PDA

View Full Version : அழகுக்கு அழகூட்டும் அரோமா சிகிச்சைshibly591
17-04-2008, 09:33 AM
அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் இன்று பெண்கள் பலதரப்பட்ட முறையில் தமது தோற்றத்தை மாற்றி வருகின்றனர்.

சிறுவர்கள் முதல் பெரியோர் வரை தாம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக பல வழிகளில் முயற்சிப்பது மனித இயல்பு.

இந்த வகையில் சங்கமத்திற்காக நாம் அழகு சிகிச்சை குறித்து அறிவதற்கு அழகுக் கலை சிகிச்சைக் கலைஞர் திருமதி தெய்வானை முத்துசுவாமி அவர்களை அண்மையில் பம்பலப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.

அவர் எம்முடன் அழகு சிகிச்சை குறித்து மிகவும் தெளிவான விளக்கத்துடன் கலந்துரையாடினார்.

இவர் கடந்த 7 வருடங்களாக இந்த சிகிச்சையினை மேற்கொண்டு வருகிறார். தனது இந்த முயற்சிக்கு தனது குடும்பத்தினரது முழு ஒத்துழைப்பும் கிடைப்பதாகக் கூறினார்.

மேலும் அவர் இதுபற்றித் தெரிவிக்கையில்; சிறு வயதில் இருந்தே நான் தனியாக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் வளர்ந்து வந்தது. ஆனால், நான் கலைத்துறையில் எனது மேற்படிப்பை மேற்கொண்டேன் இருப்பினும், இறுதியாண்டுப் பரீட்சையை நிறைவு செய்ய முடியவில்லை. இதனால் எனக்கு அழகுக் கலையைக் கற்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. அப்போது தான் எனக்கு இந்தியாவில் இருக்க சந்தர்ப்பமும் கிடைத்தது.

எனவே, நான் இந்தியாவிலேயே இந்த அழகுக் கலையைக் கற்றேன்.

இருப்பினும் எல்லோருமே ஒரே மாதிரியான விடயங்களைக் கற்பதால் பயனில்லை என எண்ணி "அரோமா' சிகிச்சை முறைகளைக் கற்றுக் கொண்டேன். அதுவே எனக்குத் இப்போது பலவழிகளில் உதவியுள்ளது. நான் இப்போது எனக்கு தெரிந்த விடயங்களை எனது மாணவர்களுக்கும் மிகவும்

தெளிவான விளக்கத்துடன் கற்பித்து வருகின்றேன் என்றார். தாம் மேற்கொள்ளும் “"அரோமா' சிகிச்சை குறித்து அவர் மேலும் தந்த விளக்கம் வருமாறு "அரோமா சிகிச்சை' முறைமூலம் பெண்களின் பல பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன. முடி கொட்டுதல், பொடுகு பிரச்சினை போன்றவற்றிற்கெல்லாம் ஒரு தீர்வாகவே இந்த "அரோமா சிகிச்சை' முறை பயன்படுகின்றது. அரோமா எண்ணெயை நாம் இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியாது.

பூக்களில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறுடன் பல கலவைகள் சேர்த்து பெறப்படும் ஒரு சுத்தமான எண்ணெயைப் பாவித்தே இந்த அரோமா சிகிச்சையை மேற்கொள்கின்றோம். றோஸ், ஜெஸ்மின் போன்ற பல பூக்களை எடுப்பது மட்டுமன்றி செடி, வேர், தண்டு என அனைத்தையும் பயன்படுத்தியும் இதனைப் பெற்றுக் கொள்ளமுடியும். காமோன்ஸ், என்சைன் போன்றவற்றையும் வடிகட்டிப் பெறப்படும் எண்ணெய்களையும் இதற்குப் பயன்படுத்துகின்றோம். உதாரணமாக இரண்டு பக்கற் பூவினைப் போட்டு நாம் அதிலிருந்து இரண்டு மூன்று மில்லிலீற்றர் எண்ணெயினையே பெற்றுக் கொள்கின்றோம். இவை மருத்துவக் குணம் நிறைந்தவையாகக் காணப்படுகின்றது.

