு உள்ள லாட்ஜில் தங்கினால் இரவு முழுவது ஏசி வேலை செய்யாமல் படுத்தி எடுத்து விட்டது. மறு நாள் காலையில் திருமணத்திற்கு சென்று விட்டு, மனோரா என்ற கடற்கரையின் அருகில் இருக்கும் குளோபல் வில்லேஜ் ஓட்டலில் தங்க முடிவெடுத்து சென்றோம்.

எனக்கு அங்கு மீனவ நண்பர்கள் அதிகம். பார்த்தும் சூழ்ந்து கொண்டார்கள். நண்பரில் ஒருவர் நண்டும் மீனும் வறுக்கச் சொல்கிறேன் என்றார். அவரிடம் பணம் கொடுத்து விட்டு ( எவ்வளவு என்று நினைக்கிறீர்கள் ரூபாய் 200 ) ஓட்டலில் தங்கினோம். இரவு ஏழு மணி இருக்கும்.


இந்த மனோராவுக்கும் தஞ்சை பெரிய கோவிலுக்கும் இடையில் சுரங்கப் பாதை இருப்பதாகவும் ஏதோ ஒரு வெற்றியின் பேரால் கட்டப்பட்டது என்றும் சொல்லுவார்கள். இது ஒரு கலங்கரை விளக்கம். கோட்டை போல கட்டி இருப்பார்கள். என்னால் தான் மேலே செல்ல முடியாதே. மேலே இருந்து பார்த்தால் வெகு அருமையாக இருப்பதாக் நண்பர்கள் சொல்லுவார்கள்.

தமிழக அரசு பூங்காவெல்லாம் கட்டி அழகு படுத்தி இருக்கின்றார்கள். தலைக்கு பத்து ரூபாய் கொடுத்தால் கடலுக்குள் 10 நிமிடம் அழைத்துச் சென்று வருவார்கள்.

அமைதியான இடம். அலைகள் அதிகம் இருக்காது. காற்று சிலுசிலுவென அடிக்கும்.

பத்து மீனவ நண்பர்களுக்கு மேல் வந்து அறையில் பேசிக்கொண்டிருந்தனர். சரி கிளம்பலாம் என்று சொல்லி கடற்கரைக்கு வந்தோம்.

அங்கு, இரண்டு பாய் விரிக்கப்பட்டு இருந்தது. பரோட்டாவுடன் மட்டன் குருமா, அத்துடன் நண்டு வறுவல், மீன் வறுவல் ( காரமாக இருக்கும்) பரிமாறப்பட்டு இருந்தது. நடுவே ஓல்டு மங்க் ரம் பாட்டில். இரண்டு கிளாஸ்.

காரை அருகில் நிறுத்தினார் என் நண்பர். இன்னொரு நண்பர் ( சென்னைக்காரர் ). சார் ( என்னை அப்படித்தான் அழைப்பார்) அசத்து அசத்துன்னு அசத்துறாங்க.

எங்களைச் சுற்றி முப்பது மீனவ நண்பர்கள் சூழ்ந்து இருந்தனர். நான் லிக்கர் பயன்படுத்துவதில்லை. ஆனால் சிகரெட்.. பிடிப்பேன்.

என்ன ஒரு அன்பு. அதில் ஒரு மீனவ நண்பர் பக்குவமாய் கலந்து ( அதான் சோடா, சரக்கு ) கொடுக்க, மீனையும் நண்டினையும் ஒரு கை பார்த்தார்கள் என்னுடன் காரில் வந்த நண்பர்கள்.

கடற்கரை காற்றில் சில்லிப்பு அதிகமாக இவர்களுக்கு போதை அதிகமாக பாட்டு கூத்து என்று ஒரே ரகளைதான். அருகில் அமர்ந்து இருந்த மீனவ நண்பர்களை அழைத்து சரக்குச் சாப்பிடச் சொன்னார் நண்பர். அதற்கு நீங்கள் எங்களது விருந்தாளிகள். சந்தோஷமா இருங்க என்று சொல்லி மறுத்து விட்டார்கள்.

எனக்கு ஒரு நிமிடம் மனது நெகிழ்ந்தது. அன்பும் பாசமும் ஏழைகளின் சொத்து அல்லவா ? அன்றைய பொழுதில் அந்த மீனவ நண்பர்களின் அன்பினில் மூவரும் திக்கி திணறி விட்டோம்.

என்னைச் சாப்பிட வைத்து, காரில் அமர வைத்து ஓட்டலில் படுக்க வைத்து விட்டுத்தான் சென்றார்கள்.

முகவரி கொடுத்து ஊருக்கு வாருங்கள் என்று சொன்னேன். அவசியம் வருகிறோம் என்றார்கள். ஆனால் ஒருவரும் வரவில்லை இன்றும். அவர்களின் வாழ்க்கைப்பயணம் போராட்டம் அல்லவா ? அந்தப் போராட்டத்தில் எங்கே என் நினைவு அவர்களுக்கு வரப்போகிறது.

விரைவில் அங்கு செல்ல இருக்கிறேன்.

lolluvathiyar
19-04-2008, 08:57 AM
ஆகா உங்கள் அனுபவம் மிக அருமையாக இருந்தது. கேள்வி பட்டிருகிறேன் ஆனால் இன்னும் மனோரா சென்றதில்லை. எனக்கு வாழ்கையில் ஒரு நாள் அங்கு சென்று கடற்கறையில் சாப்பிட்டு கொன்டாட ஆசை வந்து விட்டது. எழுதிய விதம் அருமை

விகடன்
19-04-2008, 02:21 PM
அருமையான அனுபவம். அவர்கள் ஏழைகளாக இருப்பதே இப்படிப்பட்ட கபடமில்லாத விருந்தோம்பலோ என்றும் எண்ணத்தோன்றும். ஏனெனில் அவர்களில் உபசரிப்பைப் போன்று எந்த வசதி படைத்தவனும் விருந்தோம்பியது கிடையாது (பெரும்பாலும்...)

மது அருந்தியதாக கூறிய இடத்தில் அடைப்புக்குறிக்குள் "மது அருந்துவது உடல் நலத்திற்குக் கேடு" என்று போட்டிருந்தால்.....
எப்படியிருந்திருக்கும் என்றும் சிந்திக்கத் தோன்றியது. ஏனெனில் இந்திய இலங்கை தொலைக்காட்சி அலைவரிசைகள் அந்தளவிற்கு அவரவர் மனதைப் பாதித்திருக்கிறது....


மீண்டும் அவர்களை சந்திக்க வாழ்த்துக்கள்.