PDA

View Full Version : சீட்டுக்கட்டில் வேதியியல் பாடம்: சிறுவன் திரட்டுகிறார் ரூ. 20 கோடி



shibly591
17-04-2008, 09:31 AM
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சிறுவன், தனது 14வது வயதிலேயே தொழிலதிபராகி உள்ளான். தனது வியாபாரத்துக்காக ரூ. 20 கோடி நிதி திரட்ட திட்டமிட்டுள்ளான்.

சிறுவன் அன்சுல் சமரின் பெற்றோர் அமெரிக்காவில் குடியேறி 21 ஆண்டுகளாகிறது. அன்சுல் சமர் அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்தான். சீட்டுக்கட்டு மூலம், வேதியியல் குறித்து பாடம் புகட்டும் வகையிலான, புதுவித பட திட்டத்தை இவன் கண்டுபிடித்துள்ளான். இந்த விளையாட்டுக்கு இருவர் தேவை. மொத்தம் 121 சீட்டுகள் இருக்கும். எதிராளியின் சீட்டுகள் தீரும் வரை இந்த விளையாட்டை விளையாடலாம். தனது விளையாட்டு கண்டுபிடிப்பை, அனைவரும் அறியும் வகையில், வர்த்தக ரீதியாக வியாபாரம் செய்ய அன்சுல் முடிவு செய்துள்ளான்.

இதற்காக அல்கெமிஸ்ட் எம்பையர் என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளான். இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் அன்சுல் தான். தனது வியாபாரம் குறித்து, வக்கீல்கள், வரைபட ஓவியர்கள், இன்ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்களுடன் தீவிரமாக விவாதித்து வருகிறான். தனக்கு பரிசாக கிடைத்த ரூ. 20 ஆயிரத்தில், இந்த வியாபாரத்தை துவக்கினான். தற்போது, ரூ. 20 கோடி நிதியில், அமெரிக்கா மட்டுமின்றி சர்வதேச அளவில், வேதியியல் விளையாட்டு சீட்டுக்கட்டுகளை சப்ளை செய்ய திட்டமிட்டுள்ளான். சீட்டுக்கட்டுகளில், ரசாயனம், வேதியியல் சேர்க்கை, ரசாயன சேர்மம் போன்றவை இடம் பெற்றிருக்கும். வேதியியலை முழுமையாக, அதே நேரம் விளையாட்டாக அறிந்து கொள்ள இந்த முறை மிகசிறப்பானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி-வீரகேசரி

சுகந்தப்ரீதன்
17-04-2008, 09:46 AM
ம்ம்ம்ம்.... நல்ல செய்தி...!!

14 வயதில் தொழிலதிபரான அந்த சிறுவனுக்கு வாழ்த்துக்கள்..!!