அரோமா என்பது மனம், உடல், செயல் மூன்றிலும் செயற்படக்கூடிய பழங்காலத்து முறையாகும். இந்த அரோமாவானது இறந்த உடல்கள் சிதைவு படாமல் இருப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. பழங்காலத்தில் அரசர்களின் உடல்களை நீண்ட கõலத்திற்கு பழுதடையாமல் பாதுகாப்பதற்கு இந்த அரோமா எண்ணெயையே பாவித்ததாக வரலாறுகள் கூறுகின்றன. உலக அழகியான கிளியோபற்ரா அரோமா எண்ணெகளையே பயன்படுத்தியதாகக் கூறப்படுகின்றது. இதனை ஆயுள்வேதமா என சிலர் எண்ணலாம் . இல்லவே இல்லை. ஆயுள் ÷வதமுறையானது மூலிகைகளை நேரடியாக எண்ணெயில் காய்ச்சுவதன் மூலம் பெறப்படுகின்றது. ஆனால், இந்த அரோமா சிகிச்சை என்பது வேறுபட்டது. பெண்களில் பலர் கூறுவர் முடி வளர்வதில்லை, முடி கொட்டுகின்றது,

பொடுகுப் பிரச்சினை எனப் பல பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே போவர். இவற்றிற்கு பல காரணங்கள் உண்டு. அதாவது பரம்பரைப் பிரச்சினையாகவோ மனஅழுத்தம், சமபோஷாக்கின்மை, உடல் சூடாக இருத்தல், தலைக்கு அளவுக்கதிகமான சோடனைப் பொருட்களைப் பயன்படுத்தல், (உதாரணமாக தலைமுடிக்குப் பயன்படுத்தப் படும் "டை'

