PDA

View Full Version : அபசகுனப்பெயரில் ரஷ்ய விண்கலம்



அன்புரசிகன்
17-04-2008, 03:45 PM
ரஷ்ய விண்வெளிகலத்தின் பெயர் சகுனத்திற்காக அல்லது அதிஷ்டத்திற்காக மாற்றப்பட்டுள்ளது. அல்லது மாற்றப்படவிருக்கிறது.

இது சம்பந்தமாக அமீரகத்தில் வெளியாகும் ஒரு இலவச பத்திரிக்கையில் நேற்றுப்படித்தேன். (7days)

ரஷ்யர்கள் கறுப்புப்பூனை திங்கட்கிழமை மற்றும் இலக்கம் 13 ஆகியவற்றை அபசகுனம் அல்லது துர்ரதிஷ்டம் என கருதுவார்களாம்.

கடந்த மாதத்தில் தென்கொரிய விண்வெளிவீராங்கனை Yi So-Yeon என்பவர் Soyuz TMA-12 என்ற ரஷ்ய விண்கலத்தில் சென்றிருக்கிறார். அடுத்த விண்கலத்தின் பெயர் Soyuz TMA-13 என வரவேண்டும். அது அவர்களுக்கு காலம் காலமாக பின்பற்றிவரும் வழக்கப்படி துர்ரதிஷ்ட இலக்கமாக வருவதால் அதனை மாற்றுவது பற்றி பரிசீலனை செய்துவருகிறார்களாம்....

உண்மையிலேயே இது விந்தை உலகம் தான். எத்தகைய வியத்தகு விடையங்கள் நடந்தாலும் அங்கும் இவ்வாறான நம்பிக்கைகள் படர்ந்திருக்கிறது.

நன்றி: 7days பத்திரிக்கை, அமீரகம்.

விகடன்
18-04-2008, 09:11 AM
உண்மைதான் அன்பு,
இந்த ஜாதகங்களை நம்பாதவர்களும் பெரிய பெரிய விடயங்களில் இறங்கும்போது சாஸ்த்திரம், ஜாதகங்களையும் பார்த்துக்கொள்வது நியதிதான்.

சாஸ்த்திரம், ஜாதகங்கள் உண்மையாக இருந்துவிட்டாலும் பிற்காலத்தில் பிரச்சினை வராதல்லவா!!!

அதில் இவர்கள் ரஷ்யர்கள் வேறு. சாஸ்த்திரம் நாள் கோள் பார்ப்பது வழக்கமான பழக்கமாக உடையவர்கள்.

----------

போக இருக்கும் விண்கலம் இலக்கை சரியாக அடைந்துவிட்டால் சரி.