PDA

View Full Version : சூன்யத்தின் மறுபெயர்



shibly591
18-04-2008, 03:34 AM
விடையில்லாத
விடுகதை
இது
சில சமயம்
கடல்நீர்
சில சமயம்
கானல் நீர்

இதன் விரல்
நுனியில்தான்
மனிதர்கள்
பொம்மைகள்.....

கனவு,
ஆசை,
காதல்,
பாசம்,
உறவு
பரிவு
என்றெல்லாம்
ஏராளம் ஏராளமமாய்
இதன் பிடியில் முகமூடிகள்

விளையாடு களமாய்,
நாடக மேடையாய்,
களியாட்ட அறையாய்
எப்படியோ
பாவித்தாக வேண்டும் இதை

கருவறையில்
விழித்த பின்
நிஜங்களின் ராஜ்ஜியமாய்...
கல்லறையில்
உறங்குமுன்
போலிகளின் நாட்டியமாய்
இரு முகங்கள் இதற்கு.

ஆயினும்,
சூன்யத்தின் மறுபெயர்தான்
வாழ்க்கை என்பதை
எப்போதுமே உணர்வதில்லை நாம்!
சாகும் பொழுதைத்தவிர......

அனுராகவன்
18-04-2008, 05:43 AM
முதலில் என் நன்றி முத்தான கவியினை நல்கு தந்த என் இனிய கவிஞரே!! உங்கள் கவிதிறன் என்னை பரவச மடைய செய்கிறது..
என்றும் அந்த அறப்பணியே செய்ய இறைவனை வேண்டுகிறேன்..
வாழ்க்கையில் நாம் மிக பெரிய உண்மையே மறந்தே வாழ்கிறோம்..அதை இருக்கும்போதே வாழ்வை தொலைத்து இறக்கும் போது என்ன செய்தேன் என்று கேட்கும் நிலை வெகுதூரத்தில் இல்லை..வாழ்க்கை மிக பெரிய கடல் போன்றது..அதற்கு முடிவும் இல்லை,ஆரம்பமும் இல்லை..எத்தனை எத்தனை நிகழ்வுகள்..அருமை கவிஞரே!! தொடர்ந்து வாருங்கள்...