தரம்குறைந்ததாக இருக்கலாம்; ஷம்போ வித்தியாசமானதாக இருக்கலாம்), சில நோய்க்காக எடுக்கப்பட்ட குளிசைகள் பொருந்தாமை எனப் பல காரணங்கள் உண்டு. இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யவே இந்த அழகுக் கலை சிகிச்சை முறைகள் உதவுகின்றன. இன்றைய விஞ்ஞான யுகத்தில் பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகவே பலர் பல ஆய்வுகளை மேற்கொண்டு பல இயந்திரங்கள், கிறீம்கள், எண்ணைய்கள் எனப்பலவற்றைக் கண்டுபிடித்து உதவியுள்ளனர். அவற்றை நாம் சரியான முறையில் பயன்படுத்தக் கற்றுக் கொண்டாலே போதுமானதாகும். 100இற்கும் மேற்பட்ட "அரோமா' எண்ணெய்கள் உண்டு. இவை நரம்புகளைத் தூண்டிவிடும் சக்தியைப் பெற்றுள்ளன. இவ்வகையான எண்ணெய்களை சரியான முறையில் கலந்து தேய்த்து பயன்படுத்தும் போது மறதி, தலையிடி, கை, கால்வலி, முகப்பருக்கள் போன்றவற்றைத் தீர்க்கின்றது. உதாரணமாக மறதி எனின் றோஸ்மேரி என்ற எண்ணெயினைப் பயன்படுத்திக் கொண்டால் பலனைப் பெறலாம். சிலருக்கு உடம்பு பூராக முடி வளரும் நிலை உண்டு. சில பெண்களுக்கு தாடி, மேலுதடு போன்றவற்றில் முடி வளரும் நிலை உண்டு. இவற்றிற்கெல்லாம் காரணம் சுரப்பிகள் சமநிலையில் இல்லாமையேயாகும். இதற்கு இப்பொழுது Microlysis Treatment மூலம் இவற்றை நிவர்த்தி செய்யக்கூடியதாக உள்ளது. இப்பொழுது பல பெண்கள் வேலைக்குச் செல்கிறார்கள் இதனால், தமது தோற்றத்தை நவீனப் படுத்த தலைமுடிக்குiUS Hair Straightening, Hair Dye, Hair Colouring & Hair cuts எனப் பலவற்றை செய்கிறார்கள். இதனால் சிலருக்கு மூலக்கூறுகளில் சிதைவு ஏற்படுகின்றது, முடியில் வறட்சித் தன்மை தோன்றுகின்றது. இதற்கு Skin White|ning போன்ற பலவகை சிகிச்சைகள் உண்டு. பொடுகு ஏற்படுவதற்கு காரணம் பொதுவாக ஒவ்வொருவருடைய உடலிலும் பற்றீரியாக்கள் உண்டு. அவை தூங்கும் நிலையில் இருக்கும். இப்பற்றீரியாவானது 30 நாளில் செல்ஸ்ஆக உற்பத்தியாகி மேல் நோக்கி வருகிறது. அதுவே படைபடையாக வெளியே வரும். எமது உடலிற்கு பக்றீரியாவிற்கு ஏற்ற உணவுகள் கிடைக்கும் போது அவை கூடுதலாக பெருகி பொடுகாக வெளியேறுகின்றது. இதற்கு Spa Treatment ஒயில் போன்ற எண்ணையுடன் வேறு சில எண்ணெகளைக் கலந்து பயன்படுத்தும் போது நல்ல பயனைத் தரலாம். இந்த அரோமா இலகுவாக இரத்தத்துடன் கலக்கக் கூடியது. இந்த எண்ணெயினை மசாஜ் செய்யும் போது அவை உட்சென்று வளர்ச்சிக்கான போஷாக்கைக் கொடுக்கின்றது. ÷மற்கூறப்பட்ட பிரச்சினைகள் அனைத்திலிருந்தும் விடுபட வேண்டுமாயின் அதற்கு போஷாக்கான உணவுகளை உண்ண வேண்டும். அதாவது விற்றமின் அ, விற்றமின் ஆ, புரோட்டின், அயன், கொப்பர் போன்றவற்றைப் பாவிக்க வேண்டும். அழகு நிலையங்களை நாடி ஈதூஞு போன்றவற்றை செய்வோர் அழகு நிலையங்களில் பயன்படுத்திய பொருட்களின் Brand ஐக் கேட்டு அதற்கேற்ப பின்பற்ற வேண்டும். முடியை நன்றாகக் கழுவி உலரவைக்க வேண்டும். வாரத்திற்கு ஒரு முறையாவது எண்ணைய் தேய்த்து முழுக வேண்டும். அதனுடன் கருவேப்பிலை அரைத்து தேங்காய்ப்பாலைக் கலந்து பேக்காக ( (pack) வைத்து முழுகலாம். உணவிலும் கருவேப்பிலை, பொன்னாங்காணி, நெல்லிக்காய் மற்றும் வெள்ளரிக்காய், வெங்காயம் மற்றும் சிறியமீன், சோயா போன்றவற்றை உண்பதால் முடி உதிர்தலைத் தவிர்க்கலாம். ஷம்போவுடன் கென்டிஷனரை சேர்த்து வைத்து முழுகி வந்தால் தலைமுடியில் வித்தியாசத்தை உணர்வீர்கள். அநேகமாக அனைவருக்கும் இது உகந்ததாகவே இருக்கும். நாங்கள் சிகிச்சை செய்வதற்கு முன்னர் உள்ள, பின்னர் உள்ள காலத்தைக் கேட்டு சரியான காரணத்தினைப் பெற்றுக் கொண்ட பின்னரே அவர்களுக்கேற்ற வகையில் சிகிச்சை செய்கின்றோம். முகத்தில் அழகான தோற்றம் பெறுவதற்கு Skin White|ning எனும் முறையைப் பயன்படுத்தலாம். இதன் அடிப்படை மூலப்பொருட்கள் மீண்டும் மூலிகைகளில் இருந்தே தொடங்குகின்றது. லிக்கோரிக் (Licoric), கோயிக் (cojic), குங்குமப்பூ, சவ்றோ (Saffro), விற்றமின் உ போன்றவை கிறீமாக உள்ளது. இவற்றை உபயோகித்து பல பிரச்சினைகளை நிவர்த்தி செய்யலாம். 35 வயதிற்குப் பின்னர் சுரப்பிகள் வேலை செய்வது சிறிது சிறிதாகக் குறையும் கொலோயின் குறையும். இதனால், முகம் தொங்கப் பார்க்கும் கைகால் சுருக்கம் இதற்கு பரப்பின் வக்ஸ் சிகிச்சை செய்யலாம். இளம் வயதுடைய பெண்களுக்கு பருத் தழும்புகள் பெரும் தலையிடியாகவே இருக்கின்றது. அதற்கு Peeling Treatment உண்டு. தரமான பவுடர், லிப்ஸ்ரிக் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் ஆனால், நித்திரைக்கு போகும் முன் மேக்கப் முழுவதையும் முழுமையாக கலைக்க வேண்டும். Daily Skin care அவசியம். அதிகமான எண்ணெய்த் தன்மையோ வறண்ட தன்மையோ இருக்கலாம். இதற்கு நாம் Skin care இல் முக்கியத்துவம் செலுத்த வேண்டும். தரமான பொருட்களைக் கொண்டு, சரியான இயந்திர உபகரணங்களைக் கொண்டு, சரியான நேர அளவுப்படி முறையான மசாஜ் செய்யும் போது மிகச்சிறந்த பயனைப் பெறலாம். விஞ்ஞான வளர்ச்சி, மூலிகைக் கலாசாரம் ஆக்கத்திறன் மூன்றையும் சேர்த்து நல்ல பலன்களைப் பெறக் கூடியதாக உள்ளது என்றார்.

நன்றி-வீரகேசரி

அனுராகவன்
20-04-2008, 05:06 AM
நன்றி சிப்லி அவர்களே!!
நல்ல குறிப்புக்கள்..
நன்றாக உள்ளது உங்கள் தமிழ் வார்த்தைகள்..