PDA

View Full Version : என்னை எரிக்காதே



shibly591
18-04-2008, 09:29 AM
பெண்ணே அடிக்கடி என்னை எரிக்காதே
ஏற்கனவே நான்
சாம்பல்.....

அனுராகவன்
18-04-2008, 09:53 AM
விழுதுகள்

ஆலமரமே!
நீயும் தாடி வளர்க்கிறாயே....
உனக்கும் காதலில்
தோல்வியோ? http://www.funworld.frih.net/tamil/images/smilies/icon_cry.gif http://www.funworld.frih.net/tamil/images/smilies/icon_cry.gif

அனுராகவன்
18-04-2008, 09:55 AM
பெண்ணே அடிக்கடி என்னை எரிக்காதே
ஏற்கனவே நான்
சாம்பல்.....
கவிஞரே!!
அப்படின்ன சாம்பல் விபூதிக்கு உதவுமே!!
அருமை ..

shibly591
18-04-2008, 12:56 PM
அனு நான் காதல் கவிதையை உருக்கமாக எழுதியிருக்கிறேன்.நீங்க நல்ல காமெடி பண்றீங்க..அய்யோ அய்யோ

ஓவியா
18-04-2008, 01:32 PM
அனு நான் காதல் கவிதையை உருக்கமாக எழுதியிருக்கிறேன்.நீங்க நல்ல காமெடி பண்றீங்க..அய்யோ அய்யோ



இந்தமுறை அனுவிடம் வசமாக மாட்டியாச்சா!!! :D:D:D:D




**********************************************************************

இனி உங்களின் கவிதைகளை துவைத்து, பிழிந்து காயப்போடுவதுதான் மன்ற பெண்களின் வேளை. அனு. பூ, கண்மனி, யவனிகா, கவிதா, மலர் மற்றும் அல்லியக்காவை உதவிக்கு அழைக்கிறேன். ஷிப்லி அண்ணாவின் கவிதைகளை கொஞ்சம் கவனிங்களேன். :D:D:D (சும்மா சும்மா)

பூமகள்
18-04-2008, 04:01 PM
பெண்ணே அடிக்கடி என்னை எரிக்காதே
ஏற்கனவே நான்
சாம்பல்.....
பின்னாலே வந்து
முன்விழியால் மதிமயக்கி
கண்ணசைவு காட்டும்
காளையவரை கண்டதும்
சுடுமாம் கற்புடையாள் கண்கள்..!!:icon_ush:

சுட்டும் விழிச் சுடர்
சுடத் தானே செய்யும்??!! :D:D

எரிந்து விழுவதும்
எறிந்து தொலைப்பதும்
கயல்விழி கண்களில்
அகப்படும் ஆண்களின்
சுதிமாறினால் ஏற்படும்
கதியே..!!:icon_ush:

(காதலைத் தவிர்த்து இப்படி ஒரு கருத்து தோன்றியது ஷிப்லி அண்ணா...!!:icon_ush:)

உங்களின் கவிதை அருமை..!!
வாழ்த்துக்களும் பாராட்டுகளும்..!!:)

வேற தோன்றினால் மறுபடி வருகிறேன். :rolleyes::icon_rollout:

அனுராகவன்
18-04-2008, 04:39 PM
தள்ளாட்டம் தாளம் போடுகிறது
முதுமை வயோதிபனுக்கு
எப்போதும்
முதல் மரியாதை செய்கிறதோ?

அக்னி
18-04-2008, 04:56 PM
பின்னாலே வந்து
முன்விழியால் மதிமயக்கி
கண்ணசைவு காட்டும்
காளையவரை கண்டதும்
சுடுமாம் கற்புடையாள் கண்கள்..!!:icon_ush:
பின்னாலே வந்தது,
முன்னாலே தெரிந்ததெப்படி...
காதல் கொண்ட பார்வை,
சுட்டால் கற்புடைக் கண்கள்...
கள்ளம் கொண்ட பார்வை,
தொட்டால் கற்புடைத்த கள்ளமா..?

அக்னி
18-04-2008, 05:25 PM
விழுதுகள்

ஆலமரமே!
நீயும் தாடி வளர்க்கிறாயே....
உனக்கும் காதலில்
தோல்வியோ? http://www.funworld.frih.net/tamil/images/smilies/icon_cry.gif http://www.funworld.frih.net/tamil/images/smilies/icon_cry.gif
தோட்டத்தில் ஆலமரம்...
விழாதவரையில், விழும் விழுதுகள்...


தள்ளாட்டம் தாளம் போடுகிறது
முதுமை வயோதிபனுக்கு
எப்போதும்
முதல் மரியாதை செய்கிறதோ?
உங்களுடைய கவிதை என்றால்,
முழுக்கவியையும் புதிய திரியில் தந்திருக்கலாமே அனு அவர்களே...